திருக்குவளை
திருக்குவளை (ஆங்கிலம்:Thirukkuvalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்டத்தின் தலைமையிடம் ஆகும்.
திருக்குவளை Thirukkuvalai திருக்குவளை | |
---|---|
சிற்றூர் | |
![]() ![]() திருக்குவளை Thirukkuvalai | |
ஆள்கூறுகள்: 10°35′02″N 79°42′45″E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7.291 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,255 |
• அடர்த்தி | 580 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 610204[1] |
தொலைபேசி குறியீடு | 04365 |
வாகனப் பதிவு | TN 51 |
கல்வியறிவு | 80% |
மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
சட்டமன்றத் தொகுதி | நாகப்பட்டினம் |
இந்த ஊரானது இங்கு உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்காகவும், மு. கருணாநிதிக்காகவும் அறியப்படுகிறது. திருக்குவளையில்தான் மு. கருணாநிதி பிறந்தார். அவர் பிறந்த வீடானது தற்போது நூலகமாக பராமரிக்கப்படுகிறது.[2]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3674 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 1834 ஆண்கள், 1840 பெண்கள் ஆவார்கள். திருக்குவளை மக்களின் சராசரி கல்வியறிவு 21.48% ஆகும்.
2011, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை 4255 ஆகும். மேலும் இந்த ஊரில் 1161 குடும்பங்கள் வாழ்கின்றன, இதில் ஆண்கள் 2135, பெண்கள் 2120 ஆவர். இதன்படி பாலின விகிதமானது 993 என்று உள்ளது. மக்கள் தொகையில் 10.62 விழுக்காட்டினர் ஆறு வயதுக்குட்பட்டவர்களாவர். கல்வியறிவு விகிதம் 80.94 விழுக்காடாகும். கல்வியறிவில் ஆண்களின் விகிதம் 88.21 விழுக்காடாகவும், பெண்களின் விகிதம் 73.74 விழுக்காடாகவும் உள்ளது. கல்வியறிவு விகிதமானது ஏறக்குறைய மாநில விகித்தமான 80.09க்கு இணையானக உள்ளது.[4]
படத்தொகுப்பு
- திருக்குவளையிலுள்ள கருணாநிதி பிறந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி
- திருக்குவளையில் தமிழக முதல்வர் கருணாநிதி பயின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
- இன்று திருக்குவளையிலுள்ள கருணாநிதி பிறந்த வீட்டில் அமைந்துள்ள அஞ்சுகம் அம்மையார் அவர்களின் திருவுருவச்சிலை
மேற்கோள்கள்
- http://pincode.city/india/tamil-nadu/nagapattinam/tirukuvalai
- "கருணாநிதி மறைவு: திருக்குவளையில் பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி". செய்தி. தினமலர் (2018 ஆகத்து 8). பார்த்த நாள் 8 ஆகத்து 2018.
- Rural - Nagapattinam District;Thirukkuvalai Taluk;Thirukuvalai Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
- "Thirukuvalai Population - Nagapattinam, Tamil Nadu". 2011 Census of India.