தமிழ்நாடு பாடநூல் கழகம்
தமிழ்நாடு பாடநூல் கழகம் (Tamilnadu Textbook Corporation) அல்லது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation), தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடபுத்தகங்களைத் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்.

இக்கழகம் 1970இல் மார்ச் 4ஆம் திகதி, தமிழ்நாடு பாடநூல் சங்கம் (Tamilnadu Textbook Society) என்னும் பெயரில் சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் (பதிவு எண்:1850) தமிழக அரசால் துவக்கப்பட்டது. பின்னர் 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பாடநூல் கழகம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. செப்டம்பர் 06, 2013 இலிருந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் என்ற பெயரில் செயற்பட்டு வருகிறது (பதிவு எண் G.O.(Ms)No.178)[1].
தமிழ்நாடு அரசு மூலம் அமைக்கப்படும் ஆளுநர் குழுவின் கீழ் இயங்குகிறது[2]. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் இக்கழகத்தின் தலைவராவார். தற்போது மேலாண் இயக்குநராக மைதிலி கே. இராசேந்திரன் (இந்திய ஆட்சிப் பணி) பொறுப்பு வகிக்கிறார். தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசுதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் விலையிலும் வழங்கப்படுகின்றன[3][4].