துரை வையாபுரி

கோபால்சாமி துரை வையாபுரி என்பவர் மதிமுக தலைவர் வை. கோபால்சாமியின் மகனாவார்.[4][5][6] இவர் மதிமுக கட்சியின் முக்கியத் தேர்தல் பரப்புரையாளர்களில் ஒருவர்.[7] மதிமுக கட்சியின் இணையத்தளப் பிரிவிலும் இயங்கி வருபவர்.[8][9] 2014 இந்தியப் பொதுத் தேர்தலின் போது பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாகவும்[10] தே.மு.தி.க. கட்சிக்கு ஆதரவாகவும்[11] தேர்தல் பரப்புரையில் இறங்கியவர். இவர் 2014இல் பட்டாசு தொடர்பாக இந்திய மத்திய அரசு விடுத்த புதிய சட்டத்தை எதிர்த்து, சிவகாசியில் உந்துருளி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.[12] இவர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை ஆற்றினார்.[13]

துரை வையாபுரி
பிறப்பு1972
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்வைகோ
வாழ்க்கைத்
துணை
கீதா[1]
பிள்ளைகள்வருண்,[2][3] வானதிரேணு

இவர் "இந்திய புகையிலை குழுமம்" என்னும் நிறுவனத்தில் பங்குத்தொகை வைத்திருக்கிறார்.[14] இந்த பங்குத்தொகை விவகாரம் மதிமுகவின் எதிர்த்தரப்புக் கட்சிக்காரர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.[15][16] மேலும் இவர் வீ இரியாலிட்டி (V Realty) தனியார் வரையறுக்கப்பட்டது என்ற நிறுவனத்துக்கு இயக்குநராகவும் உள்ளார்.[17]

மேற்கோள்கள்

  1. http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5187&ncat=18&Print=1
  2. தினமலர், 19 சூன் 2015, பக்கம் 4
  3. http://tamil.oneindia.com/news/india/vaiko-s-grandsons-is-now-tennis-champion-187728.html
  4. http://timesofindia.indiatimes.com/home/sunday-times/Shooting-from-the-lip/articleshow/17266904.cms
  5. http://mdmk.org.in/member/mr-vaiko
  6. http://mdmk.org.in/ta/article/apr14/press-release-2
  7. http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-s-son-political-limelight-door-door-canvass-lse-198728.html
  8. "List of Star Campaingers". Election commission of India. பார்த்த நாள் 6 August 2015.
  9. "l6th LokSabha- Election Campaign". MDMK.
  10. http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-wave-viruthunagar-constituency-says-vaiko-son-durai-vaiyapuri-lse-198614.html
  11. வைகோ மகன் துரை வையாபுரி பேச்சு
  12. "வைகோ மகன் துரை வையாபுரி பேச்சு; பதவியில் இல்லாத போதும் மக்களுக்காகவே உழைப்பு". தினமலர். பார்த்த நாள் 2015 ஆகத்து 14.
  13. http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-son-campaign-at-kovilpatti-252837.html
  14. My Son is a Distributor for Tobacco Products - Smoking Is Not Harm As Alcohol - Vaiko Getting Angry
  15. ஆமாம்..என் மகன் புகையிலை கம்பெனி நடத்துவது உண்மை தான்... அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு வைகோ பதில்
  16. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Skeletons-in-Prohibition-Megaphones-closet/2015/08/04/article2956613.ece
  17. https://www.zaubacorp.com/director/GOPALSAMY-DURAI-VAIYAPURI/01723028
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.