திர்மிதி (நூல்)

திர்மிதி அல்லது ஜாமிஉத் திர்மிதி (Jami' at-Tirmidhi,அரபு மொழி: جامع الترمذي) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் முக்கியமான ஆறு ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் தொகுப்பு நூல்களில் திர்மிதி ஹதீஸ் தொகுப்பும் ஒன்றாகும்.[1]இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் அபூ ஈஸா முகமது என்று அழைக்கப் படுகிற இமாம் திர்மிதி ஆவார்.அவரது பெயராலேயே இந்நூல் திர்மிதி என்று அழைக்கப் படுகிறது. இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. [2]

தொகுக்கப்பட்ட வரலாறு

இமாம் திர்மிதி அவர்கள் ஹிஜ்ரி 250 இ.நா (கி.பி. 864) ல் ஹதீஸ் தொகுப்பு பணியை ஆரம்பித்து ஹிஜ்ரி 270 இ.நா (கி.பி. 884 ,ஜூன் 9) ல் தொகுத்து முடித்தார்கள்.

இமாம் திர்மிதி அவர்கள் பல்கு நகரில் பலகாலம் பல கலைகள் கற்றுத் தேர்ந்த பின்னர் பல அரேபிய தேசங்களில் பல காலம் பிரயாணஞ் செய்து பலரிடம் ஹதீஸுகளைக் கேட்டறிந்து ஹதீஸுக் கலையில் தேர்ச்சியுற்றார்கள். இமாம்களான புகாரி,முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், அபூதாவூத், குதைபா பின் ஸஃது, முஹம்மது பின் பஷ்ஷார், அஹ்மத் பின் முஸ்னீ, ஸுப்யான் பின் வகீஃ போன்ற அறிஞர்களிடம் ஹதீஸ்கள் கேட்டறிந்தார்.[3]

இந்நூல் 3,956 ஹதீஸ்களை கொண்டிருக்கிறது , ஐம்பது அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இது சுனன் ஹதீஸ் நூல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தலைப்பு

இமாம் திர்மிதி அவர்கள் தொகுப்பின் முழு தலைப்பு அரபு மொழி: الجامع المختصر من السنن عن رسول الله ومعرفة الصحيح والمعلول وما عليه العمل ஆகும்.தமிழில் "ஜாமி அல் முக்தசர் மின் அசுனன் அன் ரசூலுல்லாஹ் வ மஃபிரத் அல் சஹீஹ் வ மஃலூவ்ல் வமா அலைஹில் அமல்" என்பதாகும்.ஆனால் இது பொதுவாக திர்மிதி ஹதீஸ் நூல் என அழைக்கப் படுகிறது.[4]

மேற்கோள்கள்

  1. Jonathan A.C. Brown (2007), The Canonization of al-Bukhārī and Muslim: The Formation and Function of the Sunnī Ḥadīth Canon, p.10. Brill Publishers. ISBN 978-9004158399
  2. islamic-dictionary retrieved 10:06, 26 April 2010
  3. http://www.mailofislam.com/imam_tirmidhi_history_tamil.html
  4. Imam Tirmidhi and his Al-Jami’ al-Sunan: http://daruliftaa.com/node/7130
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.