தமிழ் எண்ணிம நூலகம்
தமிழ் எண்ணிம நூலகம் அல்லது மின்னூலகம் என்பது எண்ணிம வடிவில் ஆக்கங்களைக் சேகரிக்து கணினி ஊடாக பயன்படுத்தக் கூடியவாறு வசதிகள் செய்யும் நூலகம் ஆகும். கணிகளில் நேரடியாகவோ, உள்ளக பிணையம் ஊடாகவோ, இணையம் ஊடாகவே இவை அணுகப்படத்தக்கவாறு வசதிகள் செய்யப்படலாம். முழுக்க முழுக்க தமிழ் அல்லது தமிழர் தொடர்பான ஆக்கங்களைக் கொண்ட எண்ணிம நூலகங்கள் தமிழ் எண்ணிம நூலகங்கள் எனப்படுகின்றன. தமிழிலும் ஆக்கங்கள் கொண்ட பல்வேறு எண்ணிம நூலகங்களும் உள்ளன.
தமிழ் எண்ணிம நூலகங்கள்
- மதுரைத் திட்டம் - பழந்தமிழ் இலக்கியங்கள், தற்கால நூல்கள்
- நூலகம் திட்டம் - ஈழத்து தமிழ் ஆக்கங்கள்
- தமிழ் இணையக் கல்விக்கழகம் - கலைக்களஞ்சியங்கள், இலக்கிய/இலக்கண படைப்புகள் -
- தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் - ஈழப் போராட்டம் தொடர்பான வெளியீடுகள் -
- திறந்த வாசிப்பகம் (எண்ணிம நூலகம்) - தற்கால தமிழ் இலக்கியப் படைப்புகள் -
தமிழ் ஆக்கங்கள் உள்ள எண்ணிம நூலகங்கள்
- சமண உலகம் தமிழ் (வலைத்தளம்) - சமண சமயம்
- பிரித்தானிய நூலக எண்மிய தமிழ்நூல் தொகுப்பு - பழைய தமிழ் நூல்கள்
- இணைய ஆவணகம் -
- இந்திய எண்ணிம நூலகம்
- முக்தபோத எண்ணிம நூலகம் - சைவ சமயம்
தற்போது செயற்படாத தமிழ் எண்ணிம நூலகங்கள்
- சென்னை நூலகம் - தமிழ் இலக்கியங்கள்
- தமிழம் எண்ணிம நூலகம் - தமிழ் சிற்றிதழ்கள், அரிய படைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.