சிவானந்தர்

சுவாமி சிவானந்தர்: ரிசிகேசத்தில் வாழ்ந்த ஓர் இந்து சமய அத்வைத வேதாந்த குரு ஆவார். அவர் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

மருத்துவப் படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை நிறைய செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில ஆண்டுகளில் ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவப் பணியைத் துறந்து இந்தியா திரும்பி, கடுமையான தவத்திற்குப் பிறகு ரிஷிகேசத்தில் தெய்வ நெறிக் கழகம் (Divine Life Society) என்ற ஆசிரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் தன்னுடைய கருத்துக்களை சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாகவும், மற்றும் சுற்றுபயணங்கள் மூலமாகவும் பரப்பினார்.

இவர் 1964 ஆம் ஆண்டு காலமானார். சுவாமி சிவானந்தர் நிறுவிய தெய்வ நெறிக் கழகம், சுவாமிஜி விட்டு சென்ற ஆன்மீக பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

வெளி இணைப்புகள்

தெய்வ நெறி கழகம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.