துரித உணவு

புரதம், விட்டமின் , கனிச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறைத்துள்ளது தேசிய சத்துணவுக் கழகம்.

துரித உணவு என்றால் என்ன?

துரித உணவு அறிமுகம் ஏன்? துரித உணவுகளினால் தான் தொற்றுநோய் அல்லாத நீரழிவு, இருதய நோய்கள், புற்று நோய்கள், பற்களில் வரும் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுக்களில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் (முன்கழுத்து கழலை, தைராயிட்) போன்றவை வருகின்றன என்று உல்லா உசிதாலோ, பிர்ஜோபையட்நென் மற்றும் பெக்கா புஸ்கா போன்ற ரஸ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக துரித உணவுகளில் மிக அதிகமான அளவில் கொழுப்புச் சத்தும் சர்க்கரையுமே உள்ளன. பேகர், பிசா மற்றும் மென்பானங்கள் இவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.இந்த உணவு வகைகளில் சத்தில்லாமல் ஊளைச் சதையே பெருகும். அதிகமானோர் குண்டர்களாக சத்தற்ற நோயாளிகளாக நீரழிவு நோய் நிபுணர் மருத்துவ மனைகளில் வரிசையில் காத்துக்கிடப்பர். அதிகமான முதலீடு உலக சுகாதார நிறுவனம் தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணமாக உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மையுமே என்று கூறி அதற்குத் தகுந்தாற்போன்று உணவு முறையையும் உடற்பயிற்சியையும் முன்வைக்கிறது. உலகம் முழுவதும் துரித உணவு பரவி வருகிறது. இத்தகைய துரித உணவு உற்பத்தியில் அதிக அளவு முதலீடு செய்வதற்கே உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. 1988 லிருந்து 1997 வரை ஆசிய நாடுகளில் இத்தகைய உணவு தயாரிப்பில் போடப்பபட்ட அமெரிக்க மூலதனம் 743 மில்லியன் டொலர்களிலிருந்து 2.1 பில்லியன் டாலர்வரை அதிகரித்திருக்கிறது. அதேபோல் லத்தின் அமெரிக்காவில் இடப்பட்ட அமெரிக்க மூலதனமானது 222 மில்லியன் டொலர்களிலிருந்து 3.3 பில்லியன் டொலர் வரை அதிகரித்திரிக்கிறது. இது விவசாயத்தில் அமெரிக்கா இடும் மூலதனத்தை விட அதிகமாகும். ஆக இவற்றிலிருந்து ஒரு விடயம் தெளிவாகிறது. உலக அளவில் உணவு உற்பத்தி சத்தற்ற ஊளைச் சதையர்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது.மக்கள் உண்மையான சத்தைப் பெற ஏகாதிபத்திய நாடுகளும்ஃ நிறுவனங்களும் விரும்பவில்லை என்பது தெளிவு. ஆரோக்கியமான உணவு வகைகளான காய்கறிகள், பழங்கள் உண்பது இளைய தலைமுறையிடம் குறைந்து வருவதாகவும் நிபுணர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். நாட்டின் எதிர்காலத் தூண்கள் நோய்ஞ்சான்களாகவும் ஊளைச் சதையர்களாகவும் மாறிவருகின்றனர். மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறம், பட்டினியால் பரிதவிக்கும் நோய்ஞ்சான்களாகவும் இன்னொருபுறம் வேண்டாத ஊளைச் சதையுடனும் அளவற்ற நீரழவு நோய் போன்ற தொற்று நோய் அல்லாத நோய்களுடன் மக்களை உருவாக்குகின்றன. இச்சதியை நாம் எப்போது புரிந்துகொண்டு விடுபடப் போகிறோம்.

உலகம் முழுவதும் உள்ள மக்களின் குறிப்பாக நமது மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்து மேலை நாடுகளின் ஃ பன்னாட்டு துரித உணவுக் கம்பனிகள் துரித உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நம் மக்களை அடிமைகளாக மாற்றி வருகின்றன.இதன்மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்ட தனிச்சுவையுடன் கூடிய உணவுவகைகள் அழிக்கப்பட்டு ஒரே மாதிரியான உணவு வகைகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.இந்த துரித உணவுகளில் சுவைதான் அதிகமாக இருக்குமே தவிர உடல் நலத்திற்குத் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. இவற்றில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருள்களினால் உடல் நலத்திற்கு தீமையே விளையும்.


உலகமயமாக்கல் கொள்கைகள் பெற்றெடுத்த குழந்தையே துரித உணவு. உலகம் முழுவதும் தேசம் கடந்த தொழிற்கழகங்களும், பன்னாட்டுக் கம்பனிகளும் துரித உணவு தயாரிப்பதில் ஈடுபட்டுவருகின்றன. பெரும் இலாபம் இதில் கிடைப்பதால் மக்களின் உடல்நலத்தைப் பற்றியோ அக்கறை காட்டுவது இல்லை. அவர்களின் நோக்கம் மிகச்சுவையான உணவு தயாரித்து இலாபத்தை ஈட்டுவது. துரித உணவில் கலக்கப்படும் இரசாயணப் பொருட்கள் துரித உணவு மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைககளிலும் MSG(Mono Sadium Glautamate ) என்னும் இரசாயன உப்பு கலக்கப்படுகிறது. பீசா, பர்கர், பிறைட்றைஸ் ,நூடில்ஸ் போன்ற நிறைய உணவு வகைகளில் MSG சேர்க்கப்படுகின்றது. MSG இன் வாசனை மூளையின் ஹைபோதலமஸ் பகுதியை தூண்டுகிறது. ஹைபோ தலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். இதனால் அதிகமாகவும் அடிக்கடி உணவு உண்ணவேண்டுமென்ற உணர்வும் தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் இந்த உணவுகளை உட்கொள்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு சில இரசாயனப் பொருட்களை சேர்த்து வெண்மையாக்கப்படும் மைதாவைக் கொண்டு தயாரிக்கப்படும் பரோட்டோ, நூடில்ஸ், பன், சமோசா,பீசா,குல்சா,பர்கர் போன்றவற்றில் நார்ச்சத்து என்பது இருக்காது. மேலும் துரித உணகளில் சேர்க்கப்படும் சாயம் அஜினோமோற்றோ போன்ற வேதிப் பொருட்கள் நமது குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஏற்படும் தீமைகள் 1. துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும் நீரழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதில் அலட்சியம் காட்டினால் உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2. ஞாபக சக்தி குறைவு, கவனக்குறைவு, திட்டமிட்டு செயற்படும் திறன் குறைவு எனப் பல பிரச்சினைகள் ஏற்படும். 3.தலைவலி, மனச்சோர்வு,உடற்சோர்வு, உடல் எடைஅதிகரிப்பு உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் உண்டாகும். 4. விபரீதங்கள்,உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை, வயிற்றுவலி,மூட்டுவலி நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்பு செல்களும் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும். 5.இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிறுவயதிலேயே பருவமடைகின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. எனினும் நம்முடைய உணவுப் பழக்கத்திற்கு அதில் முக்கிய இடம் உண்டு.பெண்கள் பருவமடைவதற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் எனும் ஹோர்மோனை அதிகம் சுரக்கச் செய்வதில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளுக்கு முக்கிய இடம் உண்டு.

நேபாளத்தில் துரித உணவை விற்கும் விற்பனையாளர்.

துரித உணவு அல்லது வேக உணவு என்பது விரைவாக சமைத்து வழக்ககூடிய உணவைக் குறிக்கிறது. மேற்குநாடுகளில் மக்டொனால்ட்ஸ், கெண்டக்கி ஃபிறைட் சிக்கின் போன்ற உணவகங்களில் விரைவாக வழங்கப்படும் உணவுகளைக் குறிக்கிறது. சாலையோரத்தில் விறகப்படும் உணவுகளையும் இது குறிக்கிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.