துளு நாடு

துளு நாடு கர்நாடகா மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களான உடுப்பி மாவட்டம் மற்றும் தெற்கு கன்னடம் மாவட்டங்களை உள்ளடக்கியது. முன்னர் இது சேரநாட்டின் வடமேற்கில் அமைந்திருந்ததாகவும், கோசர் என்னும் அரசர்கள் இந்நாட்டை ஆண்டதாகவும் மாமூலனார் அகப்பாடல் கூறுகிறது.அகம் 15 இந்த கோசரே குடகக்கொங்கர், கொங்கிளங்கோசர் சிலம்பு 30 : 159 என்றும் அழைக்கப்படுவதால் இந்நாடு குடகுநாட்டையும் கொங்கு நாட்டையும் அண்டியிருந்ததாக தெரிகிறது.

தற்போது துளு மொழி பேசப்படும் பகுதி- துளுநாடு (மஞ்சள் நிறம்).

துளுநாட்டில் கோசர் குடிமக்கள் வாழ்ந்தனர். அவர்கள் அந்நாட்டு வழியாகச் செல்பவர்களைப் பேணி விருந்தளித்துப் பாதுகாப்பர். துளுநாட்டில் மயில்கள் மிகுதி.[1]

இந்தச் செம்மற் கோசர் அக்காலத்தில் தமிழும் பேசத் தெரிந்த நான்மொழிக் கோசர்.

இது சங்ககால நிலைமை. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலுக்கு 16ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய மயிலைநாதர் தமிழ் பேசப்படாத நிலங்கள் 17 என நன்னூல் நூற்பாவின் வழி சுட்டி அவை இவை எனப் பெயர் சொல்லிக் காட்டும்போது இந்தத் துளு நாட்டையும் குறிப்பிடுகிறார். [2]

அடிக்குறிப்பு

  1. மெயம்மலி பெரும்பூண் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாகல் ஆர்கைம் பறைக்கண் பீலித் தோகைக்காவின் துளுநாடு அன்ன வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின் செறிந்த சேரிச் செம்மல் மூதூர் – மாமூலனார் பாடல் அகநானூறு 15
  2. நன்னூல் 272 மயிலைநாதர் உரை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.