திரு ஆனைக்கா உலா
திரு ஆனைக்கா உலா (திருவானைக்கா உலா) [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவரால் பாடப்பட்ட நூல்களில் ஒன்று. வெண்ணாவல் [2] மரத்தடியில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் உலா வருவதாகப் பாடும் பாடல் இது. இதில் 461 கண்ணிகளும் 2 வெண்பாக்களும் உள்ளன.
இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றதை ஆசிரியர் காளமேகப் புலவர் தலச்சிறப்பு கூறும் பகுதியில் குறிப்பிடுகிறார்.
அடிக்குறிப்பு
- மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
- நாவல் பழத்தின் நிறம் கறுப்பு. இது வெள்ளை நாவல் எனக் கூறப்படுவது விந்தை
- கண்ணி 222
- கண்ணி 217, 225
- கண்ணி 428 – 435
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.