தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவு

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கு எல்லையை அண்டி அனுராதபுர மாவட்டமும், கிழக்கில் கிண்ணியா, திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுகளும், தெற்கில் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. 226 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 12 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.

2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 28,356 ஆகும். பெரும்பான்மை முசுலிம்களைக் கொண்ட இப்பிரிவில், 16,164 முசுலிம்களும், 4,701 இலங்கைத் தமிழரும், 7,476 சிங்களவரும், வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் மிதமான மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 125 பேர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.