தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2

தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 2014ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க திரைப்படம். இது 2012ம் ஆண்டு வெளி வந்த தி அமேசிங் ஸ்பைடர் - மேன் எனும் திரைப்படத்தின் தொடர்ச்சிப் படம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்க் வெப் இயக்க, ஆண்ட்ரூ கார்பீல்ட், எம்மா ஸ்டோன், டேன் டிஹான், ஜேமி ஃபாக்ஸ், காம்ப்பெல் ஸ்காட் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2
இயக்கம்மார்க் வெப்
திரைக்கதைஅலெக்ஸ் குர்ட்ஸ்மேன்
ராபர்டோ ஆர்சி
ஜெபிப் பின்க்நேர்
இசைஹான்சு சிம்மெர்
நடிப்புஆண்ட்ரூ கார்பீல்ட்
எம்மா ஸ்டோன்
டேன் டிஹான்
ஜேமி ஃபாக்ஸ்
காம்ப்பெல் ஸ்காட்
ஒளிப்பதிவுடேனியல் மின்டேல்
படத்தொகுப்புபிட்ரோ ச்காலியா
எலியட் கிரகாம்
கலையகம்மார்வெல் என்டெர்டைன்மென்ட்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுமே 2, 2014.
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

கதைச்சுருக்கம்

பீட்டரின் தந்தை ஒரு மருந்தை கண்டு பிடிகிற்றார். இவர் கண்டுபிடித்த அந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்பதால் தன்னுடைய கண்டுபிடிப்பை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார். ஒருவிபத்தில் இறந்தும் போகிறார். இந்நிலையில், பீட்டர், வளர்ந்து பெரியவனாகிறான். ஸ்பைடர்மேனாக மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பீட்டருடைய அப்பா வேலை செய்த ஆராய்ச்சி மையத்தில் எலக்ட்ரானிக் என்ஜினியராக பணியாற்றி வரும் மேக்ஸ், தவறுதலாக அங்கிருந்த ஒரு ஆராய்ச்சி நீர்த்தொட்டிக்குள் விழுந்து விடுகிறார். இதனால் அவர் ஒரு மின்சார மனிதனாக உருவெடுக்கிறார்.

இந்த நிலையில் பீட்டரின் சிறுவயது நண்பன் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரின் மகனுமான டேன் டிஹான் கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறான். இதற்கு மாற்று மருந்தாக பீட்டருடைய அப்பா, ஆராய்ச்சி செய்து வைத்திருந்த மருந்து பற்றி கேள்விப்படுகிறான். அது மர்மமான இடத்தில் மறைக்கப்பட்டிருப்பதை அறியும் அவன், அதை மேக்ஸின் உதவியுடன் கைப்பற்றுகிறான். அந்த மருந்தை தன் உடம்பில் ஏற்றிக்கொள்ளும் ஆராய்ச்சி மைய தலைவரின் மகன் வித்தியாசமான தோற்றத்துடன் உருவெடுக்கிறான். இருவரும் சேர்ந்து ஸ்பைடர் மேனை கொல்ல முடிவெடுக்கின்றனர். இதற்காக இவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளை ஸ்பைடர் மேன் முறியடித்து மக்கள் மனதில் நீங்க இடம்பிடிக்கிறார். இறுதி கண்டயுத்தத்தில் பீட்டரின் காதலி எம்மா ஸ்டோன் இறக்க, வில்லனான டேன் டிஹான் கைது செய்யப்படுகின்றான்.

நடிகர்கள்

நடிகர்களின் நடிப்பு

ஸ்பைடர் மேனாக நடித்திருக்கும் ஆண்ட்ரூ கார்பீல்டு துடிப்பான இளைஞராக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், எதிரிகளிடம் சண்டை போடும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி எம்மா ஸ்டோன் நாயகனுடன் காதல் செய்யும் காட்சிகளிலும், இறுதிக் காட்சியிலும் திறமையாக நடித்திருக்கிறார். நண்பர் மற்றும் வில்லனாக நடித்திருக்கும் டேன் டிஹான் தனது கதாபாத்திரத்தை நன்றாக நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.