தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சி சேவையாகும். இது கிளிநொச்சி நகரிலிருந்து ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதன் நிர்வாகியாக போராளி கே. வீரா செயற்பட்டு வந்தார். தஇந்தத் தனது ஒளிபரப்பினை ஆகஸ்ட் 1 ம், 2005 இல் தென்கிழக்கு ஆசியாவில் தொடங்கியது.

பணி

இத் தொலைக்காட்சி ஈழ விடுதலையின் அவசியத்தை உலகளாவிய தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை செய்து வந்தது. இலங்கை இராணுவத்தின் படை முன்னெடுப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் செய்தியாக வெளியிட்டு ஈழ மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து வந்தது. இத் தொலைக்காட்சியில். விடுதலைப் புலிகளின் நிதர்சனம், ஒளிவீச்சு போன்ற பிரிவுகளால் தயாரிக்கப்படும் குறும்படங்கள், ஆவணப்படங்கள், மாவீரர் காணொளிகள், படைத் தளபதிகளின் செவ்விகள் போன்றவை ஒளிபரப்பப்பட்டு வந்தன.

நிதர்சனம்

ஒளிவீச்சு

ஒளிவீச்சு என்ற பிரிவு பல நேரடி சமர்களை படம் பிடித்து வெளியிட்டு வந்தது. உண்மையான காட்சிப் பதிவின் மூலம் பல ஆவணத் திரைப்படங்களை வெளியிட்டு வந்தது. இப்பிரிவில் இருந்த போராளிகள் சண்டை நடக்கும் பொழுது சக போராளிகளுடன் இணைந்து படப்பிடிப்பு செய்து வந்தவர்கள். இவர்களுள் இசைப்பிரியாவும் ஒருவர்.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.