து. உருத்திரமூர்த்தி

துரைசாமி உருத்திரமூர்த்தி (அளவெட்டி, யாழ்ப்பாணம்) (சனவரி 9, 1927 - சூன் 20, 1971) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் மஹாகவி என்ற புனைபெயரில் எழுதியவர். இவரது ஏனைய புனைபெயர்கள் - பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் என்பனவாகும். நீலாவணன், முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.

மஹாகவி உருத்திரமூர்த்தி
பிறப்புதுரைசாமி உருத்திரமூர்த்தி
சனவரி 9, 1927(1927-01-09)
அளவெட்டி, இலங்கை
இறப்பு20 சூன் 1971(1971-06-20) (அகவை 44)
கொழும்பு, இலங்கை
கல்விஎஸ்.எஸ்.சி.(ஆங்கில மொழி மூலம்)
பணிஉதவி ஆணையாளர், அரசகரும மொழித் திணைக்களம், கொழும்பு
அறியப்படுவதுகவிஞர்
வாழ்க்கைத்
துணை
பத்மாசினி முத்தையா (ஆகஸ்ட் 30, 1954)
பிள்ளைகள்பாண்டியன்
சேரன்
சோழன்
இனியாள்
ஔவை

வாழ்க்கை

துரைசாமி உருத்திரமூர்த்தி ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'மஹாகவி உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார்

ஆகஸ்ட் 30, 1954ல் பத்மாசினி முத்தையா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகன் சேரன் ஒரு புகழ்பெற்ற கவிஞன் ஆவார்.

நவம்பர் 20, 1945 ல் கொழும்பு திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து திருக்கோணமலை கடற்படை அலுவலகத்திலும், பின்னர் கொழும்பு குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, 1967ல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம் பெற்று, பின்னர் யாழ்ப்பாண மாவட்டக் காணி அதிகாரி (1968-1969), மட்டக்களப்பு அரச செயலகத் துணைவர் (1970) ஆகிய பதவிகளை வகித்து, 1971ல் கொழும்பு அரசகரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார்.

மஹாகவியின் காவியங்கள்

  • கல்லழகி எழுதப்பட்டது டிசம்பர் 1959. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.
  • சடங்கு எழுதப்பட்டது 1961 இறுதியாக இருக்க வேண்டும். 1962 ஜனவரி முதல் தினகரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
  • தகனம் 1962ல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு தேனருவி சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.
  • ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் சுதந்திரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1971ல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.
  • கண்மணியாள் காதை எழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967ல் விவேகியில் (அதே பெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968ல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது.
  • கந்தப்ப சபதம் எழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.

இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள்

  • வள்ளி ('மஹாகவி' கவிதைகள்), முதற்பதிப்பு: ஆடி 1955, வரதர் வெளியீடு, விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசதுறை வீதி, யாழ்ப்பாணம்.
  • மஹாகவியின் குறும்பா முதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966, அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு- 13.
  • மஹாகவியின் கண்மணியாள் காதை, (வில்லுப்பாட்டு) எழுதியது: நவம்பர் 1966
    • முதல் வானொலி ஒலிபரப்பியது: மே 1967
    • முதல் மேடையேற்றியது: டிசம்பர் 1967 - கலைஞர் லடிஸ் வீரமணி
    • முதல் அச்சேற்றியது: நவம்பர் 1968, அன்னை வெளியீட்டகம், 89/1, கோவில் வீதி யாழ்ப்பாணம்.
  • மஹாகவியின் கோடை(பா நாடகம்)
    • எழுதியது: பெப்ரவரி 1966
    • முதல் மேடையேற்றம்: ஓகஸ்ட் 1969 - நாடகர் தாசிசியஸ் இயக்கத்தில்
    • முதல் பதிப்பு: செப்டெம்பர் 1970
    • இரண்டாம் பதிப்பு: நவம்பர் 1988
    • மூன்றாம் பதிப்பு: ஜூன் 1990
    • வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
  • ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1971)
  • வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூன் 1973, வாசகர் சங்கம், 'நூறிமன்சில்', கல்முனை- 6
  • மஹாகவியின் இரண்டு காவியங்கள்
    • கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம்
    • சடங்கு
      • முதற்பதிப்பு: ஜூலை 1974
      • பதிப்பாசிரியர்: டாக்டர் சாலை இளந்திரையன், தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி-7.

பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1.

  • மஹாகவி கவிதைகள் (1984)
  • புதியதொரு வீடு (1989)
    • முதல் மேடையேற்றம்- நாடகர் தாசீசியஸ் இயக்கத்தில்
  • மஹாகவியின் ஆறு காவியங்கள்
    • கல்லழகி
    • சடங்கு
    • ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்
    • கண்மணியாள் காதை
    • கந்தப்ப சபதம்
    • தகனம்
      • முதற்பதிப்பு: மார்ச் 2000
      • வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
      • பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
  • மஹாகவியின் மூன்று நாடகங்கள்
    • கோடை
    • புதியதொரு வீடு
    • முற்றிற்று
      • முதற்பதிப்பு: ஜூன் 2000
      • வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஸன்
      • பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான்
  • பொருள் நூறு
    • நூறு குறும்பாக் கவிதைகள்
      • முதற்பதிப்பு: அக்டோபர் 2008
      • வெளியீடு: மித்ர வெளியீடு, சென்னை
      • பதிப்பாசிரியர்: எஸ்பொ

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.