தியாக பூமி (திரைப்படம்)

தியாக பூமி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பட்டம்மாள், வத்சலா ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். இப்படத்தின் கதையானது கல்கி எழுதிய தியாகபூமி புதினத்தை அடிப்படையாக கொண்டது.

தியாக பூமி
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
எம். யு. ஏ. சி
கதைகல்கி
இசைமோதி பாபு குழுவினர்
வெளியீடுமே 20, 1939
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

நடிகர்பாத்திரம்
பாபநாசம் சிவன்சம்பு சாஸ்திரி
கே. ஜே மகாதேவன்சிறீதரன்
ஜாலி கிட்டு ஐயர்ராஜாராமையர்
பி. ஆர். இராஜகோபாலய்யர்நல்லான்
சேலம் சுந்தர சாஸ்திரிதீட்சிதர்
எஸ். இராமச்சந்திர ஐயர்மேயர்
கோமாளி சாம்புசெவிட்டு வைத்தி
எஸ். ஏ. அய்யர் (இலங்கை)நீதிபதி
எஸ். டி. சுப்புலட்சுமிசாவித்திரி
பேபி சரோஜாசாரு
கே. எஸ். லலிதாராதா
கே. என். கமலம்மங்களம்

பாடல்கள்

தியாக பூமி திரைப்படத்தில் 17 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[1] மோதி பாபு குழுவினர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தனர்.[1]

பாடல்பாடியவர்(கள்)இராகம்-தாளம்குறிப்பு
பாரத புண்ய பூமி - ஜெயபாரத புண்யபூமிடி. கே. பட்டம்மாள்குந்தவராளி - ஆதிமுகப்புப் பாடல்
ஸ்ரீ ராமபத்ராபாபநாசம் சிவன் & குழுவினர்மாண்டு - ஆதி
பட்டாஸ் பட்டாஸ் பாரீர் பாரீர்எஸ். டி. சுப்புலட்சுமிசலோ சலோ மெட்டு
துன்புறவே எனைப் படைத்தஎஸ். டி. சுப்புலட்சுமிபியாக்தொகையறா
பிறவி தனிலே சூதினமிதேஎஸ். டி. சுப்புலட்சுமிஅஜபசுரத் மெட்டு
ஸ்ரீ ஜக தம்பிகையே தீன தயாபரி சங்கரிபாபநாசம் சிவன்லதாங்கி - ரூபகம்
நவ சித்தி பெற்றாலும் சிவ பக்தி இல்லாதபாபநாசம் சிவன்கரகரப்பிரியா - சாப்பு
சுருங்கார லகரிபாபநாசம் சிவன்நீலாம்புரி - ஆதி
தேடித் தேடி அலைந்தேனேபாபநாசம் சிவன்செஞ்சுருட்டி - ஆதி
வாழும் மனை உடல் ஆடைபாபநாசம் சிவன்விருத்தம்
கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்வத்சலாயமன் கல்யாணி - மிச்ரம்நடனம்[2]
உறவே பிரிந்தோமே நாமேவத்சலாஇந்துத்தானி நடனம்
ஜெய ஜெய ஜெய தேவிஎஸ். டி. சுப்புலட்சுமி, பேபி சரோஜாஇந்துத்தானி மெட்டு
சாகே தாதிப ராமா ராம விபோமீராகோப்ரபு மெட்டு
தேச சேவை செய்ய வாரீர்டி. கே. பட்டம்மாள்இந்துத்தானி மெட்டு[3]
சொல்லு காந்தி தாத்தாவுக்கு ஜே ஜே ஜேபேபி சரோஜாஇந்துத்தானி மெட்டு
பந்தமகன்று நம் திருநாடு உய்த்திட வேண்டாமோடி. கே. பட்டம்மாள்இந்துத்தானி மெட்டு[4]

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.