தெணியான்
தெணியான் என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் (பிறப்பு: சனவரி 6, 1942) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்.
தெணியான் | |
---|---|
![]() | |
பிறப்பு | கந்தையா நடேசன் சனவரி 6, 1942 பொலிகண்டி, |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
எழுத்துப்பணி
ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் விவேகியில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார்.
இவரது நூல்கள்
சிறுகதைத் தொகுதிகள்
- சொத்து (1984)
- மாத்து வேட்டி (1990)
- இன்னொரு புதிய கோணம்
- ஒடுக்கப்பட்டவர்கள்
- தெணியானின் ஜீவநதிச் சிறுகதைகள் (2013)
புதினங்கள்
- விடிவை நோக்கி (வீரகேசரிப் பிரசுரம், 1973)
- கழுகுகள் (1981)
- பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (1989)
- மரக்கொக்கு (வெளியீடு: நான்காவது பரிமாணம், கனடா, (1994)
- காத்திருப்பு (1999)
- கானலில் மான் (2002)
- தவறிப்போனவன் கதை
குறும் புதினங்கள்
- சிதைவுகள் (2003) வெளியீடு: மீரா பதிப்பகம் கொழும்பு)
- பனையின் நிழல்
கட்டுரைத் தொகுதிகள்
- இன்னும் சொல்லாதவை
- நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி
விருதுகள்
- கலாபூஷணம் விருது
- இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு
- கு. சின்னப்ப பாரதி அறக்கொடை விருது
- கொடகே விருது
- ஆளுனர் விருது
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.