தாராவி

மும்பையில் அமைந்துள்ள தாராவி, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய குடிசைக் குடியிருப்பு (slum) அல்லது சேரிப்பகுதி ஆகும்.[1] இது தோல் தொழிலுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு மொத்த மக்கள் தொகை 600,000 ஆகும். தாராவியின் மேற்குப்பகுதியில் மாகிம் இரயில் நிலையமும் கிழக்குப் பகுதியில் சயான் இரயில் நிலையமும் இருப்பதால், மும்பையின் மேற்குக் கடற்கரையில் இருக்கும் இடங்களுக்கும் வாசி மற்றும் தானே ஆகிய மையப் பகுதிக்கும் மிக எளிதாக சென்று வர முடியும்.

தாராவி
धारावी
Neighbourhood
சியோன் - மாகிம் சாலையிலிருந்து தாராவிக்குச் செல்லும் நுழைவாயில், 2009
நாடுஇந்தியா
Stateமகாராட்டிரம்
பெரு நகரம்மும்பை
Languages
  Officialமராத்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400017
தொலைபேசி குறியீடு எண்022
வாகனப் பதிவுMH-02
மாநகராட்சிபெருநகர மும்பை மாநகராட்சி

தாராவியில் அங்குள்ள சேரிவாழ் மக்களைக் கொண்டு பல குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன.  [2] இங்கு தோல் பொருட்கள், மட்பாண்டங்கள், துணி வகைகள் முதன்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் வணிகத்தின் அளவு 1 பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் என்று மதிப்பிடப்பட்டள்ளது.[3]

வரலாறு

18-ஆம் நூற்றாண்டில் தாராவி பெரும்பாலும் மாங்குரோவ் எனப்படும் சதுப்புநிலக்காடுகளைக் கொண்ட ஒரு தீவாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்காங்கே கோலி இன மீனவ மக்கள் வாழ்ந்து வந்தனர்.[4][5]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Dharavi in Mumbai is no longer Asia's largest slum
  2. Ahmed, Zubair (20 October 2008). "Indian slum hit by New York woes". BBC News. http://news.bbc.co.uk/2/hi/business/7676337.stm. பார்த்த நாள்: 1 May 2010.
  3. "Jai Ho Dharavi". Nyenrode Business Universiteit. பார்த்த நாள் 5 March 2010.
  4. Mark Jacobson (May 2007). "Dharavi Mumbai's Shadow City". National Geographic. http://www7.nationalgeographic.com/ngm/0705/feature3/.
  5. Weinstein, Liza (June 2014). Globalization and Community, Volume 23 : Durable Slum : Dharavi and the Right to Stay Put in Globalizing Mumbai. Minneapolis, MN, USA: University of Minnesota Press. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780816683109.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.