தி ஹெல்ப் (திரைப்படம்)

தி ஹெல்ப் என்பது 2011-ஆம் ஆண்டில் வெளியான ஆங்கிலத் திரைப்படம். இது கேத்ரின் ஸ்டாக்கெட் எழுதிய தி ஹெல்ப் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. அந்த நூலின் ஆசிரியையின் தோழராக இருந்த டேட் டெய்லர், இதன் இயக்குனர் ஆவார்.

தி ஹெல்ப்
இயக்கம்டேட் டெய்லர்
தயாரிப்புகிறிஸ் கொலம்பஸ்
மைக்கேல் பர்னதன் (Michael Barnathan)
புருன்சன் கிரீன்
மூலக்கதைதி ஹெல்ப் (நூல்)
திரைக்கதைடேட் டெய்லர்
இசைதாமஸ் நியூமேன்
நடிப்புஜெசிகா சேஸ்டைன்
வியோலா டேவிஸ்
பிரைஸ் டல்லாஸ்
அல்லிசன் ஜேன்னி
ஆக்டேவியா ஸ்பென்சர்
எம்மா ஸ்டோன்
ஒளிப்பதிவுஸ்டீபன் கோல்ட்பிளாட்
படத்தொகுப்புஹுயூக்ஸ் வின்போர்ன்
கலையகம்டச்ஸ்டோன் பிக்சர்ஸ்
டிரீம் வொர்க்ஸ் பிக்சர்ஸ்
ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்
பார்ட்டிசிபெண்ட் மீடியா
இமேஜினேஷன் அபு தாபி
1492 பிக்சர்ஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 10, 2011 (2011-08-10)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$25 மில்லியன்[1]
மொத்த வருவாய்$211,608,112[2]

ஸ்கீட்டர் பிலன் என்ற ஆங்கிலேயப் பெண்ணுக்கு, அவளுடனான இரண்டு ஆப்பிரிக்க வேலைக்காரப் பெண்களுக்குமான தொடர்பைப் பற்றிய கதை. அந்த இரு பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை கதையாக எழுத நினைக்கிறாள், ஊடகவியலாளராகிய வெள்ளைக்காரப் பெண்மணி.

இந்த கதை அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பியில் படமாக்கப்பட்டது. எம்மா ஸ்டோன், வியோலா டேவிஸ், ஆக்டேவியா ஸ்பென்சர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். சிறந்த துணை நடிகை, சிறந்த படப்பிடிப்பு, சிறந்த நடிகை ஆகிய விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றது. இது 2012 ஆம் ஆண்டிற்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதைப் பெற்றது.

கதை

ஐபிலீன் கிளார்க் என்ற கறுப்பின வேலைக்காரப் பெண்ணுக்கு ஐம்பது வயது. இவள் வெள்ளைக்காரக் குழந்தைகளை வளர்ப்பதிலேயே தன் வாழ்க்கையைக் கழிக்கிறாள். அண்மையில், தன் மகனை விபத்தில் பறிகொடுத்தவள். இவளது தோழி மின்னி ஜாக்சனும் கறுப்பின வேலைக்காரப் பெண். வால்டர்ஸ் என்ற பெண்ணின் வீட்டில் பணிபுரிகிறாள். ஸ்கீட்டர் பிலன் என்ற ஆங்கிலேய பெண், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வீடு திரும்புகிறாள். தன் அன்பிற்கு உரிய பணிப் பெண்ணைத் தேடுகிறாள். அவள் வேலையை விட்டு சென்றதாக அறிகிறாள். தனக்கு தெரிவிக்கப்படாததால் குழம்புகிறாள். ஸ்கீட்டர், எழுத்துத் துறையில் ஆர்வம் மிக்கவள். உள்ளூர் பத்திரிக்கை ஒன்றில் வேலைக்கு சேர்கிறாள். இந்த நிலையில், ஆங்கிலேயர்கள், அவர்களின் கறுப்பின வேலைக்காரப் பெண்களிடம் கொண்டுள்ள எண்ணத்தைக் கண்டு வருந்துகிறாள். இதைப் பற்றி எழுத நினைக்கிறாள்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.