தாபோர் மலை
தாபோர் மலை (Mount Tabor, எபிரேயம்: הַר תָּבוֹר, தற்கால Har Tavor திபேரியம் Har Tāḇôr, Arabic: جبل الطور, Jabal aṭ-Ṭūr, Greek: Όρος Θαβώρ) என்பது இசுரேலின் கீழ் கலிலேயாவில் யெசுரியேல் பள்ளத்தாக்கின் கிழக்கு முடிவில், மேற்கு கலிலேயக் கடலிலிருந்து 11 மைல்கள் (18 km) தொலைவில் உள்ளது. கி.மு. 12ம் நூற்றாண்டின் மத்தியில், இப்பகுதியில் இசுரயேலிய நீதிபதி தெபோரா தலைமையின் கீழ் பாராக்கிற்கும் சிசாரா தலைமையின் கீழான யபீன் படைகளுக்குமிடையில் "தாபோர் மலை சண்டை" இடம் பெற்றது. இங்கு இயேசுவின் உருமாற்றம் இடம்பெற்றதாக பல கிறித்தவர்களால் நம்பப்படுகின்றது.[1] இம் மலை உருமாற்ற மலை எனவும் அழைக்கப்படுகின்றது.
தாபோர் மலை | |
---|---|
![]() | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 575 m (1,886 ft) |
புவியியல் | |
![]() ![]() தாபோர் மலை கீழ் கலிலேயா, இசுரேல் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.