தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் என்பது ஈழப் போராட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட பல்வேறு தமிழ் ஆக்கங்களை கொண்ட இலவச எண்மிய ஆவணக் காப்பகம் ஆகும். ஈழ இயக்கங்களும் பிறரும் வெளியிட்ட பல்வேறு துண்டறிக்கைகள், கொள்கை வெளியீடுகள், உரைகள், இதழ்கள், நூல்கள் ஆகியவை இங்கு உள்ளன. எல்லாவித கொள்கை உடையோரினதும் படைப்புகள் இங்கு சேக்கப்படுகின்றன. புலிகள் மீதான விமர்சனங்கள் சிறப்பாக கவனப்படுத்தப்படுகின்றன. இத் திட்டத்தை இடதுசாரி சார்பு உடைய அமைப்பு ஒன்று புலத்தில் இருந்து மேற்கொள்ளுகிறது.

நோக்கம்

"தம்மைத் தக்கவைக்க மக்களை இருட்டில் வைத்திருத்தல் தான், அன்றைய இயக்கங்கள் முதல் இன்று திடீர் மார்க்சியம் பேசுவோர் வரை கையாளும் அரசியல் உத்தி. இதை தகர்க்க, எல்லோரும் சுயமாக கற்றுக்கொள்வதும், விவாதிப்பதும், வரலாற்றை தெரிந்து கொள்வதும் அவசியம். இதற்கான எமது போராட்டமும், நீண்ட திட்டமிடல் ஊடாக, பல ஆவணங்களை திரட்டி வந்தோம்." என்று இந்த திட்ட அறிமுகம் கூறுகிறது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.