துருஸ்மாடி மலை

துருஸ்மாடி மலை (மலாய் மொழி: Gunung Trusmadi; ஆங்கிலம்: Mount Trusmadi) என்பது மலேசியாவில் இரண்டாவது உயர்ந்த மலையாகும். இது சபா, தம்புனான் மாவட்டத்தில், தம்புனான் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மலேசியாவில் மிக உயர்ந்த மலையான கினபாலு மலைக்கு அருகாமையில் இருக்கும் இந்த மலையின் உயரம் 2,642 மீட்டர், (8,669 அடி).[1]

துருஸ்மாடி மலை
Gunung Trusmadi
உயர்ந்த இடம்
உயரம்2,642 m (8,668 ft)
ஆள்கூறு5°33′N 116°31′E
புவியியல்
அமைவிடம்சபா, போர்னியோ
மலைத்தொடர்துருஸ்மாடி மலைத்தொடர்
Climbing
Easiest routeதம்புனான் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவு
சபா மாநிலத்தில் தம்புனான் மாவட்டம்

துருஸ்மாடி மலை, தனித்தன்மை வாய்ந்த பல தாவர விலங்கினங்களுக்கு புகலிடமாக விளங்கி வருகிறது. அவற்றில் pitcher plant எனும் கெண்டி தாவரங்கள் பிரசித்தி பெற்றவை.[2] பெரிய இலைக் குப்பி என்று அழைக்கப்படும் Nepenthes macrophylla எனும் தாவரம் துருஸ்மாடி மலையில் மட்டுமே காணப்படுகிறது.[3]

இங்கேதான் துருஸ்மாடியென்சிஸ் எனும் அரிதான தாவரம் இருக்கிறது. துருஸ்மாடி எனும் பெயரில் இருந்து அந்தத் தாவரத்திற்கு துருஸ்மாடியென்சிஸ் எனும் பெயர் வைக்கப்பட்டது.[4] இதன் மலைப்பாதைகள் மிகவும் கரடு முரடானவை. கினபாலு மலையை விட 1,453 மீட்டர்கள் உயரம் குறைவாக இருந்தாலும், இதில் ஏறுவது மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிறது.[5]

துருஸ்மாடி வனங்காப்பகம்

துருஸ்மாடி வனங்காப்பகம் ரானாவ். தம்புனான், கெனிங்காவ் மாவட்டங்களின் எல்லையில் அமைந்து இருக்கிறது. அதில் ஒரு பகுதிதான் சபா வன நிர்வாகப் பிரிவின் கீழ் வருகிறது. துருஸ்மாடி வனங்காப்பகத்தைச் சபா வன நிர்வாகப் பிரிவு என்று அழைப்பது உண்டு.[6] துருஸ்மாடி வனங் காப்பகம் தாவரவியலாளர்கள் ஆய்வுகள் செய்வதற்கு பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. இதுவரை 600 வகையான தாவர இனங்கள் அடையாலம் காணப்பட்டு உள்ளன.

இந்த வனங்காப்பகத்தைச் சுற்றிய பகுதிகளில் காட்டு மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.[7]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.