தி ஹெல்ப்

தி ஹெல்ப் (The Help) கேத்ரின் ஸ்டாக்கெட் என்னும் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் எழுதிய புதினம். இது அமெரிக்காவின் மிசிசிப்பி நகரில் உள்ள வீடுகளில் பணியாற்றும் ஆப்பிரிக்க பெண்களைப் பற்றிய கதை. இது 35 நாடுகளில், மூன்று மொழிகளில் வெளியானது[1]. இதன் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இது அதிகம் விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் இடம் பெற்றது[2][3].

தி ஹெல்ப்
நூலாசிரியர்கேத்ரின் ஸ்டாக்கெட்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வகைபுதினம்
வெளியீட்டாளர்பென்குவின் புக்ஸ்
வெளியிடப்பட்ட திகதி
பெப்ரவரி 10, 2009
ஊடக வகைகடின அட்டை
பக்கங்கள்464
ISBN0-399-15534-1
813/.6 22 ,
LC வகைPS3619.T636 H45 2009

கதை

இந்த கதை மூன்று நபர்களைப் பற்றியது. ஐபிலீன் கிளார்க், மின்னி ஜாக்சன், ஸ்கீட்டர் பிலான் ஆகிய மூவரின் வாழ்க்கையில் சந்தித்த இன வெறித் தாக்குதல் பற்றியது.

திரைப்படம்

இந்த கதையினால் உந்தப்பட்ட, ஆசிரியரின் நண்பரான டேட் டெய்லர், இதை திரைப்படமாக்க முனைந்தார்[4]. அதைத் தொடர்ந்து, மிசிசிப்பி நகரின் பாகங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

84வது அகாதமி அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் போது, இந்த படத்தில் நடித்த ஆக்டேவியா ஸ்பென்சர், சிறந்த துணை நடிகையாகத் தேர்வானார். இந்தப் படம், சிறந்த படப்பிடிப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை ஆகிய பிற மூன்று விருதுகளையும் பெற்றது.

விருதுகளும் சிறப்புகளும்

  • நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட "அதிகம் விற்கப்பட்ட நூல்கள்"
  • அமேசானின் 2009 ஆம் ஆண்டின் சிறந்த நூல்
  • ஆரஞ்சு பிரைஸ் லாங்லிஸ்ட்
  • நாவலுக்கான எக்ஸ்குளூசிகவ் பிரைஸ்

சான்றுகள்

  1. Kehe, Marjorie (May 14, 2010). "With book sales still strong, 'The Help' will begin filming". Christian Science Monitor. http://www.csmonitor.com/Books/chapter-and-verse/2010/0514/With-book-sales-still-strong-The-Help-will-begin-filming. பார்த்த நாள்: 2010-05-26.
  2. Williams, Wyatt. "Kathryn Stockett: Life in the belle jar". Creative Loafing Atlanta. பார்த்த நாள் 4 August 2011.
  3. D'Souza, Karen. "'The Help' is poised to become chick flick of the summer". San Jose Mercury News. பார்த்த நாள் 4 August 2011.
  4. Fleming, Michael (15 December 2009). "Chris Columbus fast-tracks 'Help'". Variety (magazine). http://www.variety.com/article/VR1118012807.html?categoryid=1238&cs=1.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.