திறந்த சமுதாயம்

திறந்த சமுதாயம் (Open Society) என்ற எண்ணக்கரு என்றி பெர்க்சன் என்பவரால் முன்வைக்கப்பட்டது. திறந்த சமுதாயத்தில் அரசு responsive and tolerant ஆகவும், அரசு அமைப்புகள் ஒளிவுமறைவற்றதாகவும் (transparent), எளிதில் மாற்றங்களை உள்வாங்கக் கூடியதாகவும் (flexible) இருத்தல் வேண்டும். அரசு எந்த வித இரகசியங்களைப் பேணாமலும், ஏகபோக தன்மையற்றதாகவும், அனைத்துத் தகவல்களும் அனைவரின் நம்பிக்கைக்கு உரியதாகவும் அமைய வேண்டும். அரசியல் உரிமைகளும் மனித உரிமைகளும் திறந்த சமுதாயத்தின் அடிப்படைகளாகும்.

கார்ல் பொப்பர் தனது The Open Society and Its Enemies என்ற நூலில் தந்த வரைவிலக்கணப்படி திறந்த சமுதாயம் தனது தலைவர்களை வன்முறையற்று தேர்வு செய்யும் திறனைக் கொண்டிருக்கும் என்கிறார். மூடிய சமுதாயங்கள் வன்முறையற்ற தலைமை அல்லது அரசியல் மாற்றத்தை செய்யமுடியாதவையாகும். திறந்த சமுதாயங்களுக்கு மக்களாட்சி எடுத்துக்காட்டு ஆகும். மூடிய சமுதாயங்களுக்கு சர்வாதிகாரம் அல்லது ஏகபோக முடியாட்சி உதாரணங்கள் ஆகும்.

கார்ல் பொப்பர் எப்படி அரசாள்வது சிறந்தது என்பது பற்றி இறுதியான, முழுமையான, தீர்க்கதரிசனமான அறிவை பெறுவது இயலாது என்பதால், எந்த ஓர் அரசும் அதன் அரசியலை மாற்றி அல்லது மாற்றங்களை அனுசரித்துப் போககூடியதாக இருத்தல் வேண்டும் என்கிறார். மேலும், திறந்த சமுதாயம் பன்முக தன்மையோடும் (pluralistic) பல்பண்பாட்டோடும் (multicultural) இருந்தாலே பிரச்சினைகளுக்குப் பல அணுகுமுறைகளை அலச வாய்ப்பளிக்கும்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.