திவ்யா பாரதி
திவ்யா ஓம்பிரகாஷ் பாரதி அல்லது திவ்யா பாரதி (இந்தி: दिव्या भारती), (25 பிப்ரவரி 1974 - 5 ஏப்ரல் 1993) ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார். அவர் போபிலி ராஜா திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் 1990 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படங்களிலிருந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பிறகு தென்னிந்தியாவில் சில திரைப்படங்கள் வெற்றிபெற்றன. அவர் 1992 ஆம் ஆண்டில் 'விஷ்வாத்மா' என்ற சராசரியாக ஓடிய ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் இந்தி திரைப்படங்களில் நுழைந்தார். அந்த நேரத்தில் மிகப்பிரபலமானதாக இருந்த, அவரை மிகவும் புகழ்பெறச் செய்த சாத் சமுந்தார் பார் என்ற அவருடைய பாடல் அவருக்கு பெரும் பாராட்டுதலைப் பெற்றுத்தந்தது. அவர் ஒரு வருடத்திற்குள்ளாக 14 இந்தித் திரைப்படங்களில் நடித்திருந்தார், 1992 மற்றும் மத்திய 1993 ஆம் வருடத்திற்கு இடையேயான காலகட்டம் அறிமுகமான ஒருவருக்கு மிகப்பெரிய சாதனையைப் பெற்றுத்தந்த ஒன்றாக இருந்தது. அது ஒரு வருடத்திற்குள்ளாக அதிகத் திரைப்படங்களில் நடித்தவர் என்ற உலக சாதனையை அவருக்குப் பெற்றுத்தந்தது என்பதுடன் அந்தச் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமலேயே இருக்கிறது. அவர் 1992 இல் சஜித் நதியத்வாலாவைத் திருமணம் செய்துகொண்டார். அவருடைய வாழ்க்கை 1993 ஆம் ஆண்டு ஏப்ரலில் தனது 19 ஆம் வயதில் ஏற்பட்ட அவருடைய துயர மரணத்தோடு முடிவுக்கு வந்தது. அவர் எப்படி இறந்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாததால் அவருடைய மரணம் புதிரானதாக அறியப்படாமலேயே எஞ்சியது, எனவே அவருடைய மரணத்தை எப்படித் தீர்ப்பது என்பது சிக்கலானதாக இருப்பது நிரூபிக்கப்பட்டதால் அந்த வழக்கும் 1998 இல் மூடப்பட்டது.
திவ்யா பாரதி | ||||||
---|---|---|---|---|---|---|
பிறப்பு | 25 பெப்ரவரி 1974 இந்தியா | |||||
இறப்பு | ஏப்ரல் 5, 1993 19) மும்பை, இந்தியா | (அகவை|||||
வேறு பெயர் | சனா நதியத்வாலா | |||||
நடிப்புக் காலம் | 1990-1993 | |||||
துணைவர் | சஜித் நதியத்வாலா (1992-1993) | |||||
குறிப்பிடத்தக்க படங்கள் | Vishwatma (Actress In Debut Film & Song) (Saar Samundar) | |||||
|
ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்
திவ்யா இந்தியா மும்பையில் ஒரு காப்பீட்டு அலுவலரான ஓம்பிரகாஷ் பாரதிக்கும், மீரா பாரதிக்கும் (லோதி) மகளாகப் பிறந்தார். திவ்யா பாரதிக்கு(லோதி) குணால் என்ற இளைய சகோதரர் ஒருவர் இருக்கிறார். திவ்யாவின் தாயார் ஓம்பிராகாஷ் பாரதிக்கு இரண்டாவது மனைவியாவார்.
திவ்யா மும்பை ஜுஹூவில் உள்ள மானேக்ஜி கூப்பர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அங்கே திவ்யா 9 ஆம் வகுப்பை முடித்தார். திவ்யா தன்னுடைய பள்ளி நாட்களில் நடிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்கவில்லை. இருப்பினும், அவர் கணபதி திருவிழாவின்போது ஆடையலங்கார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்பதோடு பள்ளியில் இருக்கும்போதே அதற்காக பல விருதுகளையும் வென்றிருக்கிறார்.
திவ்யா படிப்பில் சிறந்தவர், ஆனால் படிப்பு அல்லாத வேறு சில செயல்பாடுகளிலும் அவர் சிறந்து விளங்கினார். திவ்யாவும் அவருடைய சகோதரரும் மிகச்சிறந்த நீச்சல் வீரர்கள். அவர்கள் கார் ஜிம்கானா எனப்படும் மும்பையைச் சேர்ந்த கிளப்பிற்கு சாம்பியன்களாவர். திவ்யா கார் ஓட்டுவதிலும் தேறியவராவார். அவர் தன்னுடைய பதினான்காம் வயதிலேயே கார் ஓட்டக் கற்றுக்கொண்டார்.
திரைத்துறை வாழ்க்கை
பாலிவுட்டில் திருப்பம்
திவ்யாவுக்கு நடிப்பு வாய்ப்புகள் வரத்தொடங்கியபோது அவர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அவருடைய முகம் அந்த நேரத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்த ஸ்ரீதேவியின் முகத்தை நினைவூட்டுவதாக இருந்தது என்பதால் அவரை பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கவனிக்கத் தொடங்கினர். இதற்கு அவருடைய பெற்றோர்கள் முதலில் தயங்கினர், திவ்யாவும்கூட இதில் ஆர்வமில்லாமல் இருந்தார். டில் நந்து துலானி அவருக்கு குனாகன் கா தேவ்தாவில் வாய்ப்பு வழங்கினார். இறுதியாக, அவருடைய தாயார் அவரிடம் அவர் தன்னுடைய படிப்பை விட்டுவிட வேண்டியிருக்கும் என்று சொன்னபோது இதனால் மகிழ்ச்சியுற்ற திவ்யா திரைப்படத்துறையில் இறங்க உடன்பட்டார். 1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திவ்யாவிற்கு பதினான்கரை வயது.
அதேசமயத்தில், அதன்க் ஹை அதன்க் மற்றும் ருத்ர அவதார் ஆகிய படங்களில் அமீ்ர் கானுக்கு இணையாக ஒரு புதுமுகம் தலிப் ஷங்கருக்கு தேவைப்படுகிறது என்பதை ஒரு நண்பரின் வழியாக திவ்யா தெரிந்துகொண்டார். அவருடைய பெற்றோர்களின் ஒப்புதலோடு திவ்யா இரண்டு படங்களுக்கும் கையெழுத்திட்டார். அந்த நேரத்தில் கோவிந்தாவின் சகோதரரான கீர்த்தி குமார் வசீகரமான திவ்யாவை ஒரு வீடியோ லைப்ரரியில் பார்த்தார். அவரை வீடுவரை பின்தொடர்ந்து சென்ற அவர், அதற்கும் அடுத்திருந்த கட்டிடத்தில் வசித்து வந்த இயக்குநரான நந்து துலானியை அழைத்து திவ்யாவைப் பற்றி விசாரித்தார்.
ராதா கா சங்கம் அத்தியாயம்
பாரதி குடும்பம் தெரிந்துகொண்ட அடுத்த விஷயம் கீர்த்தி குமார் திவ்யாவை ராதா கா சங்கத்தில் கோவிந்தாவுடன் நடிக்க வைக்க விரும்புகிறார் என்பதுதான். தலிப் ஷங்கரை தனிப்பட்ட முறையில் சென்று சந்தித்த கீர்த்தி அவர்களுடைய ஒப்பந்தத்திலிருந்து திவ்யாவை விடுவிக்கச் செய்தார். ஷோடைம் பத்திரிக்கையில் கீர்த்தி "நான் தலிப்பிடம் அவர் வேறு எந்த பெண்ணை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் ஆனால் என்னால் மற்றொரு ராதாவை கண்டுபிடிக்க இயலாது என்று கூறினேன்" என்று தெரிவித்திருந்தார். கீர்த்தி அவருடைய பெயரை திவ்யா என்பதிலிருந்து ராதாவாக மாற்றினார். தயாரிப்பாளர் கீர்த்தி அவரை வைத்து நிறைய நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்தியா முழுவதும் தேடிய பின்னர் தான் எப்படி முழுமையான ராதாவைக் கண்டுபிடித்தேன் என்று அவர் பேட்டிகள் அளித்தார். பிறகு முதல் காட்சி படம்பிடிக்கப்படும் முன்பு அவரை கவர்ச்சிகரமானவராக மாற்ற முயற்சித்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் திவ்யா "ராதா" பாரதி அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜூஹி சாவ்லா நியமிக்கப்பட்டார். இந்தப் பிரச்சினைக்கு இரு தரப்பிலிருந்தும் சொல்லப்பட்ட காரணங்கள் வெவ்வேறாக இருந்தன.
இந்த நீக்கத்தின் பின்னணி குறித்து பல்வேறு பத்திரிக்கைகள் வெவ்வேறுவிதமாக எழுதின. "கீர்த்தி அவர் மீது மிகையான அன்பு கொண்டிருந்தார்" என்று கூறினர், மற்ற சிலரோ "இந்தப் படத்தை இயக்குவதாக இருந்த லாரன்ஸ் டிஸோசா இதிலிருந்து விலகிவிட்டார். அதனால் கீர்த்தியே இந்தப் படத்தை இயக்குவதென்று தீர்மானித்தார். இயக்கத்திற்கு புதியவரான அவர் தான் புதிதாக நடிக்க வந்தவரை இயக்க முடியாது என்பதால் திவ்யாவை நீக்கிவிட்டார்", என்று கூறினர், மற்ற பத்திரிக்கைகள் "திவ்யாவுக்கு கோவிந்தாவுடன் காதல் உறவு இருந்தது, இதை கீர்த்தியால் சகித்துக்கொள்ள முடியவில்லை" என்று எழுதின. மற்ற பத்திரிக்கைகளோ "திவ்யாவின் முதிர்ச்சியின்மைதான் அவரை இந்தப் படத்திலிருந்து நீக்கச் செய்தது" என்று எழுதின.
மறு-போராட்டம்
அவர் மற்ற இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு பச்சை விளக்கு காண்பிக்கப்பட்டது. அவர் போனி கபூர், மகேஷ் பட், ஷப்னம் கபூர், சேகர் கபூர் மற்றும் சுபாஷ் கை போன்ற பெரிய திரைத்துறையினரால் திரைச்-சோதனைக்கு அழைக்கப்பட்டார். அவர்கள் அனைவரும் அவரைப் பாராட்டிப் பேசினார் ஆனால் யாரும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை, இதற்கு காரணமாக அவருடைய குழந்தைத்தனமான தோற்றம் முன்னின்றதாக வதந்தி பரவியது. பத்திரிக்கைகளில் அவர் இஷ்டம்போல் நடந்துகொள்கின்ற வெகுளித்தனமானவராக பெயர் பெற்றார். உண்மையில், தன்னுடைய பெரிய பட்ஜெட் படமான பிரேமில் போனி கபூர் திவ்யாவை ஒப்பந்தம் செய்தார். எட்டு நாட்களுக்குப் பின்னர் திவ்யா வெளியேற்றப்பட்டு தபு மறுஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் ஆமிர் கானுக்கு இணையாக சௌதாகர் படத்திற்கு அவரை சுபாஷ் கை அழைத்திருந்தார், 20 நாட்களுக்குப் பின்னர் அவர் வெளியேற்றப்பட்டு மனிஷா கொய்ராலாவும் விவேக் முஷ்ரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக இந்த மறுப்புக்கள் பதினைந்து வயதான திவ்யாவை பாதித்தது. அவர் ஏற்கனவே பள்ளியை வி்ட்டு வெளியேறிவிட்டதால் அவர்கள் அவரை மீண்டும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதன் காரணமாக அவர் சும்மாவே உட்கார்ந்திருந்தார். அதிர்ஷ்டவசமாக, தெலுங்கு சினிமாவின் பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவரான டி.ராம்நாயுடு திவ்யாவின் கதவுகளைத் தட்டினார். அவர் தகுபதி வெங்கடேஷிற்கு இணையாக போபிலி ராஜா என்ற தெலுங்கு திரைப்படத்தில் திவ்யாவிற்கு வாய்ப்பளித்தார். உடனடியாக திவ்யாவிற்கு ஒரு தமிழ் திரைப்படமும் கிடைத்தது என்பதுடன் ராஜீவ் ராய் அவரை விஷ்வாத்மா திரைப்படத்திற்காக அணுகினார்.
தெலுங்கு சினிமாவில் நட்சத்திரமாக உயர்வு
பல பெரிய திரைப்படத் திட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் திவ்யா மன உளைச்சலுக்கு ஆளானார் என்பதோடு மும்பையை விட்டும் வெளியில் சென்றிருந்தார். அவர் திரும்பிவந்த மாலையில் போபிலி ராஜாவின் தயாரிப்பாளர் அவரைத் தேடி தன்னுடைய ஆட்களை அனுப்பியிருந்தார். அவர்கள் திவ்யா அன்று இரவே புறப்பட்டு வரவேண்டும் என்றனர். 1991 ஆம் ஆண்டு நவம்பர் "மூவி" பத்திரிக்கையில் தெரிவித்திருந்தபடி, "நான் போக விரும்பவில்லை. நான் இல்லை என்றேன் அம்மா ஆமாம் என்றார்கள். கற்பனை செய்துபாருங்கள், அந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது என்பதுடன் நான் சூப்பர்ஸ்டார் ஆனேன்". இது முற்றிலும் பலன் தந்தது. போபிலி ராஜா 1990ஆம் ஆண்டு கோடையில் வெளியிடப்பட்டு பிரம்மாண்டமான வெற்றிபெற்றது. அவர் புயலாக வந்து தென்னிந்தியாவைப் பிடித்தார், அங்கே அவர் ஒரு தேவதை. அவர் பெயரில் ஒரு கோயில்கூட கட்டப்பட்டிருக்கிறது. நிறைய வெற்றிப்படங்களோடு, அவர் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவரானார். பாக்ஸ்-ஆபீஸ் தரவரிசையில், போட்டியே இல்லாத விஜயசாந்திக்கு அடுத்தபடியாக வந்தார். அவருடைய சம்பளம் தி இன்சைடரின் கூற்றுப்படி ஒரு திரைப்படத்திற்கு 25 லட்சத்தைத் தொட்டது என்பதுடன் ஒவ்வொரு கூடுதலான நாளுக்கும் (படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டால் தென்னிந்திய தயாரிப்பாளர்கள் 15 நாளுக்கு 15 லட்ச ரூபாய் தந்தனர்) 1 லட்சம் என்ற அளவில் இருந்தது, இது 1991ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொகையாகும். பாலிவுட்டில், மாதுரி தீட்சித் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் மட்டுமே இந்த அளவிற்கு சம்பளம் பெற்றவர்களாவர். 1991ஆம் ஆண்டில் திவ்யா தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் மோகன் பாபு உள்ளிட்ட சூப்பர்ஸ்டார்களுடன் ரவுடி அல்லுடு, தர்ம ஷேத்ரம் மற்றும் அசெம்பிளி ரவுடி உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றிகளைத் தந்தார். வட இந்தியாவில் அவர் தெலுங்கு சினிமாவின் ஸ்ரீதேவியாக பிரபலமடைந்திருந்தார். ஆனால், திவ்யா தேடியது இது அல்ல. அவர் இதை மும்பையில் செய்துகாட்ட விரும்பினார். அவர் ஒரு புதிய தீர்மானத்துடன் திரும்பி வந்தார். அதேசமயத்தில், அவர் தன்னுடைய தெலுங்கு ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல் வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவிற்கு குறைத்துக்கொண்டார்.
பாலிவுட்டில் நட்சத்திரமாக உயர்வு
ராஜீவ் ராய் தனது விஷ்வாத்மா திரைப்படத்திற்கு சன்னி தியோலுக்கு இணையாக புதுமுகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்று திவ்யா கேள்விப்பட்டபோது, அவர் தன்னுடைய சுயவிவரத்துடன் துணிச்சலோடு ராஜீவ் ராயின் அலுவலகத்திற்கே சென்றார். அதே நாளில் அவர் அந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ராஜீவ் தனது திரிதேவ் வெற்றிப்படத்தை அடுத்து அதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார்.
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான திரைப்படத் தயாரிப்பாளர்களான திருமூர்த்தி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெடால் தயாரிக்கப்பட்டது. அவர்களுடைய திரைப்படங்கள் தற்போது சூப்பர்ஸ்டார்களாக இருக்கும் ஹேமா மாலினியை ஜானி மேரா நாம் மற்றும் அமிதாப்பச்சனை தீவார் ஆகிய திரைப்படங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. விஷ்வாத்மா பிரம்மாண்டமான முறையில் 1990ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. திரைப்பட நடிகர் தர்மேந்திரா தன்னுடைய மஹுரட் காட்சியை வழங்கினார். விரைவிலேயே திவ்யா நைரோபியில் ஒரு நீண்டகால வெளிப்புறப் படப்பிடிப்பிற்கு சென்றார். திவ்யா திரும்பிவந்த நேரத்தில் அவருக்கு பட வாய்ப்புக்கள் குவியத்தொடங்கின. இதுவரையில் ஒரு படம்கூட இல்லாதிருந்த திவ்யா 14 படங்களில் கையெழுத்திட்டார். அவர் ஷாரூக்கானின் முதன்மைக் கதாநாயகி என்ற பெயரையும் பெற்றிருந்தார், இவர்தான் தன்னை தீவானா மற்றும் தில் ஆஸ்னா ஹை ஆகிய திரைப்படங்களில் புகழ்பெறச் செய்தார் என்று ஷாரூக்கான் கூறியிருக்கிறார்.
1992ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி திவ்யாவிற்கு ஒரு மறக்கமுடியாத நாளாக இருந்தது. தன்னுடைய திரைப்படம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என அவர் விரும்பியதற்கு பல காரணங்கள் இருந்தன. விஷ்வாத்மா நன்றாக ஓடியது என்றாலும் இந்தப் படத்தின் வெற்றி திரிதேவின் வெற்றிக்கு அருகில் வரவில்லை என்பதால் தோல்விப்படமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் முதல்நாள் திரையிடலில் அமிதாப் பச்சன், யாஷ் சோப்ரா, ஜாக்கி ஷெரஃப், ஜூஹி சாவ்லா, ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சன்க்கி பாண்டே உள்ளிட்ட நிறைய திரைப்பட ஆளுமைகள் கலந்துகொண்டனர். இருப்பினும், திவ்யா நடித்திருந்த "சாத் சமுந்தார் பார்" பாடல் பெரிய வெற்றி பெற்றது என்பதுடன் இன்றும்கூட ரசிகர்கள் அவரை இந்தப் பாடலால் நினைவு கூர்கின்றனர்.
ஏழு நாட்களுக்குப் பின்னர் திவ்யாவின் இசைத்தொகுப்பான தில் கா கியா கஸூர் வெளியிடப்பட்டது. இது அவரை ஒரு புகழ்பெற்ற கதாநாயகியாக உருவாக்கியிருக்கக்கூடியது என்றாலும் திரையரங்குகள் வெறிச்சோடி கிடந்தன. இந்தப் படம் இந்த அளவிற்கு மோசமான தோல்வியடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் தோல்வியுற்றது என்றாலும், ஃபிலிம்ஃபேர் பத்திரிக்கைகள் திவ்யாவை 1992 ஆம் ஆண்டின் முதல் பத்து சிறந்த நடிகைகள் பட்டியலில் சேர்க்கத் தொடங்கியிருந்தன. ஆச்சரியப்படும்படியாக, தற்போது நன்கு அறியப்பட்டுள்ள புதுவரவுகள் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் திவ்யாவின் அறிமுகமே பத்திரிக்கையின் தலைப்புச்செய்தியாக இருந்தது, வெற்றிப்படங்களில் நடித்திருந்த பூல் அவுர் கான்டேயில் மது மற்றும் சனம் பேவஃபாவில் சாந்தினி, ஆகியோர் நட்சத்திரமாகவில்லை, ஆனால் திவ்யாவின் தோல்விப்படம் அவரை ஒரு நட்சத்திரமாக்கியது. திவ்யா "நான் என்னை நிரூபிக்கவே விரும்புகிறேன். ஆனால் என் முகத்தின் மீதே வீழ்கிறேன். இப்போது, நான் மீண்டும் முற்றிலும் புதிதாக தொடங்கியிருக்கிறேன். ஒருநாள் வெற்றி என்னுடையதாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை", என்று கூறி தன்னை தற்காத்துக்கொண்டார் (ஸ்டார்டஸ்ட், மார்ச் 1992).
மேலும், திவ்யாவும்கூட இவ்வாறு புதுவரவுகள் மீதிருந்த நம்பிக்கையை நீக்கிக்கொண்டவராகக் காணப்பட்டார். பின்னர் பேலஜ் நிலானியின் ஷோலா அவுர் ஷப்னம் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் வெற்றிபெற்றது என்பதுடன் திவ்யா மீண்டும் உச்சத்திற்குச் சென்றார். இது திவ்யாவிற்கு மேன்மையான கதாப்பாத்திரத்தை மட்டுமின்றி கோவிந்தாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை வழங்கியதோடு டேவிட் தவானை ஒரு இயக்குநராக அங்கீகரிக்கச் செய்தது.
நான்கு மாதங்களுக்குப் பின்னர், ராஜ் கன்வரின் காதல் கதையான தீவானா 1992ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் அவர் ரிஷி கபூருடனும், இந்தப் படத்தில் அறிமுகமானவரும், பின்னாளில் பாலிவுட் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய சினிமாவின் அடையாளமாகவும் ஆன ஷாரூக்கானுடனும் நடித்திருந்தார். தீவானாவின் பெரிய வெற்றியால் திவ்யா தன்னுடைய புதுவரவு பட்டியலிலிருந்து விலகி முதல்நிலைப் பட்டியலில் இடம்பெற்றார். தீவானாவில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதே நேரத்தின்போது, திவ்யாவின் மற்ற படங்களான சுனில் ஷெட்டியுடன் பல்வான், கோவிந்தாவுடன் ஜான் சே பியாரா வெளியாகி நன்றாக ஓடின. அந்த வருடத்தின் முடிவில் ஹேமா மாலினியின் தில் ஆஷ்னா ஹை வெளியானது, அதில் திவ்யா தன்னுடைய தாயைத் தேடும் பார் நடனக்காரியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தோல்வியடைந்தது என்றாலும் அவருடைய நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
திடீரென்று, அவரிடம் இருந்த பெரிய வெற்றிப்படங்களால் திவ்யா திரைத்துறையில் ஒரு மிகப்பெரிய சொத்தாகப் பார்க்கப்பட்டார். அவர் இந்த முதல்நிலைத் தகுதியை நீண்டநாட்களுக்கு தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று பலரும் கணித்தனர். உண்மையில் "மூவி", "ஸ்டார்டஸ்ட்" மற்றும் "ஃபிலிம்ஃபேர்" போன்ற திரைப் பத்திரிக்கைகள் செப்டம்பரில் அவரை சம்பளம், பிரபலம் மற்றும் மாதுரி தீ்ட்சித் மற்றும் ஸ்ரீதேவிக்கு அடுத்த நிலையில் இருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு மூன்றாவது இடத்தை அளித்திருந்தன. ஆனால் விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது, 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 என்ற ஒரு விதிவசமான நாளில், பத்தொன்பது வயதே ஆகியிருந்த நிலையில் திவ்யா அவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
சொந்த வாழ்க்கை
16 வயதே ஆன நிலையில், தன்னுடைய நண்பரான கோவிந்தாவைப் பார்ப்பதற்கு ஃபிலிம்சிட்டி படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சஜித் நதியத்வாலாவை 1990 இல் திவ்யா சந்தித்தார். ஷோலா அவுர் ஷப்னம் படப்பிடிப்பு தளத்தில் திவ்யா கோவிந்தா அஹூஜாவுடன் படப்பிடிப்பில் இருந்தார். கோவிந்தா தான் சஜித்தை திவ்யாவிற்கு அறிமுகம் செய்துவைத்தார். விரைவிலேயே படப்பிடிப்பு தளங்களில் படக்குழுவினர் தினமும் சஜித்தைப் பார்ப்பது தொடர்ந்தது.
1993 ஆம் ஆண்டு ஜூன் மூவி இதழில் சஜித் குறிப்பிட்டதன்படி "1992 ஆம் ஆண்டு ஜனவரி 15 இல் எங்கோ ஒரு இடத்தில் திவ்யா என்னிடம் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்". அடுத்த நாளே அவர் தன்னுடைய பெயர் எல்லா கதாநாயர்களுடனும் இணைத்துப் பேசப்படுவதாக படபடப்பில் இருந்தார். அவர் திருமணம் செய்துகொண்டு இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர விரும்பினார். நான் எல்லோருடனும் உறவு கொண்டிருப்பவளாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
பிறகு 1992 ஆம் ஆண்டு மே 20 இல் திவ்யா சஜித்தின் வெர்ஸோரா குடியிருப்பில் இருக்கும் துள்சி அடுக்ககத்தில் அவருடைய சிகையலங்கார நிபுணரான சந்தியா, அவருடைய கணவர் மற்றும் ஒரு இஸ்லாமிய சடங்காளரின் முன்னிலையில் சஜித்தை திருமணம் செய்துகொண்டார். அவர் இஸ்லாமிற்கு மதம் மாறியதோடு "சானா" என்ற புதிய பெயரையும் வைத்துக்கொண்டார். "அவருடைய திரைத்துறை வாழ்க்கையை இது பாதிக்கும் என்பதால் நாங்கள் இதை ரகசியமாகவே வைத்திருந்தோம். அவருடைய தயாரிப்பாளர்கள் அச்சமடைந்திருக்கக்கூடும். கடந்த காலங்களை நினைக்கையில் நாங்கள் இந்த உண்மையை சொல்லியிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். திவ்யா நாங்கள் திருமணம் செய்துகொண்டதை அறிவிக்கவே விரும்பினார் நான்தான் இன்னும் கொஞ்சநாள் போகட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். நான் அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவருடைய திரைப்படத்திற்கு முண்டியடிக்கும் கூட்டத்தைப் பார்த்து அவர், "இது தோற்றுப்போய் மக்கள் என்னை விலகும்படி கேட்டுக்கொள்வார்கள்" என்று முனகுவார். ஆனால் அது நடக்கவே இல்லை, அவருடைய திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிபெற்றன. 1993 ஆம் ஆண்டின் முடிவில் அவர் தன்னுடைய திரைப்பட வேலைகள் அனைத்தையும் முடித்திருப்பார்" என்று சஜித் குறிப்பிட்டிருந்தார்.
இறப்பு
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு, மும்பையில் திவ்யா தன்னுடைய கணவரின் அடுக்குமாடிக் குடியிருப்பான துள்சி 2 இல் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார். திவ்யாவின் இந்த திடீர் முடிவு குறித்து ஊடகத்தில் பல்வேறுவிதமான யூகங்கள் நிலவின, அதற்கு விபத்து, மரணம், தற்கொலை மற்றும் கொலையாகக்கூட இருக்கலாம் என்ற காரணங்கள் கற்பிக்கப்பட்டன. திவ்யாவின் ஆடை வடிவமைப்பாளர் அவர் மரணமடைந்த நேரத்தில் அந்த அடுக்ககத்தில் இருந்தார் என்று நம்பப்பட்டது, ஆனால் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் தவிர்க்க இயலாததாக இருந்தது. காவல்துறை அவர் மரணம் குறித்த விசாரணையை 1998ஆம் ஆண்டில் மூடியது, ஆனால் அவர் இறந்துபோன சூழ்நிலைகள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன.
அவருடைய உடல் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 இல் வழங்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. வெள்ளித்திரையில் மிக இளவயது கதாநாயகியாக இருந்தவரின் இறுதிச்சடங்கில் அனில் கபூர், கோவிந்தா, கமல் சாதனா, ராஜ் பப்பர், யாஷ் சோப்ரா, ஜிம்மி நிருலா, சுதாகர் போகதே, முகேஷ் துக்கால், மகேஷ் ஆனந்த், அருணா இரானி, ராஸா முரத், விகாஸ் ஆனந்த், வெங்கடேஷ், ராம் மோகன், ஜாவத் கான், ராஜ் கன்வர், நிதின் மன்மோகன் மற்றும் அவருடைய முதல் வெற்றிப்படமான ஷோலா அவுர் ஷப்னத்தை உருவாக்கிய பேலஜ் நிலானி உள்ளிட்டவர்களும், ஹேமமாலினி, ஜெய பாதுரி, ஊர்மிளா மடோன்கர், சயிஃப் அலி கான், ஷாரூக்கான், ஷில்பா ஷிரோத்கர், சோனு வாலியா, சோமி அலி, பபிதா, கரிஷ்மா கபூர், சங்கீதா பிஜ்லானி, தபு, மனிஷா கொய்ராலா மற்றும் ஆஷா பரேக் உள்ளிட்ட பெரிய திரை ஆளுமைகள் உட்பட 500 பேர் கலந்துகொண்டனர் என்பதோடு அவருடைய குடும்பத்தினருக்கு தங்களுடைய இரங்கல்களையும் தெரிவித்தனர். அவருடைய குடும்பத்தினரும் ஒரு நேர்காணலில், என்னுடைய மகள் போதை மருந்துகளை எடுத்திருந்தாலும் குடித்திருந்தாலும் அவரால் எப்படி ஒரு வருடத்திற்குள்ளாக 14 படங்களை முடித்திருக்க முடியும், இதுவே என்னுடைய திவ்யா குடிக்கவில்லை அல்லது போதைமருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது, அவள் முற்றிலும் குற்றமற்றவள் மற்றவர்களுக்கும் அவள் குற்றமற்றவள் என்றும் திறமையான பெண் என்றும் தெரியும் என்று குறிப்பிட்டனர்.
அவர் தன்னுடைய மரணத்திற்கு முன்பு மோரா , லாட்லா , அந்தோலன் , அங்க்ராக்ஷாக் ,கார்தவ்யா (1995), மற்றும் விஜபாத் ஆகிய படங்களில் நடிக்க திட்டமிட்டிருந்தார்; அவருடைய கதாபாத்திரங்கள் பின்னர் மாற்றியமைக்கப்பட்டன. திவ்யா தன்னுடைய மரணத்திற்கு முன்பு ஏறத்தாழ லாட்லா திரைப்படத்தின் 80 சதவிகிதத்தை முடித்துவிட்டார், ஆனால் அந்த முழுப்படமும் ஸ்ரீதேவியை வைத்து மீண்டும் எடுக்கப்பட்டது. அவர் நிறைவு செய்த அந்தத் திரைப்படத்தின் காட்சித்தொகுப்புகள் பல வருடங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டன. திவ்யா நிறைவு செய்த இந்தப் படம் 1993 இல் வெளியிடப்படுவதாக இருந்தது, ஆனால் இறுதியில் 1994 இல் வெளியிடப்பட்டது.
திவ்யா இறுதியாக நிறைவு செய்த இரண்டு திரைப்படங்களான ரங் மற்றும் ஷத்ரன்ஞ் அவர் இறந்த சில மாதங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டன. இந்தத் திரைப்படங்கள்-மேலும் அவருடைய கணவர் சஜித் நதியத்வாலா தயாரித்த சில படங்களும்-அவருடைய நினைவுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
1998
1998ஆம் ஆண்டில், அவருடைய துயர மரணத்திற்கான உண்மையான காரணம் நிரூபிக்கப்பட இயலாததாக இருந்ததால் இந்த வழக்கு மூடப்பட தீர்மானிக்கப்பட்டது, ஆனால் இப்போதுவரை அவருடைய மரணம் ஒரு புதிராகவே இருக்கிறது என்பதுடன் இன்றும்கூட நினைவு கூறப்படும் அவருடைய ஆளுமையும் நடிப்பும் மறக்கப்பட முடியாததாகவே இருக்கிறது. மிகச் சிறப்பான நடிப்பால் அவர் இன்றும் விரும்பப்படுபவராகவும் மக்களால் நினைவு கூறப்படுபவராகவும் இருக்கிறார்.
திரைப்பட விவரங்கள்
ஆண்டு | தலைப்பு | உடன் நடித்தவர் | மொழி | வர்த்தகரீதியான வசூல் |
---|---|---|---|---|
1990 | நிலா பெண்ணே | ஆனந்த் | தமிழ் | தோல்வி |
1990 | போபிலி ராஜா | வெங்கடேஷ் | தெலுங்கு | பெரிய வெற்றி |
1992 | ரவுடி அல்லுடு | சிரஞ்சீவி | தெலுங்கு | பெரிய வெற்றி |
1992 | தர்ம ஷேத்ரம் | பால்கிருஷ்ணா | தெலுங்கு | சராசரி |
1992 | அசெம்பிளி ரவுடி | மோகன் பாபு | தெலுங்கு | பெரிய வெற்றி |
1992 | விஷ்வாத்மா | சன்னி தியோல் | இந்தி | சராசரி |
1992 | ஷோலா அவுர் ஷப்னம் | கோவிந்தா | இந்தி | பெரிய வெற்றி |
1992 | தில் கா கியா கஸூர் | ப்ரித்வி | இந்தி | சராசரி |
1992 | ஜான் ஸே பியாரா | கோவிந்தா | இந்தி | வெற்றி |
1992 | தீவானா | ஷாருக் கான் மற்றும் ரிஷி கபூர் | இந்தி | பெரிய வெற்றி |
1992 | பல்வான் | சுனில் ஷெட்டி | இந்தி | வெற்றி |
1992 | துஷ்மன் சமானா | அர்மான் கோலி | இந்தி | தோல்வி |
1992 | தில் ஆஸ்னா ஹை | ஷாருக் கான் | இந்தி | சராசரி |
1992 | கீத் | அவினாஷ் தோரத், நாஷிக் | இந்தி | சராசரி |
1992 | சித்தமா மோகுடு | மோகன் பாபு | தெலுங்கு | தோல்வி |
1993 | தோலி முத்து | பிரசாந்த் | தெலுங்கு | வெற்றி |
1993 | நா இல்லே நா சொர்க்கம் | கிருஷ்ணா, ரமேஷ் | தெலுங்கு | தோல்வி |
1993 | தில் ஹை டு ஹை | ஜாக்கி ஷெராப் | இந்தி | வெற்றி |
1993 | காஸ்த்ரியா | சஞ்சய் தத் | இந்தி | சராசரி |
1993 | ரங் | கமல் சாதனா | இந்தி | வெற்றி |
1993 | சத்ரன்ஜ் | ஜாக்கி ஷெராப் | இந்தி | சராசரி |
விருதுகள் | ||
---|---|---|
ஃபிலிம்ஃபேர் விருது | ||
முன்னர் Raveena Tandon for Patthar Ke Phool |
லக்ஸ் புதுமுக விருது for Deewana 1992 |
பின்னர் Mamta Kulkarni for Hindi Movie |
முடிக்கப்படாத படங்கள்\மற்ற நடிகைகளைக் கொண்டு முடிக்கப்பட்டது
Year Of release | தலைப்பு | உடன் நடித்தவர் | மாற்றீடுகள் | வர்த்தகரீதியான வசூல் | |
---|---|---|---|---|---|
1993 | தவான் | அஜய் தேவ்கான் | கரிஷ்மா கபூர் | சராசரி | |
1994 | மோரா | அக்சய் குமார் மற்றும் சுனில் ஷெட்டி | ரவீணா டாண்டன் | பெரிய வெற்றி | |
1994 | லாட்லா | அனில் கபூர் | ஸ்ரீதேவி | வெற்றி | |
1994 | விஜபாத் | அஜய் தேவ்கான் | தபு | வெற்றி | |
1995 | அந்தோலன் | கோவிந்தா | மம்தா குல்கர்னி | சராசரி | |
1995 | கர்தவ்யா | சஞ்சய் கபூர் | ஜூஹி சாவ்லா | தோல்வி | |
1995 | அங்ராக்ஷக் | சன்னி தியோல் | பூஜா பட் | தோல்வி | |
1995 | ஹல்ச்சல் | அஜய் தேவ்கான் | கஜோல் | சராசரிக்கும் கீழே | |
1995 | கன்யாதான் | ரிஷி கபூர் | மனிஷா கொய்ராலா | நின்றுபோனது | |
1995 | தோ கதம் | சல்மான் கான் | படம் தயாரிக்கப்படவில்லை | ||
1995 | பரிணாம் | அக்ஷய் குமார் | படம் தயாரிக்கப்படவில்லை | ||
1995 | சல் பே சல் | ஜாக்கி ஷெராப் | படம் தயாரிக்கப்படவில்லை | ||
குறிப்புகள்
- முடிக்கப்படாத படங்களின் பட்டியல் அனைத்தும் ஃபிலிம்ஃபேர் மற்றும் சினிபிளிட்ஸ் பத்திரிக்கைகளால் 1993 ஆம் ஆண்டு மேயில் பதிப்புரிமை பெறப்பட்டிருக்கிறது.