ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம்
ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம் (Jayashankar Bhupalpally district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [1][2][3] இம்மாவட்டம் நவம்பர் 2016-இல் வாரங்கல் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்டது. [4]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பூபாளபள்ளி நகரம் ஆகும்.

புவியியல்
ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டம் 6,175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [5]இம்மாவட்டத்தின் வடக்கில் மகாராட்டிராவின் கட்சிரோலி மாவட்டமும், வடகிழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டமும், கிழக்கில் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டமும், தெற்கில் மகபூபாபாத் மாவட்டமும், மேற்கில் வாரங்கல் கிராமபுற மாவட்டம் மற்றும் பெத்தபள்ளி மாவட்டங்களும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தின் மக்கள் தொகை 7,50,000 ஆக உள்ளது. [5]
மாவட்ட நிர்வாகம்
ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டம், பூபாளபள்ளி மற்றும் முலுக் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய்க் கோட்டங்களையும், 15 மண்டல்களையும் கொண்டுள்ளது.
வருவாய் வட்டங்கள்
ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்;[6]
# | பூபாளபள்ளி வருவாய் கோட்டம் | # | முலுக் வருவாய்க் கோட்டம் |
---|---|---|---|
1 | பூபாளபள்ளி | 1 | எட்டூருநகரம் |
2 | சித்தியால் | 2 | கோவிந்தராவ் பேட்டை |
3 | கான்பூர் | 3 | மங்காப் பேட்டை |
4 | கட்டாராம் | 4 | முலுக் |
5 | மகாதேவபுரம் | 5 | தாட்வை |
6 | மகா முத்தாராம் | 6 | வஜேடு |
7 | மல்கர்ராவ் [ | 7 | வெங்கட்பூர் |
8 | மொகுலப்பள்ளி | 8 | கன்னைகூடம் |
9 | பளிமேலா | 9 | வெங்கடபுரம் |
10 | ரேகொண்டா | ||
11 | தேகுமாத்லா |
சட்டமன்றத் தொகுதிகள்
இம்மாவட்டம் பூபாளபள்ளி, மந்தனி, முலுக் (தனி) என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [7]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016.

- "Komaram Bheem Asifabad district". பார்த்த நாள் 11 October 2016.
- Rao, Gollapudi Srinivasa (1 November 2016). "Rs.90 crore for new tourism circuit" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/telangana/rs90-crore-for-new-tourism-circuit/article9290184.ece. பார்த்த நாள்: 4 November 2016.
- http://newdistrictsformation.telangana.gov.in/uploads/gos-circulars/1476130276325233.Jayashankar.pdf
- "Jayashankar district map". பார்த்த நாள் 22 August 2016.