தமிழகக் கலைகள் (நூல்)
தமிழகக் கலைகள் என்பது, தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த பல்வேறு கலைகள் பற்றி எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆகும். இந்நூலை வரலாற்றாளரும், தமிழறிஞருமான மா. இராசமாணிக்கனார் எழுதியுள்ளார். இந்நூலின் முதற் பதிப்பு 1959 ஆம் ஆண்டு சாந்தி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் மறுபதிப்பை 2009 ஆம் ஆண்டில் புலவர் பதிப்பகத்தினர் வெளியிட்டனர்.
தமிழகக் கலைகள் | |
---|---|
![]() | |
நூல் பெயர்: | தமிழகக் கலைகள் |
ஆசிரியர்(கள்): | மா. இராசமாணிக்கனார் |
வகை: | கலை |
துறை: | கலை |
காலம்: | பழங்காலம் முதல் தற்காலம் வரை |
இடம்: | தமிழ்நாடு |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 128 |
பதிப்பகர்: | சாந்தி பதிப்பகம், புலவர் பதிப்பகம் |
பதிப்பு: | 1959, 2009 |
நோக்கம்
இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்னும் புதிய பாடம் அறிமுகப் படுத்தப்பட்ட போது அதைக் கற்பிப்பதற்குத் தனி நூல் எதுவும் இருக்கவில்லை. இப்பாடத்துள் அடங்கிய தமிழகக் கலைகள் என்னும் பகுதியைக் கற்பதற்கு மாணவர்களுக்கு உதவுவதையும், தமிழார்வம் கொண்ட பொதுமக்களுக்குப் பயன்படுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.[1]
உள்ளடக்கம்
தமிழகத்தின் கலைகளுள் பதினொரு வகைக் கலைகள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்நூல் பின்வரும் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
- கலைகள்
- கட்டடக்கலை
- ஓவியக்கலை
- சிற்பக்கலை
- வார்ப்புக்கலை
- இசைக்கலை
- நடனக்கலை
- நாடகக்கலை
- மருத்துவக்கலை
- சமயக்கலை
- தத்துவக்கலை
- இலக்கியக்கலை
குறிப்புகள்
- இராசமாணிக்கனார், மா., 2009, பக். 4.
- இராசமாணிக்கனார், மா., 2009, பக். 8.
உசாத்துணைகள்
- இராசமாணிக்கனார், மா., தமிழகக் கலைகள், புலவர் பதிப்பகம், சென்னை, 2009.