தம்பிரான் வணக்கம்

தம்பிரான் வணக்கம் 1578 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூலை என்றிக்கே என்றீக்கசு என்பவர் எழுதினார்.[1] தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம். இது தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ். நூல் பதித்த இடம் கொல்லம் என்றும், பதித்த நாள் 20.10.1578 என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம்.

தம்பிரான் வணக்கம்
தம்பிரான் வணக்கம் முதல் பக்கம்
நூலாசிரியர்என்றிக்கே என்றீக்கசு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வெளியிடப்பட்ட திகதி
1578

தமிழ் நூலின் முகப்புப் பக்கத்தில் மேலே DOCTRINA CHRISTAM en Lingua Malauar Tamul என்றுள்ளது. பக்கத்தின் நடுவில் மூவொரு கடவுள் (Trinity) வடிவம் பதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன. கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது. புள்ளிகள் இடப்படவில்லை; சொற்களும் பிரிக்கப்படவில்லை. எனவே, நூல் தலைப்பு இவ்வாறு தோற்றமளிக்கிறது:

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "தம்பிரான் வணக்கம்". பார்த்த நாள் 17 நவம்பர் 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.