தபால்தலை விபரப்பட்டியல்

தபால்தலை விபரப்பட்டியல் என்பது தபால்தலைகள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஒரு பட்டியல் ஆகும். அடிப்படையில் தபால்தலைகள் பற்றிய சில தகவல்களையும், அதன் விலை போன்றவற்றையும் உள்ளடக்கிய இப் பட்டியல் தபால்தலைகள் சேகரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் பெரிதும் பயன்படுகின்ற ஒன்றாக உள்ளது.

Cover of the 1996 Michel Catalog volume covering "Europa West"

ஆரம்பத்தில் இவ்விபரப்பட்டியல்கள் விற்பனையாளரின் விலைப் பட்டியலாகவே இருந்தன. இன்றும் சில விபரப்பட்டியல்கள் இதே நோக்கத்தையே முதன்மையாகக் கொண்டுள்ளன. தபால்தலை சேகரிப்பு வளர்ச்சியடைந்து வந்த காலத்தில் அதன் வளர்ச்சியோடு ஒட்டி, தபால்தலைகள் வெளியிடப்பட்ட திகதி, நிற வேறுபாடுகள் முதலிய சேகரிப்பாளர்களுக்குப் பயன்படக்கூடிய பல தகவல்களும் படிப்படியாக விபரப்பட்டியல்களில் சேர்க்கப்பட்டன.

உலகம் தழுவிய அளவில் தபால்தலைகளின் தகவல்களை உள்ளடக்கிய விபரப்பட்டியல்கள் மிகச் சிலவே:

இவ்வாறான விபரப்பட்டியல்களை வெளியிடுவது என்பது மிகப் பெரிய வேலையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் தபால்தலைகள் வெளியிடப்படுகின்றன. பழைய தபால்தலைகளின் விலைகளும் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும். விற்பனையாளர்கள் அல்லாத விபரப்பட்டியல் வெளியீட்டாளர்கள் விலைகளைப் பல விற்பனையாளர்களிடம் இருந்தும், தபால்தலை ஏல விற்பனைகளின் போதும் திரட்டிய தரவுகளைப் பயன்படுத்திக் கணிப்பார்கள்.

இத்தோடு விபரப்பட்டியல் வெளியீட்டாளர்கள், மேலதிக விபரங்களை உள்ளடக்கிச் சிறப்பு விபரப்பட்டியல்களையும் வெளியிடுவதுண்டு. நாடுகள் வாரியான விபரப்பட்டியல்கள் இவ்வாறானவை. மிச்சேல் ஜேர்மனியில் வெளியிடப்பட்ட தபால்தலைகளுக்கும், ஸ்கொட் ஐக்கிய அமெரிக்காவின் தபால்தலைகளுக்கும் சிறப்பு விபரப்பட்டியல்களை வெளியிட்டு வருகின்றன.

பல நாடுகள் அவற்றுக்கெனத் தேசிய விபரப்பட்டியல்களைக் கொண்டுள்ளன. இவற்றைத் தனியார் துறை வெளியிட்டாளர்களோ, சில சமயங்களில் தபால் சேவை நிறுவனங்களோகூட வெளியிடுவதுண்டு. எனினும் தபால்சேவை நிறுவனங்களால் வெளியிடப்படுபவை ஆரம்ப அல்லது அநுபவம் குறைந்த சேகரிப்பாளர்களுக்கே உகந்தவையாக இருப்பது வழக்கம். குறிப்பிடத்தக்க நாடுகள் வாரியான விபரப்பட்டியல்கள்:

இவற்றையும் பார்க்கவும்

  • தபால்தலை விபரப்பட்டியல்களின் பட்டியல்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.