துகாராம் (1938 திரைப்படம்)

துகாராம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சென்ட்ரல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் முசிரி சுப்பிரமணிய ஐயர், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியானது.
பிற்காலத்தில் பிரபல பின்னணிப் பாடகியாக விளங்கிய ஆர். பாலசரஸ்வதி இத்திரைப்படத்தில் சிறுமி வேடத்தில் துகாராமின் மகளாக நடித்திருந்தார்.[1]

துகாராம்
முசிரி சுப்பிரமணிய ஐயர்
ஆர். பாலசரஸ்வதி (சிறுமி)
தோன்றும் காட்சி
இயக்கம்பி. என். ராவ்
தயாரிப்புசென்ட்ரல் ஸ்டூடியோஸ்
நடிப்புமுசிரி சுப்பிரமணிய ஐயர்
கே. சாரங்கபாணி
எம். எஸ். முருகேசன்
ஆர். பாலசுப்பிரமணியம்
கே. ஏ. சொக்கலிங்க பாகவதர்
கே. சீதா
மீனாம்பாள்
ஆர். பாலசரஸ்வதி
வெளியீடுசெப்டம்பர் 17, 1938
ஓட்டம்.
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிறு தகவல்

பிரபல கருநாடக இசை வித்துவானாகிய முசிரி சுப்பிரமணிய ஐயர் நடித்த ஒரே ஒரு திரைப்படம் இதுவாகும். இப்படத்தில் நடிப்பதற்காக அவர் மீசை வளர்த்தார். இதையிட்டு கல்கி ஆனந்த விகடன் இதழில் எழுதிய துகாராம் திரைப்பட விமர்சனத்தில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.[2]

உசாத்துணை

  1. கை, ராண்டார் (11 ஜனவரி 2008). "Tukaram 1938". தி இந்து. மூல முகவரியிலிருந்து 25 நவம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 நவம்பர் 2016.
  2. "'துகாராம்' பட விமரிசனம்". பார்த்த நாள் 25 நவம்பர் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.