தெய்வ நெறிக் கழகம்

தெய்வ நெறிக் கழகம் (Divine Life Society) சுவாமி சிவானந்தரால் 1936 ஆம் ஆண்டு இந்தியாவின் ரிசிகேசத்தில் தொடங்கப்பெற்றது. தற்போது இதன் கிளைகள் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ஆன்மிகப்பணி செய்துவருகிறது. மேலும் சுவாமி சிவனந்தரின் சீடர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பல்வேறு கண்டங்களில் சுயமாக ஆன்மிக தொண்டு செய்து வருகிறார்கள்.[1][2][3]

உருவாக்கம்1936
நிறுவனர்சுவாமி சிவானந்தர்
வகைஆன்மிக நிறுவனம்
சட்ட நிலைதொண்டு நிறுவனம்
நோக்கம்கல்வி, ஆன்மிகப்பயிலகம், ஆன்மிகம்
தலைமையகம்ரிஷிகேஷ், உத்தரகாண்ட், இந்தியா
அமைவிடம்
  • 300 கிளைகள்
சேவைப் பகுதிஉலகளாவியது
வலைத்தளம்www.dlshq.org

நோக்கம்

பின்வரும் வழிகளில் ஆன்மிகத்தை பரப்புவது

  • புத்தகங்கள், நாளிதழ்கள் வாயிலாக
  • ஆன்மிக கலந்துரையாடல்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள் மூலமாக
  • யோகா மற்றும் வேதங்கள் கற்றுக்கொடுப்பதின் மூலமாக
  • தொண்டு நிறுவனங்கள் புதிதாய் தொடங்குவது மூலமாக
  • பழைய பண்பாடு மற்றும் கலாச்சாரம் பாதுகாப்பதின் மூலமாக

வரலாறு

சுவாமி சிவானந்தர் 1936 ஆம் ஆண்டு தனது ஆன்மிகச்சுற்றுலாவை முடித்துக்கொண்டு இந்தியாவின் ரிஷிகேஷத்தில் ஒரு குடிலில் முதன்முதலாக தெய்வ நெறிக் கழகத்தை தொடக்கச்செய்தார். தெஹ்ரி கரவாலின் அரசர், கழகம் நிறுவ ஒரு காணி இடத்தை நன்கொடையாக சுவாமி சிவானந்தருக்கு கொடுத்து உதவினார். கழகத்தின் தலைமையகம் இந்த இடத்தில இருந்து அன்றுமுதல் இன்றுவரை பெரிய தொண்டுநிறுவனமாக உருப்பெற்று ஆன்மிகச்சேவை ஆற்றிவருகிறது.

துறைகள்

  • சிவானந்த ஆசிரமம் - தெய்வ நெறிக் கழகத்தின் தலைமையிடம்.
  • யோகா வேதாந்தா அகாடமி - யோகா தனிமனித ஒழுக்கத்திற்கும், மனிதகுல நல் வாழ்விற்கும் பயிற்றுவிக்கும் இடமாக திகழ்கிறது.
  • சிவானந்த பதிப்பகம் - தெய்வ நெறிக் கழகத்தின் பதிப்பகமாகும்.
  • இலக்கிய பிரிவு - ஆன்மிகம் மற்றும் இலக்கிய சம்பந்தமான இலவச புத்தகங்கள் கொடுத்து உதவுகிறது.
  • சிவானந்த மருத்துவமனை - இலவச மருத்துவ சேவை செய்கிறது.

கிளைகள்

இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பல்வேறுநாடுகளில் கிளைகள்உள்ளது.

மேற்கோள்கள்

  1. Divine Life Society Britannica.com
  2. Divine Life Society Divine enterprise: Gurus and the Hindu Nationalist Movement, by Lise McKean. University of Chicago Press, 1996. ISBN 0-226-56009-0. Page 164=165.
  3. Swami Shivananda Religion and anthropology: a critical introduction, by Brian Morris. Cambridge University Press, 2006. ISBN 0-521-85241-2. Page 144.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.