துருவ நட்சத்திரம் (2018 திரைப்படம்)

துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram), கௌதம் மேனனின் இயக்கத்தில்[1], கௌதம் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, செந்தில் வீராசாமி, பி. மதன் ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம்.. இத்திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் மனோஜ் பரமஹம்சாவின், ஜோமன் டி. ஜான், சந்தான கிருட்டிணன், இரவிச்சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவிலும், ஹாரிஸ் ஜயராஜின் இசையிலும், பிரவீண் ஆண்டனியின் படத்தொகுப்பிலும், 18, மே 2018இல் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 2017 இல் தொடங்கப்பட்டது. இப்படம் ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.[2]

'துருவ நட்சத்திரம்'
இயக்கம்கௌதம் மேனன்
தயாரிப்புகௌதம் மேனன்
வெங்கட் சோமசுந்தரம்
ரேஷ்மா கட்டாலா
செந்தில் வீராசாமி
பி. மதன்
கதைகௌதம் மேனன்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுமனோஜ் பரமஹம்சா
ஜோமன் டி. ஜான்
சந்தான கிருட்டிணன்
இரவிச்சந்திரன்
படத்தொகுப்புடி. எஸ். சுரேஸ்
கலையகம்ஒன்றாகக் கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடு25 மே 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

படப்பணிகள்

இப்படத்தின் திரைத்துளிக்கான காட்சிகளை நியூயார்க் நகரத்தில் படமாக்கப்பட்ட பிறகு 2017 சனவரியல் முதற்கட்டப்படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் குன்னூருக்குச்சென்றனர். குன்னூர் நகரத்தில் சிறிய அளவில் படப்பிடப்பை நடத்திய பிறகு படக்குழுவினர் எஞ்சியுள்ள படப்பிடிப்பிற்காக சென்னைக்குச்சென்றனர்.[3][4] துருக்கியின் எல்லைப்பகுதியில் 24 மணிநேரமாக ஆவணங்களில் ஏற்பட்ட சிக்கலால் சிக்கிய துருவ நட்சத்திரம் படக்குழுவினரின் சிக்கலை இயக்குநர் எளிதாக தீர்த்தார்.[5]

இசை

இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்து வருகின்றார்.

சான்றுகள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.