தெறி (திரைப்படம்)
தெறி (Theri) 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடித்துள்ளனர்.[3] அட்லீ இயக்கிய இத்திரைப்படத்தை கலைப்புலி எசு. தாணு தயாரித்தார்.[4] இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார்.[5] இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில் நடிகை சமந்தா தனது சொந்தக்குரலிலேயே வசனம் பேசியுள்ளார். ref>http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=3635</ref>
தெறி | |
---|---|
![]() | |
இயக்கம் | அட்லீ |
தயாரிப்பு | கலைப்புலி எசு. தாணு |
கதை | அட்லீ |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | விஜய் ஏமி ஜாக்சன் சமந்தா ராதிகா சரத்குமார் பிரபு |
ஒளிப்பதிவு | ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் |
படத்தொகுப்பு | ஆண்டனி எல். ரூபன் |
கலையகம் | வி. கிரியேசன்சு |
விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 2016[1] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹65 கோடி (US$9.17 மில்லியன்)[2] |
மொத்த வருவாய் | ₹158 கோடி (US$22.28 மில்லியன்) |
நடிகர்கள்
- விஜய் - விஜய் குமார் மற்றும் ஜோசெப் குருவில்லா
- ஏமி ஜாக்சன் - அனி
- சமந்தா - மித்ரா
- பிரபு
- ராதிகா சரத்குமார்[3]
- மகேந்திரன்[6]
- ராஜேந்திரன்
- நைனிகா
- சுனைனா(சிறப்புத் தோற்றம்)
- ஸ்ரீ குமார் (சிறப்புத் தோற்றம்)
தயாரிப்பு
இத்திரைப்படத்தை கலைப்புலி. எஸ்.தாணு தயாரித்துள்ளார்..
மேற்கோள்கள்
- Maggie Davis (2015 நவம்பர் 26). "Theri poster: Vijay all set to impress his fans in triple avatar Theri slated to release on January 14, 2016". India. பார்த்த நாள் 2015 நவம்பர் 27.
- Nicy V. P (2015 சூன் 30). "Atlee's 'Vijay 59' to be Made with a Budget of ₹65 Crore". International Business Times. பார்த்த நாள் 2015 நவம்பர் 27.
- DN (2015 நவம்பர் 25). "விஜய்-அட்லீ பட டைட்டில், முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!". தினமணி. பார்த்த நாள் 2015 நவம்பர் 27.
- "விஜய்யின் புதிய படம் ‘தெறி’". மாலைச்சுடர் (2015 நவம்பர் 26). பார்த்த நாள் 2015 நவம்பர் 27.
- ஸ்கிரீனன் (2015 நவம்பர் 25). "விஜய்-அட்லீ படத்துக்கு தலைப்பு 'தெறி'". தி இந்து. பார்த்த நாள் 2015 நவம்பர் 27.
- "பாகுபலி'யுடன் கனெக்ஷன் ஆகும் விஜய்யின் 'தெறி'". IndiaGlitz (2015 நவம்பர் 26). பார்த்த நாள் 2015 நவம்பர் 27.
- "எஸ். தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் 59வது படத்தின் பெயர், ’தெறி’". தினத்தந்தி (2015 நவம்பர் 25). பார்த்த நாள் 2015 நவம்பர் 27.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.