தரிந்து கௌசல்

பஸ்குவால் ஹன்டி தரிந்து கௌசல் (Paskuwal Handi Tharindu Kaushal, பிறப்பு: 5 மார்ச் 1993) இலங்கை துடுப்பாட்ட வீரர். வலக்கைப் புறந்திருப்பப் பந்து வீச்சாளரான இவர் வலக்கைத் துடுப்பாட்டக் காரரும் ஆவார்.[1] கோல்ட்சு துடுப்பாட்ட அணியில் இவர் தனது முதலாவது பட்டியல் அ ஆட்டத்தை விளையாடினார்.[2] தனது முதலாவது தேர்வுப் போட்டியை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2014 டிசம்பர் 26 இல் விளையாடினார்.[3]

தரிந்து கௌசல்
Tharindu Kaushal
இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் பஸ்குவல் ஹன்டி தரிந்து கௌசல்
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கைப் புறத்திருப்பம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2012– நொன்டெஸ்கிறிப்ட்சு அணி
முதல் மு.த 1 பெப்ரவரி 2013: நொன்டெஸ்கிறிப்ட்சு  குருணாகல் இளையோர்
முதல் ப.அ 9 டிசம்பர் 2012: நொன்டெஸ்கிறிப்ட்சு  கோல்ட்சு
அனைத்துலகத் தரவுகள்
தேமு.தப.அ
ஆட்டங்கள் 1 31 29
ஓட்டங்கள் 18 731 111
துடுப்பாட்ட சராசரி 9.00 24.36 11.10
100கள்/50கள் 0/0 0/5 0/0
அதியுயர் புள்ளி 18 80 28
பந்துவீச்சுகள் 210 6105 1311
விக்கெட்டுகள் 2 182 49
பந்துவீச்சு சராசரி 103.50 22.04 18.34
5 விக்/இன்னிங்ஸ் 0 19 2
10 விக்/ஆட்டம் 0 5 n/a
சிறந்த பந்துவீச்சு 1/48 7/69 5/27
பிடிகள்/ஸ்டம்புகள்

மார்ச் 18, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ

2015 உலகக்கிண்ணப் போட்டிகளின் போது ரங்கன ஹேரத் காயமடைந்ததை அடுத்து கௌசல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 2015 மார்ச் 18 இல் சிட்னியில் விளையாடினார். இது இவரது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியாகும்.[4] இவ்வாட்டத்தில் தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

மேற்கோள்கள்

  1. "Player Profile: Tharindu Kaushal". ESPNcricinfo. பார்த்த நாள் 14 பெப்ரவரி 2013.
  2. "Premier Limited Over Tournament, Nondescripts Cricket Club v Colts Cricket Club at Colombo, டிசம்பர் 9, 2012". ESPNcricinfo. பார்த்த நாள் 14 பெப்ரவரி 2013.
  3. "Sri Lanka tour of Australia and New Zealand, 1st Test: New Zealand v Sri Lanka at Christchurch, Dec 26-30, 2014". ESPN Cricinfo. பார்த்த நாள் 26 டிசம்பர் 2014.
  4. "Uncapped offspinner Tharindu Kaushal replaces Herath, could play SA". ESPNcricinfo. ESPNcricinfo. பார்த்த நாள் 18 மார்ச் 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.