டாப்சி பன்னு

டாப்சி பன்னு (பிறப்பு: 1987 ஆகத்து 1) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் நுழைந்தார். இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

டாப்சி பன்னு
சாஸ்மி பட்டூர் திரைப்படத்தின் இசைவெளியீட்டில் டாப்சி
பிறப்புடாப்சி பன்னு
1 ஆகத்து 1987 (1987-08-01)[1][2]
தில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்டப்சி
பணிநடிகை, வடிவழகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010–இற்றை
வலைத்தளம்
www.taapsee.me

திரைப்படவிபரம்

ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள்
2010 சும்மாண்டி நாதம் ஸ்ராவ்யா தெலுங்கு
2011 ஆடுகளம் ஐரின் தமிழ்
2011 வஸ்டாடு நா ராஜு பூஜா தெலுங்கு
2011 டபுள்ஸ் சாய்ரா பானு மலையாளம்
2011 மிஸ்டர். பேர்பெக்ட் மாகி தெலுங்கு
2011 வீரா ஐக்கி தெலுங்கு
2011 வந்தான் வென்றான் அஞ்சனா தமிழ்
2011 மோகுடு ராஜ ராஜேசுவரி தெலுங்கு
2012 தராவு சுவேதா தெலுங்கு
2013 குண்டெல்லோ கோதாரி / மறந்தேன் மன்னித்தேன் சரளா தெலுங்கு / தமிழ்
2013 சாஸ்மி பட்டூர் சீமா இந்தி
2013 சாடேவ் தெலுங்கு படப்பிடிப்பில்
2013 வலை தமிழ் படப்பிடிப்பில்
2013 முனி 3: கங்கா தமிழ்/தெலுங்கு படப்பிடிப்பில்

சான்றுகள்

  1. August 1st, 20121 Comment (2012-08-01). "Tapsee Pannu birthday - Get Latest News & Movie Reviews, Videos, Photos of Tapsee Pannu birthday at". Bollywoodlife.com. பார்த்த நாள் 2013-04-11.
  2. Moviebuzz. "Happy Birthday to Taapsee". Sify Technologies Ltd. பார்த்த நாள் 23 January 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.