தமிழ்நாடு மாநிலங்களவைத் தேர்தல், 2013
2013 தமிழ்நாடு மாநிலங்களவைத் தேர்தல் என்பது தமிழகத்தின் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து சூன் 27, 2013 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் நான்கு உறுப்பினர்களும், சிபிஐ சார்பில் ராஜாவும், திமுக சார்பில் கனிமொழியும் வெற்றி பெற்றனர். தேமுதிக சார்பில் போட்டியிட்ட இளங்கோவன் தோல்வியடைந்தார்.
இத்தேர்தலில், இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ள மமகவும் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்தனர். இத்தேர்தலை பாமக புறக்கணித்தது. தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது.
தமிழ்நாடு மாநிலங்களவைக்கு 17 ஆண்டுக்குப் பிறகு போட்டி நிலவியது.[1]
தேர்தல் வழக்குகள்
- குதிரைப் பேரம் நடப்பதாகக் கூறி வாக்குப் பதிவை நிறுத்த வேண்டும் என்று பத்திரிகையாளர் பி.ஜி.சத்யாலயா ராமகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[2]
- சட்டமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அவர்கள் வாக்களிக்க தடையில்லை என்று அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
தேர்தலுக்கு பிந்தைய நிகழ்வுகள்
மேற்கோள்கள்
- "State will witness contest in RS elections after 17 years". த இந்து. சூன் 20, 2013. http://www.thehindu.com/news/national/tamil-nadu/state-will-witness-contest-in-rs-elections-after-17-years/article4833865.ece?ref=relatedNews. பார்த்த நாள்: சூன் 29, 2013.
- "மாநிலங்களவை தேர்தலை எதிர்க்கும் மனு தள்ளுபடி". தினமணி. சூன் 26, 2013. http://dinamani.com/tamilnadu/2013/06/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/article1652893.ece. பார்த்த நாள்: சூன் 29, 2013.
- "கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சூன் 29, 2013.
- "மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவு : சோனியாவை சந்தித்தார் கனிமொழி". தினமணி. சூன் 29, 2013. http://dinamani.com/latest_news/2013/06/29/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4/article1658955.ece. பார்த்த நாள்: சூன் 29, 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.