சிட்னி மொழி

சிட்னி மொழி (Sydney Language) ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் ஓர் அழிந்த மொழியாகும். இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் பேசப்பட்டு வந்தது. இம்மொழி தாருக் மொழி எனவும் அழைக்கப்படுகிறது.

சிட்னி மொழி
பிராந்தியம்நியூ சவுத் வேல்ஸ்,  ஆத்திரேலியா
Extinct19ம் நூற்றாண்டின் கடைசி/20ம் நூற்றாண்டின் முற்பகுதி
பாமா-நியூங்கன்
  • யூவின்-கியூரிக்
    • சிட்னி மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2aus
ISO 639-3

இம்மொழியைக் கடைசியாகப் பேசியவர் 19ம் நூற்றாண்டின் கடைசி அல்லது 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இம்மொழி பேசிய தாருக் மக்களின் இனம் ஆங்கிலேயர்களின் குடியேற்றத்தை அடுத்து குறைந்து முற்றாக அழிந்து போயிற்று[1].

இன்று பிற மொழிகளில் வழக்கிலேறி வாழும் சில சொற்கள்

இன்று ஆங்கிலத்தில் வழக்கிலுள்ள சில தாருக் மொழி சொற்கள் வருமாறு:

  • விலங்குகளின் பெயர்கள்: டிங்கோ, கோவாலா, வாலபி
  • மரங்களும் தாவரங்களும்: புராவாங்கு (burrawang), குராசோங்கு (kurrajong), வராட்டா
  • ஆயுதங்கள்: பூமராங், வூமெரா[2]
  • இடங்கள்: மல்கோவா, டூன்காபி, வின்மாலி

குறிப்புகள்

  1. Troy (1994): p. 5.
  2. boomerang.org.au; see under "The Origin of Boomerang". Retrieved 16 January 2008.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.