எரிதல்
எரிதகவுள்ள பொருட்கள் தகனத் துணை வாயுவான ஒக்சிசன் முன்னிலையில் எரிந்து வெப்பத்தையும் வெளிச்சத்தையும் வெளிவிடல் தகனம் எனப்படும். எரிதலின் போது சக்தி வெளியேற்றப்படும். ஐதரோகாபன்கள் தகனமைந்து பொதுவாக காபனீரொக்சைட்டு, நீர் என்பவற்றைத் தரும்.

நிறை தகனத்தின் போது, பொருட்கள் தகனத்துணை வளிமத்துடன் சேர்ந்து சக்தியையும் வேதியியல் மீதிகளையும் தரும். தகனத் துணையியாக ஒக்சிசன் அல்லது புளோரின் காணப்படலாம். எ.கா:
- CH
4 + 2 O
2 → CO
2 + 2 H2O + சக்தி - CH2S + 6 F
2 → CF
4 + 2 HF + SF
6
உதாரணமாக ஏவுகணைகளில் ஐதரசன் மற்றும் ஒக்சிசன் தாக்கத்தில் ஈடுபட்டு சக்தி வழங்கப்படுகிறது. இங்கு நீராவி பக்கவிளைபொருளாகும்.
- 2H
2 + O
2 → 2 H2O(g) + வெப்பம்
தகனம் நடைபெறத் தேவையான நிபந்தனைகள்

- எரிதகவுள்ள பொருள் / எரிபொருள்.
திரவ எரிபொருட்கள் - மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல்
திண்ம எரிபொருட்கள் - மரம், [கரி], நிலக்கரி
- தகனத் துணை வாயு ஆக்சிசன்.
- எரிபொருள் எரிபற்றுநிலைக்கு வெப்பமேற்றப்படுதல்.
இந்த மூன்று நிபந்தனைகள் இருக்கையில் தகனத்திற்கான தொடர் தாக்கங்கள் நிகழும்.[1]
அப்போது நெருப்பு தோன்றும்.
தகனத்தின் வகைகள்
நிறை தகனம்
எரிபொருள் முழுமையாக தகனத்துணை வளியுடன் சேர்ந்து தகனமடைதல் நிறை தகனம் ஆகும். ஐதரோகாபன்கள் நிறைதகனத்துக்கு உள்ளாகும் போது காபனீரொட்சைட்டும் நீரும் விளைவுகளாகக் கிடைக்கும்.
குறை தகனம்
எரிபொருள், குறைந்தளவு தகனத்துணை வளி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் குறை தகனத்துக்குட்படும். இந்நிலையில் காபனோரொசைட்டு, காபன் துகள்கள் என்பனவும் எரியாத எரிபொருள் கலவையும் மீதிகளாகக் கிடைக்கும்.