ஜோசப் ஸ்டிக்லிட்சு

ஜோசப் ஸ்டிக்லிட்சு(ஆங்கிலம்:Joseph Eugene Stiglitz) ( பிப்ரவரி 9, 1943) 2001 ஆம் ஆண்டில் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசுபெற்ற அறிஞர் ஆவார். கொலம்பியாப் பல்கலைக் கழகப் பேராசிரியர். உலக வங்கியில் முதன்மைப் பொருளியல் அறிஞராக உள்ளார். பொருளியல் ஆலோசகர்கள் குழுவின் தலைவர், உலக வங்கியில் முதன்மைப் பொருளியல் நிபுணர், பொருளியல் ஆலோசகர்கள் குழுவின் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தவர்[2][3]. நாற்பதுக்கும் மேல் சிறப்பு முனைவர் பட்டங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களிடமிருந்து பெற்றுள்ளார்[4][5][6]. நியூயார்க் நகரில் வாழ்ந்து வருகிறார். 'உலகமயமாக்கலும் அதன் அதிருப்திகளும்' என்னும் அவருடைய நூல் 35 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜோசப் ஸ்டிக்லிட்சு
(Joseph Stiglitz)
இயற்பெயர்Joseph Eugene Stiglitz
பிறப்புபெப்ரவரி 9, 1943 (1943-02-09)
தேசியம்அமெரிக்கன்
நிறுவனம்கொலம்பியா பல்கலைக்கழகம்
துறைபருப்பொருளியல்,
பொதுப் பொருளியல்,
தகவற் பொருளியல்
கல்விமரபுநியூ கினெசுனியன் பொருளியல்
பயின்றகம்அம்மெர்சுடு கல்லூரி,
எம் ஐ டீ, சிக்காகோ பல்கலைக்கழகம்
தாக்கம்ஜான் மேனார்ட் கெயின்ஸ், இராபர்ட் சோலோ,
ஜேம்சு மிர்லிசு
தாக்கமுள்ளவர்பால் கிரக்மேன்,
ஜேசன் பர்மேன்,
டெப்னி கிரிஃவித்-ஜோன்சு,
அக்சு டிக்சன்
பங்களிப்புகள்கண்டறிதல் (பொருளியல்),
வரிவிதிப்பு, வேலைவாய்ப்பின்மை
ஆய்வுக் கட்டுரைகள்

பிறப்பும் படிப்பும்

அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாநிலத்தின் கேரியில் யூதக் குடும்பத்தில் பிறந்தார்[7]. இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கினார். 1965-1966 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து பயின்றார். படிக்கும்போதே மாசசூட்சு தொழில் நுட்பக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1966 முதல் 1970 வரை கேம்பிரிச்சு பல்கலைக் கழகத்திலும் ஆராய்ச்சி மாணவராக இருந்து படித்தார்.

ஸ்டிக்லிட்சின் பொருளியல் கருத்துகள்

சம்பளத்திறன் குறித்தப்படம்
  • உலகமயமாக்கல் பல நாடுகளுக்குப் பயனளித்தபோதும் அதனைச் செயல்படுத்தும் வகையில் குறைகள் உள்ளன.
  • உலக நாணய நிதியமும் உலக வங்கி போன்ற நிதி அமைப்புகளும் அவ்வவ் நாடுகளின் அவ்வவ் சிக்கல்களை ஆராயாமல் பொதுவான தீர்வுகளுடன் அணுகுவது தவறு.
  • அந்நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய நிதி அமைப்புக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முனைந்து வருகின்றன.ஏழை நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்குப் போதுமான அளவு கவனம் செலுத்துவதில்லை.
  • சந்தைப் பொருளாதாரமும் போட்டிச் சந்தைகளும் நாடுகளின் வளர்ச்சிக்கு உதவி புரியக் கூடியவை. ஆனால் அரசுகள் அவற்றை ஒழுங்குப் படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும்.அதுமட்டுமல்லாமல் கண்காணிப்பும் தேவை.
  • அதிகாரமும் வல்லாண்மையும் கொண்ட சிலர் சந்தைப் பொருளியல் நிலைமைகளாலும் வரிவிலக்குகள் போன்ற சலுகைகளாலும் திரண்டு வரும் செல்வத்தைத் தம்மிடம் குவித்துக் கொள்கிறார்கள். இதனால் சந்தைப் பொருளாதாரம் வலுவிழந்து போகிறது.
  • அமெரிக்க நாடு "எல்லாருக்கும் சம நீதி" என்கிற அளவில் இல்லாமல் பார பட்சமாக நடந்து கொள்கிறது.
  • உள் கட்டமைப்புகளிலும் கல்வியிலும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் முதலீடுகளைப் பெருக்குதல் வேண்டும்.இலையெனில் உலகப் பொருளாதார வளர்ச்சி தடைப் படும்.

பதவிகளும் சிறப்புகளும்

  • 1995-1997 ஆண்டுகளில் கிளின்டன் நிருவாகத்தில் பொருளியல் ஆலோசகர்களின் குழுவில் தலைமைப் பதவியில் ஸ்டிக்லிட்சு பணி புரிந்தார்.
  • 1997-2000ஆண்டுகளில் உலக வங்கியின் முதன்மைப் பொருளியல் நிபுணராகப் பணியாற்றினார்.
  • 2008 அக்டோபரில் ஒன்றிய நாடுகள் அமைப்பின் பொதுக்குழு ஸ்டிக்லிட்சு தலைமையில் ஒரு குழுவை அமர்த்தியது. அக்குழு அப்போது நிலவிய உலக நிதி நெருக்கடிகளுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து ஓர் அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையை 'ஸ்டிக்லிட்சு அறிக்கை 'என்று அழைத்தனர்.
  • 2011இல் பாரீன் பாலிசி என்னும் ஓர் இதழ் மிகச் சிறந்த உலகச் சிந்தனையாளர்களில் இவர் பெயரைக் குறிப்பிட்டு சிறப்பித்தது.
  • அது போலவே டைம்சு என்னும் இதழும் ஸ்டிக்லிட்சு பெயரை உலகின் நூறு செல்வாக்கு மனிதர்களின் வரிசையில் சேர்த்து கௌரவித்தது.
  • 2011ஆம் ஆண்டு முதல் 2014 வரை பன்னாட்டுப் பொருளியல் கழகத்தில் தலைவர் பதவியில் ஸ்டிக்லிட்சு இருந்து வருகிறார்.

விருதுகள்

  • நோபல் பரிசும் சான் பேட்ஸ் மெடலும் இவர் பெற்றார்.
  • லோயப் பரிசு, ஐரோப்பிய இலக்கியப் பரிசு புருனோ கிரிச்கி பரிசு இராபர்ட்டு எப் கென்னடி புக் விருது ஆகியனவும் இவர் பெற்றார்.

முக்கிய நூல்கள்

ஏறத்தாழ முப்பது நூல்கள் எழுதியுள்ளார்.அவற்றில் சில:

  • Globalisation and its discontents (2002)
  • Making Globalaisation Work 2006)
  • The Three Trillion Dollar War (2008)
  • Freefall: America,Free Markets and Sinking of the World (2010)
  • The Price of Stability (2012)

ஊடகங்கள்

மேற்கோள்கள்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.