தன அமராவதி

தன அமராவதி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ராமையாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன், பி. எஸ். சரோஜா, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

தன அமராவதி
இயக்கம்பி. எஸ். ராமையா
நடிப்புஎஸ். எம். குமரேசன்
வி. என். சுந்தரம்
சந்திரபாபு
பி. எஸ். சரோஜா
குமாரி என். ராஜம்
புளிமூட்டை ராமசாமி
வெளியீடுநவம்பர் 29, 1947
ஓட்டம்.
நீளம்14917 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜே. பி. சந்திரபாபு நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.[2]

பாடல்கள்

  • உன்னழகிற்கு இணை என்னத்தை சொல்வது (ஜே. பி. சந்திரபாபு)[3]
  • கண்டேனடி, உன் திருவருள், அழகை என்ற பாடல்களை பி. எஸ். சரோஜாவிற்காகப் பின்னணி பாடியவர் வைக்கம் சரஸ்வதி.[4]

உசாத்துணை

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 8 January 2017. https://web.archive.org/web/20170108052656/http://www.lakshmansruthi.com/cineprofiles/1947-cinedetails10.asp.
  2. "The tragic story of a comedian, J.P. Chandrababu". தி இந்து (17 ஜனவரி 2013). மூல முகவரியிலிருந்து 18 பெப்ரவரி 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 ஜனவரி 2017.
  3. TAMIL OLD--JP CHANDRABABU'S FIRST SONG--Unnazhakirkku inai(vMv)--DHANA AMARAVATHI 1947. 2015-08-04. Retrieved 2017-01-08 via யூடியூப்.
  4. "வைக்கம் சரஸ்வதி". பேசும் படம். சனவரி 1949.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.