டாங்கிரெக் மலைகள்

டாங்கிரெக் மலைகள் (Dângrêk Mountains, Chuor Phnom Dângrêk; தாய்: ทิวเขาพนมดงรัก, Thiu Khao Phanom Dongrak), என்பது கெமரில் உள்ள தாழ்பிரதேச மலைத்தொடர் ஆகும். இதன் சராசரி உயரம் 500 மீட்டர்கள். இம்மலைத் தொடர் கம்போடியா - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது. டாங்கிரெக்கின் பெரும் பகுதி வடக்கு கம்போடியாவில் உள்ளது. இதன் அதிகூடிய உயரம் கடல் மட்டத்தில் இருந்து 753 மீட்டர்கள் (2,470 அடி) ஆகும்.

தாய்லாந்தில் இருந்து டாங்கிரெக் மலைகளின் தோற்றம்

டாங்கிரெக் மலைகள் வடக்கு தாய்லாந்தில் மேக்கொங் ஆற்றிலிருந்து மேற்குத் திசையாக 200 மைல்கள் (320 கிமீ) தூரம் பரந்திருக்கிறது[1].

புகழ்பெற்ற கெமர் இந்து சிவன் கோயிலான பிரசாத் பிரா விகார் இம்மலைகளில் கம்போடிய எல்லையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.