ஜெனிபர் அனிஸ்டன்

ஜெனிபர் ஜோவான்னா அனிஸ்டன் (Jennifer Joanna Aniston, பிறப்பு: 1969 பிப்ரவரி 11) ஒரு அமெரிக்க நடிகை ஆவார். அவர் 1990களில் அமெரிக்க நகைச்சுவைத் தொடரான (US sitcom) பிரண்ட்ஸ் (Friends) தொடரின் ரேச்சல் கிரீன் கதாப்பாத்திரத்தின் மூலமாகப் பிரபலமானார். அந்தக் கதாப்பாத்திரத்திற்காக அவர் ஒரு எம்மி விருது, ஒரு கோல்டன் குளோப் விருது மற்றும் ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.

ஜெனிபர் அனிஸ்டன்

இயற் பெயர் ஜெனிபர் ஜொவான்னா அனிஸ்டன்[1][2]
பிறப்பு பெப்ரவரி 11, 1969 (1969 -02-11)
சேர்மன் ஓக்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தொழில் நடிகை, வெளியீட்டாளர், இயக்குனர்
நடிப்புக் காலம் 1989–இன்று
துணைவர் பிராட் பிட்(2000–2005)

அவர் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அவரின் பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் புரூஸ் ஆல்மைட்டி , ஆபிஸ் ஸ்பேஸ் , ரூமர் ஹேஸ் இட் , மேலும் காதல் நகைச்சுவைகளான அலாங் கேம் பால்லி மற்றும் த பிரேக்-அப் போன்று நகைச்சுவைகளையே கொண்டிருந்தன. அவர் நகைச்சுவைத் திகில் படமான லெப்ரேசௌன் (Leprechaun) மற்றும் கிரைம் திரில்லரான டிரெய்ல்டு (Derailed) போன்ற மற்ற கலைவடிவான திரைப்படங்களிலும் தோன்றியிருக்கின்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

ஜெனிபர் அனிஸ்டன் கலிபோர்னியாவில் ஷேர்மன் ஓக்ஸ் என்ற இடத்தில் பிறந்து நியூயார்க் நகரத்தில் வளர்ந்தார்.[3] இவர் நடிகர் ஜான் அனிஸ்டன் மற்றும் நடிகை நான்சி டவ் ஆகியோரின் மகளாவார்.[4] அனிஸ்டனின் தந்தை ஒரு கிரீக் அமெரிக்கர் ஆவார், அவர் கிரேக்க நாட்டின் க்ரீட் தீவிலுள்ள யானிஸ் அனஸ்டாஸ்சகிஸில் பிறந்தார். அவரது தாய் நியூயார்க் நகரில் பிறந்த இத்தாலிய ஸ்காட்டிஷ் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார்.[5] அனிஸ்டன் ஜான் மெலிக் (மூத்தவர்) மற்றும் அலெக்ஸ் அனிஸ்டன் (இளையவர்) என்ற இரண்டு சகோதரர்களைக் கொண்டிருக்கின்றார்.[3][4] அவரது தந்தையின் சிறந்த நண்பரான நடிகர் டெல்லி சவலாஸ்† அனிஸ்டனின் வழிகாட்டியாக இருந்தார்.[3][4] அவர் குழந்தையாக இருக்கும்போது தனது குடும்பத்துடன் ஒரு வருடம் கிரேக்கத்தில் இருந்தார். பின்னர் அவர்கள் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தனர்.[4] அவரின் தந்தை சோப் ஓப்பரா தொடர்களான டேஸ் ஆப் அவர் லைவ்ஸ் , லவ் ஆப் லைப் மற்றும் சர்ஜ் பார் டுமாரோ ஆகியவற்றில் தோன்றினார்.[4] அனிஸ்டன் நியூயார்க்கிலுள்ள ரூடால்ப் ஸ்டெயினர் பள்ளியில்[6] பயின்றார். மேலும் இசை & கலை மற்றும் நடிப்புக் கலைக்கான மான்ஹாட்டனின் பியோரெல்லோ எச். லாகார்டியா உயர்நிலைப் பள்ளியிலிருந்தும் பட்டம் பெற்றார்.[3] அவர் பார் டியர் லைப் மற்றும் டான்சிங் ஆன் செக்கர்ஸ் க்ரேவ் போன்ற ஆப் பிராட்வே (Off Broadway) தயாரிப்புகளில் பணியாற்றினார்.[4] அவர் தொலைபேசிவழி விற்பனையாளர் (Telemarketer) மற்றும் இருசக்கர வாகன தூதுவர் (Bike Messenger) உள்ளிட்ட பகுதி-நேர பணிகள் மூலமாக தனது செலவுகளைத் தானே சமாளித்தார்.[4] 1989 ஆம் ஆண்டில் அவர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸிற்குச் சென்றார்.[7]

தொழில் வாழ்க்கை

தான் நடித்த முதல் திரைப்படமான மேனேஜ்மெண்ட்டில், ஸ்டீவ் ஜான்சனுடன் அனிஸ்டன்.

ஹாலிவுட் உலகுக்குச் சென்ற அனிஸ்டன், தனது முதல் தொலைக்காட்சிப் பாத்திரத்தில் 1990 ஆம் ஆண்டில் நடித்தார். அவர் மோல்லாய் (Molloy) என்ற குறுந்தொடரிலும், கேம் குகமங்கா (Camp Cucamonga)என்ற டிவி திரைப்படத்திலும் வழக்கமாக நடித்தார்.[8] 1986 ஆம் ஆண்டின் வெற்றித் திரைப்படமான பெர்ரிஸ் பூய்ல்லெர்ஸ் டே ஆப் உடைய தொலைக்காட்சித் தழுவலான பெர்ரிஸ் பூய்ல்லெர் என்ற தொடரில் அவர் இணை நடிகையாக நடித்தார்.[8] இருந்தாலும் அந்தத் தொடர் விரைவிலேயே ரத்துசெய்யப்பட்டது.[4] அதன் பின்னர் அனிஸ்டன் தி எட்ஜ் மற்றும் மட்லிங் த்ரோ ஆகிய இரண்டு தோல்வியடைந்த தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தோன்றினார். மேலும் குவாண்டம் லீப் , ஹெர்மன்ஸ் ஹெட் மற்றும் பர்கீஸ் லா ஆகியவற்றில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார்.[8] ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சிக்குப் பின்னர், 1992 ஆம் ஆண்டின் திகில் திரைப்படமான லெப்ரேசௌன் படத்தில் அவர் தோன்றியது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது,[9] அனிஸ்டன் அதை தனது நடிப்பின் வளர்ச்சியாகக் கருதினார்.[4] இருப்பினும் NBC இன் 1994-1995 ஆம் ஆண்டின் இலையுதிர்கால வரிசையில் அறிமுகப்படுத்த இருந்த பிரண்ட்ஸ் நகைச்சுவைத் தொடருக்கான திறனறியும் சோதனையில் பங்குபெற்ற பின்னர், அனிஸ்டனின் திட்டங்கள் மாறின.[3][10] நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் முதலில் அனிஸ்டன் தான் மோனிகா ஜெல்லர் பாத்திரத்தை ஏற்க வேண்டுமென விரும்பினர்.[10] ஆனால் கர்ட்னி காக்ஸ் அந்த பாத்திரத்திற்குப் பொருத்தமானவர் என்று கருதப்பட்டார். எனவே அனிஸ்டன் ரேச்சல் கிரீன் பாத்திரத்தில் நடித்தார். அவர் ரேச்சல் கதாப்பாத்திரத்தில் 1994 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டில் நிகழ்ச்சி முடியும் வரையில் நடித்தார்.[11][12]

நிகழ்ச்சி வெற்றியடைந்ததால் அனிஸ்டனும் அவருடன் இணைந்து நடித்தவர்களும், தொலைக்காட்சி நேயர்களிடையே பரவலான புகழைப் பெற்றனர்.[3] அந்நேரத்தில் அவரது ஹேர்ஸ்டைல் "ரேச்சல்" என்ற பெயரில் பிரபலமாகியதுடன், பரவலாகப் பின்பற்றப்பட்டது.[3][4] அனிஸ்டன் பிரண்ட்ஸ் தொடரின் கடைசி இரண்டு சீசன்களுக்காக ஒவ்வொரு பகுதிக்கும் சம்பளமாக ஒரு மில்லியன் டாலர்களைப் பெற்றார். அதே போன்று ஐந்து எம்மி விருதுகளுக்கான (துணை நடிகைக்காக இரண்டு, முன்னணி நடிகைக்காக மூன்று) பரிந்துரைகளைப் பெற்றார்.[13][14][15][16] அவற்றில் நகைச்சுவைத் தொடரில் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதின் வெற்றியும் அடங்கும்.[17] கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் (2005) அடிப்படையில், அனிஸ்டன் (அவரது பெண் துணை நடிகைகளுடன் சேர்த்து) பிரண்ட்ஸ் தொடரின் பத்தாவது சீசனுக்காக ஒவ்வொரு பகுதிகளுக்கும் $1 மில்லியன் காசோலை பெற்று, எல்லாக் காலத்திலும் அதிகம் சம்பளம் வாங்கும் தொ.கா நடிகையானார்.[18]

ஜெனிபர் அனிஸ்டன் பல்வேறு வணிக விளம்பரங்களிலும் இசைக் காணொளிகளிலும் தோன்றியுள்ளார். 1996 ஆம் ஆண்டில் அவர் டாம் பெட்டி மற்றும் த ஹார்ட்பிரேக்கர்ஸ் ஆகியோரின் "வால்ஸ்" என்ற இசைக் காணொளியில் நடித்தார். மெலிஸ்சா எத்ரிக்ஜின் "ஐ வாண்ட் டு பி இன் லவ்" என்ற 2001 ஆம் ஆண்டின் இசைக் காணொளியில் அனிஸ்டன் நடித்தார். ஜெனிபர் அனிஸ்டன் நடித்திருந்த ஹேய்னக்கன் (Heineken) விளம்பரம் வர்த்தக அடையாளச் சிக்கல்களால் தடைசெய்யப்பட்டது. ஜெனிபர் அனிஸ்டன் லோரீல் ஹேர் புராடெக்ட்ஸின் விளம்பரங்களில் நடித்துள்ளார். 1994 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனம் அனிஸ்டனையும் அவருடன் பிரண்ட்ஸ் தொடரில் நடித்த மேத்யூ பெர்ரியையும் (Matthew Perry), தங்கள் நிறுவனத்தின் புதிய இயக்க முறைமையான விண்டோஸ் 95 (Windows 95) க்கான 30 நிமிட அறிமுக விளம்பரத்தில் நடிக்க அழைத்தது.[19] ஓரினச்சேர்க்கை ஆணுடன் ஒரு பெண் காதலில் விழுவது பற்றிய நகைச்சுவைத் திரைப்படமான தி ஆப்ஜெக்ட் ஆப் மை அபெக்‌ஷன் (The Object of My Affection) (1998) திரைப்படம் [20] மற்றும் 2002 ஆம் ஆண்டின் குறைந்த பட்ஜெட் திரைப்படமான ஒரு சிறிய நகரத்தில் கவர்ச்சியற்ற காசாளராகப் பணியாற்றும் ஒரு பெண்ணைப் பற்றிய மீஜெல் ஆர்டேடா இயக்கிய த குட் கேர்ள் (The Good Girl) என்ற திரைப்படம் ஆகியவற்றில் அவரது நடிப்பிற்கு மிகுந்த பாராட்டு விமர்சனங்களைப் பெற்றார். மொத்தமாக 700 திரையரங்குகளுக்கும் சற்று குறைவான திரையரங்குகளில் வெளியிடப்பட்ட த குட் கேர்ள் திரைப்படம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 14 மில்லியன் டாலர்களை வசூலித்தது.[21] 2005 இறுதியில், அனிஸ்டன் டிரெய்ல்டு மற்றும் ரூமர் ஹேஸ் இட் என்ற இரண்டு முக்கிய ஸ்டூடியோ திரைப்படங்களில் தோன்றினார்.[22][23]

அவரது நடிப்புத் தொழில் தொலைக்காட்சி நடிகையாக இருந்தாலும், அதனுடன் வெற்றிகரமான திரைப்பட நடிப்புத் தொழிலையும் மகிழ்ச்சியுடன் செய்கின்றார். 2003 ஆம் ஆண்டின் புரூஸ் ஆல்மைட்டி திரைப்படத்தில் தோன்றியது தான் அவரது மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாகும். அதில் அவர் ஜிம் கேரியின் முதன்மைக் கதாப்பாத்திரத்தின் பெண் தோழியாக நடித்தார்.[24] அதன் பிறகு அனிஸ்டன், 2004 ஆம் ஆண்டின் அலாங் கேம் பால்லி என்ற திரைப்படத்தில் பென் ஸ்டில்லருடன் இணைந்து நடித்தார்.[25] 2006 ஆம் ஆண்டில் அனிஸ்டன் குறைந்த பட்ஜெட் திரைப்படமான பிரண்ட்ஸ் வித் மணி படத்தில் தோன்றினார். இப்படம் முதலில் சன் டேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட்டு, குறைந்த அளவான வெளியீட்டைப் பெற்றது.[26] அனிஸ்டனின் அடுத்த திரைப்படமான த பிரேக்-அப் , ஜூன் 2 அன்று வெளியிடப்பட்டது. அதன் முதல் வார இறுதியின் போது ஏறக்குறைய 39.17 மில்லியன் டாலர் வசூலைத் தாண்டியது. இருப்பினும் சற்று சூடான விமர்சனங்களைப் பெற்றது.[27]

2007 ஆம் ஆண்டில், கர்ட்னீ காக்ஸ் ஆர்க்கெட்டின் டைர்ட் (Dirt) தொடரின் ஒரு பகுதியில் அனிஸ்டன் கௌரவப் பாத்திரத்தில் நடித்தார். அனிஸ்டன் ஆர்கெட்டின் (Arquette) மிகப்பெரிய போட்டியாளர் டினா ஹார்ராட் உடன் நடித்தார்.[28] நடிப்போடு சேர்த்து மருத்துவமனை அவசரஅறை அரங்க குறும்படம் ரூம் 10 என்ற திரைப்படத்தையும் இயக்கினார். அதில் ராபின் ரைட் பென் மற்றும் கிரிஸ் கிரிஸ்டோபர்சன் ஆகியோர் நடித்தனர்;[29] 2006 ஆம் ஆண்டில் நடிகை க்வினெத் பேல்ட்ரோ இயக்கிய குறும்படமே தான் இயக்குனராவதற்கு ஊக்கமளித்ததாக அனிஸ்டன் குறிப்பிட்டிருக்கின்றார்.[30]

போர்பஸ் பத்திரிக்கை அனிஸ்டனுக்குப் பொழுதுபோக்குத் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான அதிக வசதிபடைத்த பெண்மணிகள் பட்டியலில் 10 ஆவது இடத்தை அளித்தது. அதில் அவர் ஓபரா வின்ஃப்ரே, ஜே. கே. ரோவ்லிங், மடோனா, மரியா கரே, செலின் டியான் மற்றும் ஜெனிபர் லோபஸ் போன்ற அதிகாரமுள்ளவர்களுக்கு பின்னதாகவும், பிரிட்னி ஸ்பியர்ஸ், கிறிஸ்டினா ஆகீலேரா மற்றும் ஓல்சன் டிவின்ஸ் போன்றோருக்கு முன்னதாகவும் உள்ளார். அனிஸ்டனின் மொத்த சொத்து மதிப்பு ஏறக்குறைய 110 மில்லியன் டாலர் ஆகும்.[31] த ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற வணிகப் பத்திரிக்கை 2006 ஆண்டிற்கான அந்த ஆண்டின் 10 தலைசிறந்த நட்சத்திர சம்பளம் பட்டியலில் அனிஸ்டனையும் சேர்த்துள்ளது.[32] 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்த போர்பஸ் பத்திரிக்கையின் படி, பொழுதுபோக்குத் துறையில் அதிகம் விற்பனையாகும் பிரபல முகமாக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் போர்பஸ், "வருமானம் மற்றும் பிரபலம்" அடிப்படையிலான 100 பிரபலங்கள் பட்டியலில் அனிஸ்டனுக்கு பதினேழாவது இடமளித்தது.[33] போர்பஸ் அனிஸ்டனின் வருமானத்தை $27 மில்லியனாகப் பட்டியலிட்டது.[34]

அனிஸ்டன் NBC இன் 30 ராக் தொடரின் சீசன் 3 இன் மூன்றாவது பகுதியில் ஜாக் டோனகி பின்தொடரும் லிஸ் லேமனின் பழைய கல்லூரி அறைத் தோழியாகத் தோன்றினார்.[35]

அனிஸ்டன் GQ பத்திரிக்கையின் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாத வெளியீட்டின் அட்டை மற்றும் உள்பக்கங்களில் வெளியான புகைப்படங்கள் வரிசையில் நிர்வாணமாகத் தோன்றியிருக்கின்றார். அவர் தனது இருபதுகள் அல்லது முப்பதுகளின் ஆரம்பத்தில் செய்திருப்பதை விட இன்று மிகவும் பொருத்தமாக உள்ளதை உணர்வதாகவும் அந்தப் பத்திரிக்கையில் கூறுகிறார். "நான் நலமாக இருக்கின்றேன். நான் எனது மனம் மற்றும் உடல் ரீதியாக மிகவும் அமைதியாக இருக்கின்றேன்" என்றும் அனிஸ்டன் கூறினார்.[36]

2008 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று அனிஸ்டன் ஓவன் வில்சனுடன் இணைந்து நடித்த மார்லே & மி திரைப்படம் வெளியானது. இது டிக்கெட் விற்பனையில் 14.75 மில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தின பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையைப் பதிவு செய்தது. இது மொத்தம் 51.7 மில்லியன் டாலரை நான்கு நாள் வாரயிறுதியில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் #1 இடத்தைப் பெற்றது. மேலும் அந்த இடத்தை அத்திரைப்படம் இரண்டு வாரங்களுக்கு நிலைநிறுத்தியது.[37] 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 நிலவரப்படி அதன் உலகளாவிய வருமானம் $161,608,269 ஆக இருந்தது.[38]

அவரது அடுத்த திரைப்படமான ஹீஸ் ஜஸ்ட் நாட் தட் இண்டூ யூ 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உலக அளவில் வெளியானது. அத்திரைப்படம் 27.5 மில்லியன் டாலர் வசூல் செய்து, அதன் முதல் வாரயிறுதில் பாக்ஸ் ஆபிஸில் #1 மதிப்பீட்டைப் பெற்றது.[39] அத்திரைப்படம் பலவகையான மதிப்புரைகளைப் பெற்றிருந்த போதிலும், ஜெனிப்பர் கான்லீ மற்றும் பென் அப்லெக் ஆகியோருடன் அனிஸ்டன் இணைந்து நடித்தது விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இதுவே அத்திரைப்படத்தில் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கின்றது.[40][41]

2009 ஆம் ஆண்டு கணக்குப்படி, அனிஸ்டனின் திரைப்படங்கள் அமெரிக்காவில் 900,618,847 டாலர் வசூலையும் உலக அளவில் 1,508,048,564 டாலருக்கும் அதிகமான வசூலையும் பெற்றுள்ளது.[42]

2009 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று, 30 ராக் தொடரில் அவரது கதாப்பாத்திரத்திற்கு நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகைப் பிரிவில் எம்மி விருதுக்கான பரிந்துரையை அனிஸ்டன் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

2008 டொரோன்டோ சர்வதேசத் திரைப்பட திருவிழாவில் அனிஸ்டன்

1990 ஆம் ஆண்டில் அனிஸ்டன் பெர்ரிஸ் பூய்ல்லெர் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த டிவி நடிகர் சார்லி ஸ்லாட்டரைச் சந்தித்தார்.[43] அவர் 1991 ஆம் ஆண்டில் டேனியல் மேக்டொனால்டு உடனான உறவை வளர்த்தார். 1994 ஆம் ஆண்டு வரை நீடித்த அவர்களது உறவு, பிரண்ட்ஸ் தொடரில் நடிக்கும் முன்பாக முறிந்தது.[43] அவர் 1995 ஆம் ஆண்டில் இசைக்கலைஞர் ஆடாம் டூரிட்ஸ் உடன் கொஞ்சகாலம் கலந்திருந்தார்.[43] அவர் 1995 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை நடிகர் டாட் டோனுவனுடன்[43] காதல் வயப்பட்டிருந்தார். மேலும் இந்த ஜோடி திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது.

1998 ஆம் ஆண்டில் அவர் நடிகர் பிராட் பிட்டுடன் டேட்டிங்கில் ஈடுபடத் தொடங்கினார். மேலும் 2000 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று மாலிபு நகரில் பகட்டான முறையில் பிராட் பிட்டைத் திருமணம் செய்தார்.[44] அவர்களின் திருமணமானது சில வருடங்களுக்கு அரிதான ஹாலிவுட் வெற்றியாகக் கருதப்பட்டது.[4] இருப்பினும், அந்த ஜோடி தங்களது பிரிவை 2005 ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று அறிவித்தது.[43] பிராட் பிட், நடிகை ஏஞ்சலினா ஜூலியுடன் நெருங்கினார். என்றாலும் பிராட் பிட் ஏஞ்சலினா ஜூலியுடன் இருப்பதால் அனிஸ்டனை ஏமாற்றுகிறார் என்பதை மறுத்தார். பிராட் பிட் மற்றும் அனிஸ்டன் ஆகியோர் தங்கள் பிரிவை அறிவித்த பிறகும் அனிஸ்டனின் பிறந்தநாள் இரவு விருந்தில் கூட வெளிப்படையாக ஒன்றிணைந்து இருப்பதைக் காண முடிந்தது. மேலும் அந்த ஜோடியின் நண்பர்கள் அவர்கள் மறுபடியும் இணைந்ததாக அறிவித்தனர்.[45] இருப்பினும் அனிஸ்டன் 25 மார்ச் 2005 அன்று விவாகரத்து தாக்கல் செய்தார்.[2] அது 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று உறுதியானது.[46] அந்தப் பிரிவானது குழந்தைகளை பிராட் பிட் தன்னுடன் வைத்திருப்பதற்கு எதிராக அனிஸ்டன் எடுத்த முடிவினால் என்று நம்புவதாக ஊடகங்கள் வெளியிட்டன. இது அவர்களின் பிரிவின் காரணம் என்பதை மறுத்த அனிஸ்டன் வானிட்டி பேர் பத்திரிக்கைக்கு 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளித்த பேட்டியில் கூறியது, "...நான் எப்போதும் குழந்தைகளை வைத்திருக்க விரும்பினேன், அந்த அனுபவத்தை என் தொழில் வாழ்க்கைக்காக மறுபடியும் விட்டுக்கொடுக்க மாட்டேன்."

அவரது விவாகரத்தானது அவரது தாய் நான்சியிடம் கிட்டதட்ட பத்து ஆண்டுகள் வேறுபட்டு இருந்த தன்னை, உடனடியாகச் சென்றடைய உதவியது என்பதை அனிஸ்டன் வெளிப்படுத்தினார். நான்சி அவரது மகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிப்பது பற்றி பேசிய போதும், அதன் பின்னர் ப்ரம் மதர் அண்ட் டாட்டர் டு பிரண்ட்ஸ்: எ மெமோயர் (1999) என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய போதும் அவர்கள் முதலில் வெறுக்கத்தொடங்கியிருந்தனர்.[47][48] அவரது நீண்டகால பிணி நீக்கு வல்லுநர் இறந்ததால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருந்ததாகவும், அவர் பிராட் பிட் இடமிருந்து எளிதாகப் பிரிய தனக்கு உதவியாக இருந்ததாகவும் அனிஸ்டன் கூறியிருக்கின்றார்.[30] "இணைந்திருந்த மிகவும் ஆழமான ஏழு ஆண்டுகள்" என்றும், மேலும் "அது அழகான, புரிந்துகொள்ள கடினமான உறவாக இருந்தது" என்றும் அனிஸ்டன் வருத்தம் தெரிவிக்காமல் பிராட் பிட் உடனான தனது உறவைப் பற்றிக் கூறினார்.[49]

அவரது விவாகரத்துக்குப் பின்னர், அனிஸ்டன் தன்னுடன் த பிரேக்-அப் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகர் வின்ஸ் வான்னுடன் உறவைத் தொடங்கினார்.[43] 2006 ஆம் ஆண்டு செப்டம்பரில் உறவில் விரிசல் ஏற்பட்டதாக வந்த அறிக்கைகளை அடுத்து, அவர்கள் அந்த ஆண்டின் டிசம்பரில் பிரிவை உறுதிப்படுத்தினர்.[43] அவர் 2007 ஆம் ஆண்டில் சில மாதத்திற்கு ஆண் மாடலான பால் ஸ்கல்பார் என்பவருடன் இணைந்திருந்தார்.[43] 2008 ஆம் ஆண்டு பிப்ரவரியில், அவர் பாடகர் ஜான் மேயருடன் உறவைத் தொடங்கினார்.[43] அந்த இணையானது அதே ஆண்டு ஆகஸ்டில் பிரிந்தது. ஆனால் அக்டோபரில் உறவு மீண்டும் மலர்ந்து, 2009 ஆம் ஆண்டு மார்ச்சில் மீண்டும் பிரிந்தது.

அனிஸ்டன் தனது பிறழ்வான தடுப்புச்சுவரைச் சரிசெய்ய இரண்டு செப்டோப்ளாஸ்டிகளை வைத்திருந்தார்— ஒன்று சரியற்ற முறையில் 1994 ஆம் ஆண்டில் செய்யப்பட்டது, மற்றொன்று 2007 ஆம் ஆண்டு ஜனவரியில் செய்யப்பட்டது. செப்டோப்ளாஸ்டி என்பது மூச்சுவிடக் கடினமாக இருக்கும் மற்றும் தூக்கத்திற்கு தொந்தரவளிக்கும் பொதுவான நிலையிலிருந்து ஆறுதலைத் தர உதவும் அறுவைச் சிகிச்சையாகும்.[50] அவர் தனது நல்ல நண்பர்களான, நடிகர்கள் கர்ட்னீ காக்ஸ் ஆர்க்கெட் மற்றும் டேவிட் ஆர்க்கெட் ஆகியோரின் மகளான கோகோ ரைய்லி ஆர்க்கெட்டின் வளர்ப்பிற்கு நிதியளிப்பவராக இருக்கின்றார். லிசா குட்ரோ மற்றும் மேத்யூ பெர்ரி ஆகிய பிரண்ட்ஸ் தொடரில் நடித்த பழைய இணை நடிகர்களுடன் அனிஸ்டன் மிகவும் நெருக்கமாகவும் உள்ளார்

மனிதநேயம்

அனிஸ்டன் பல அறக்கட்டளைகளின் ஆதரவாளராக இருக்கின்றார். அவர் பிரண்ட்ஸ் ஆப் El பாரோ என்ற அடிப்படை இலாப நோக்கற்ற அமைப்புக்கு ஆதரவாளராக இருக்கின்றார். இந்த அமைப்பு மெக்சிகோவின் டைஜூயனாவிலுள்ள ஆதரவற்றோர் காப்பகமான காசா ஹோகர் சியானுக்கு பண உதவி அளிக்கின்றது. மேலும் அவர் தான் ஆதரிக்கும் செயிண்ட். ஜூடேஸ் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனையின் பல டிவி விளம்பரங்களில் தோன்றியுள்ளார். அவர் ஓப்ராவின் பிக் கிவ் நிகழ்ச்சியில் உதவுவதற்குப் பணம் மற்றும் ஆதரவளிக்க கௌரவ அழைப்பாளராகத் தோன்றினார். அனிஸ்டன் செப்டம்பர் 2008 ஆம் ஆண்டின் ஸ்டேன்ட் அப் டு கேன்சர் நிகழ்ச்சியை வழங்கினார். "இட் கான்ட் வெயிட்" என்ற பர்மா விடுதலைப் பிரச்சார வீடியோவை அனிஸ்டன் இயக்கி நடித்தார். அனிஸ்டன் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று, லெஸ்பியன், கேய், இருபாலர் உறவு மற்றும் திருநங்கை சமூகத்தை வெளிக்கொண்டுவருதல் மற்றும் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றை அதிகரிப்பதில் பங்களித்ததற்காக GLAAD இன் வான்கார்டு விருதைப் பெற்றார்.

திரைப்பட விவரங்கள்

நடிகை

2008 டொரோன்டோ சர்வதேசத் திரைப்பட திருவிழாவில் அனிஸ்டன்
திரைப்படம்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
1993 லெப்ரேசௌன் டோரி ரெடிங் முதலில் நடித்த திரைப்படம்
1996 ஷீஸ் த ஒன் ரெனீ பிட்ஸ்பேட்ரிக்
ட்ரீம் பார் ஆன் இன்ஸோம்னியாக் அல்லிசன்
1997 'டில் தேர் வாஸ் யூ டெப்பி
பிக்சர் பெர்பெக்ட் காதே மோஸ்லி
1998 த தின் பிங்க் லைன் க்ளோவ்
வெயிட்டிங் பார் வுட்டி சொந்த வேடம் குறும்படம்
தி ஆப்ஜெக்ட் ஆப் மை அபெக்‌ஷன் நைனா பாரோவ்ஸ்கி
1999 ஆபிஸ் ஸ்பேஸ் ஜோனா
த அயர்ன் ஜியண்ட் அன்னி ஹூயூக்ஸ் குரல் மட்டும்
2001 ராக் ஸ்டார் எமிலி பௌலே
2002 த குட் கேர்ள் ஜஸ்டின் லாஸ்ட் டீன் சாய்ஸ் விருது வென்றார்

இண்டிபெண்டண்ட் ஸ்பிரிட் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

OFCS விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்

கோல்டன் சேட்டிலைட் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்

டீன் சாய்ஸ் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்

2003 புரூஸ் ஆல்மைட்டி கிரேஸ் கான்லீ எம்டிவி திரைப்பட விருதுக்கு ஜிம் கேரியுடன் பரிந்துரைக்கப்பட்டார்

டீன் சாய்ஸ் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்

அப்பி சிங்கர் சொந்த வேடம் கேமியோ
2004 அலாங் கேம் பால்லி பாலி பிரின்ஸ் எம்டிவி திரைப்பட பென் ஸ்டில்லருடன் பரிந்துரைக்கப்பட்டார்
2005 டிரெய்ல்டு லூசிண்டா ஹாரிஸ்
ரூமர் ஹேஸ் இட்... சாரா ஹட்டிங்கர்
2006 பிரண்ட்ஸ் வித் மணி ஒலிவியா
த பிரேக்-அப் ப்ரூக் மேயர்ஸ் டீன் சாய்ஸ் விருது வென்றார்

பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது வென்றார்

2008 மார்லே & மி ஜென்னி க்ரோகன் கிறிஸ்துமஸ் தின பாக்ஸ் ஆபிஸ் வசூலாக $14.75 மில்லியனைப் பெற்று சாதனை படைத்தது [37]

கிட்ஸ் சாய்ஸ் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்

டீன் சாய்ஸ் விருது வென்றார்

2009 ஹீஸ் ஜஸ்ட் நாட் தட் இண்டூ யூ பெத் மர்பி டீன் சாய்ஸ் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்
மேனேஜ்மெண்ட் சுயூ கிளாஸ்சன்
லவ் ஹேப்பன்ஸ் எலோய்ஸ்
2010 த பாஸ்டர் கஸ்ஸீ தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது
த பவுண்டரி கஸிடி டேலீ தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது
த கோரீ கேர்ள்ஸ் TBA தயாரிக்கப்படவுள்ளது
பூமாஸ் TBA படப்பிடிப்பில் உள்ளது
தொலைக்காட்சி
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்புகள்
1990மோல்லோய்கர்ட்னிமுதன்மைப் பாத்திரம் (6 பகுதிகள்)[51]
1990கேம் குகமங்காஅவா ஸ்ஹெக்டார்தொலைக்காட்சித் திரைப்படம்
1990–1991பெர்ரிஸ் பூய்ல்லெர்ஜென்னீ பூய்ல்லெர்முதன்மைப் பாத்திரம்
1992–1990த எட்ஜ்பல்வேறு கதாப்பாத்திரங்கள்முதன்மைப் பாத்திரம்
1994மட்லிங் த்ரோமேட்லைன் ட்ரிகோ கூப்பர்முதன்மைப் பாத்திரம்
1994–2004பிரண்ட்ஸ்ரேச்சல் கிரீன்கோல்டன் குளோப் வென்றார் (2003)

பிரைம்டைம் எம்மி விருது வென்றார் (2002)

ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் வென்றார் (1996)

லாக்கீ விருது வென்றார் (2004)

3 டீன் சாய்ஸ் விருதுகளை வென்றார் (2002-2004)

கௌரவத் தோற்றங்கள்
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்புகள்
1992குவாண்டம் லீப்கிக்கி வில்சன்"நோவேர் டூ ரன்" (சீசன் 5, பகுதி 4)
1992—1993ஹெர்மன்ஸ் ஹெட்சுசீ புரூக்ஸ்
  • "டுவிஸ்டேட் சிஸ்டர்" (சீசன் 1, பகுதி 25)
  • "ஜே இஸ் பார் ஜெலஸி" (சீசன் 3, பகுதி 8)
1994பர்கீஸ் லாலிண்டா கேம்ப்பெல்"கூ கில்டு த பியூட்டி குயின்?" (சீசன் 1, பகுதி 4)
1998பார்ட்னர்ஸ்CPA சூசன்"பாலோ த க்ளேம்ஸ்?" (சீசன் 1, பகுதி 17)
1998டிஸ்னீஸ் ஹெர்குலஸ்கேலட்டீ (குரல்)"ட்ரீம் டேட்" (சீசன் 1, பகுதி 27)
1999சவுத் பார்க்திருமதி. ஸ்டீவன்ஸ் - சோயிர் டீச்சர் (குரல்)"ரெயின்பாரஸ்ட் ஸ்மெயின்பாரஸ்ட்" (சீசன் 3, பகுதி 1)
2003ப்ரீடம்: எ ஹிஸ்டரி ஆப் அஸ்ஜெஸ்ஸி பெண்டன்"வேக் அப் அமெரிக்கா " (சீசன் 1, பகுதி 4)
கிங் ஆப் தி ஹில்பெப்பரோனி சூ/ஸ்டெபனீ (குரல்)"க்யூஸி ரைடர்" (சீசன் 7, பகுதி 13)
2007டைர்ட்டைனா ஹர்ரோட்"இட்ட மிஸ்ஸா எஸ்ட் " (சீசன் 1, பகுதி 13)
200830 ராக் [52]கிளாரி ஹார்பர்"த ஒன் வித் த காஸ்ட் ஆப் நைட் கோர்ட்" (சீசன் 3, பகுதி 3)

இயக்குநருக்கான வெகுமதிகள்


ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2006ரூம் 10குறும்படம்

சினிவேகாஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் வெற்றி பெற்றது

தயாரிப்பாளருக்கான வெகுமதிகள்


ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2008மேனேஜ்மெண்ட்தயாரிப்பு அதிகாரி
2010த பாஸ்டர்தயாரிப்பு அதிகாரி
த கோரீ கேர்ள்ஸ்தயாரிப்பாளர்
_ த செனட்டர்ஸ் வொய்ப்தயாரிப்பாளர்[53]

விருதுகள்

ஜெனிபர் அனிஸ்டன் தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகிய இரண்டு தயாரிப்புகளுக்காகவும் தனது நடிப்பு வாழ்க்கையில் பல்வேறு விருதுகளை வென்றிருக்கின்றார். அவர் தனது வாழ்நாளில் அடைந்திருக்கின்ற அனைத்து விருதுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

  • 1996: ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது: பிரண்ட்ஸ் காமெடித் தொடரில் குழுவாகச் சிறப்பாக நடித்ததற்காக
  • 2000: டிவி கைடு விருதுகள்: எடிட்டர்ஸ் சாய்ஸ்
  • 2001: பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது: பிடித்தமான பெண் தொலைக்காட்சி நடிகை, பிரண்ட்ஸ்
  • 2001: அப்டான்ப்ளேடெட் டிவி பரிசு, ஸ்வீடன்: சிறந்த வெளிநாட்டு டிவி பிரபலம்- பெண், பிரண்ட்ஸ்
  • 2002: 54 ஆவது பிரைம்டைம் எம்மி விருதுகள்: காமெடித் தொடரில் சிறந்த முன்னணி நடிகை, பிரண்ட்ஸ்
  • 2002: பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது: பிடித்தமான பெண் தொலைக்காட்சி நடிகை, பிரண்ட்ஸ்
  • 2002: ஹாலிவுட் திரைப்படத் திருவிழா: அந்த ஆண்டின் சிறந்த நடிகை
  • 2002: டீன் சாய்ஸ் விருது: தேர்வுசெய்யப்பட்ட டிவி நடிகை- காமெடி, பிரண்ட்ஸ்
  • 2002: அப்டான்ப்ளேடெட் டிவி பரிசு, ஸ்வீடன்: சிறந்த வெளிநாட்டு டிவி பிரபலம்- பெண், பிரண்ட்ஸ்
  • 2003: கோல்டன் குளோப் விருது: தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகை - இசை அல்லது காமெடி, பிரண்ட்ஸ்
  • 2003: பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது: பிடித்தமான பெண் தொலைக்காட்சி நடிகை, பிரண்ட்ஸ்
  • 2003: டீன் சாய்ஸ் விருது: தேர்வுசெய்யப்பட்ட டிவி நடிகை- காமெடி, பிரண்ட்ஸ்
  • 2003: டீன் சாய்ஸ் விருது: தேர்வுசெய்யப்பட்ட திரைப்பட நடிகை- நாடகம்/அதிரடி வீரதீரம், த குட் கேர்ள்
  • 2003: அப்டான்ப்ளேடெட் டிவி பரிசு, ஸ்வீடன்: சிறந்த வெளிநாட்டு டிவி பிரபலம்- பெண், பிரண்ட்ஸ்
  • 2003: லாக்கீ விருதுகள்: மிகவும் பிரபலமான உலகளாவிய டிவி நிகழ்ச்சி, பிரண்ட்ஸ்
  • 2004: லாக்கீ விருதுகள்: மிகவும் பிரபலமான உலகளாவிய நட்சத்திரம், பிரண்ட்ஸ்
  • 2004: லாக்கீ விருதுகள்: மிகவும் பிரபலமான உலகளாவிய டிவி நிகழ்ச்சி, பிரண்ட்ஸ்
  • 2004: பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது: பிடித்தமான பெண் தொலைக்காட்சி நடிகை, பிரண்ட்ஸ்
  • 2004: டீன் சாய்ஸ் விருது: தேர்வுசெய்யப்பட்ட டிவி நடிகை- காமெடி, பிரண்ட்ஸ்
  • 2004: அப்டான்ப்ளேடெட் டிவி பரிசு, ஸ்வீடன்: சிறந்த வெளிநாட்டு டிவி பிரபலம்- பெண், பிரண்ட்ஸ்
  • 2005: ஷோவெஸ்ட் கன்வென்சன் விருதுகள்: அந்த ஆண்டின் சிறந்த பெண் நட்சத்திரம்
  • 2006: டீன் சாய்ஸ் விருது: தேர்வுசெய்யப்பட்ட திரைப்பட இணை (வின்ஸ் வான் உடன் பகிர்ந்துகொண்டார்), த பிரேக்-அப்
  • 2007: பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது: பிடித்தமான பெண் திரைப்பட நட்சத்திரம்
  • 2007: GLAAD மீடியா விருதுகள்: வான்கார்டு விருது
  • 2007: சினிவேகாஸ் சர்வதேசத் திரைப்படத் திருவிழா: சிறந்த குறும்படம், ரூம் 10
  • 2009: 61 ஆவது பிரைம்டைம் எம்மி விருதுகள்: காமெடித் தொடரில் சிறந்த துணை நடிகை, 30 ராக் (பரிந்துரைக்கப்பட்டது )

குறிப்புகள்

  1. "Transcripts". CNN.com.
  2. Silverman, Stephen M. (March 25, 2005). "Jennifer Files for Divorce from Brad". People. பார்த்த நாள் July 15, 2008.
  3. "Hello Magazine Profile - Jennifer Aniston". Hello Magazine. பார்த்த நாள் 2008-08-08.
  4. "Jennifer Aniston Biography". People. பார்த்த நாள் 2008-05-21.
  5. "Ancestry 603". SDGENEALOGY.ORG. பார்த்த நாள் 2008-12-12.
  6. Fussman, Cal (2002-10-01). "A Woman We Love: Jennifer Aniston". Esquire. பார்த்த நாள் 2008-08-08.
  7. "Biography of Jennifer Aniston". Tiscali. பார்த்த நாள் 2008-08-08.
  8. "Hello Magazine Filmography - Jennifer Aniston". Hello Magazine. பார்த்த நாள் 2008-08-08.
  9. Canby, Vincent (1993-01-09). "Leprechaun Review". New York Times. பார்த்த நாள் 2008-08-08.
  10. "E! True Hollywood Story: Friends". E! True Hollywood Story. E!. 2006-11-19. No. 15, season 10.
  11. "The Pilot". Marta Kauffman, David Crane, and Kevin S. Bright. Friends. NBC. 1994-09-22. No. 1, season 1. 30 minutes in.
  12. "The Last One". Friends. NBC. 2004-05-06. No. 17 and 18, season 10.
  13. "IMDB: Emmy Awards 2000". IMDB.com. பார்த்த நாள் 2008-08-08.
  14. "IMDB: Emmy Awards 2001". IMDB.com. பார்த்த நாள் 2008-08-08.
  15. "2003 Emmy Award Comedy Nominations". Emmy Awards Online. பார்த்த நாள் 2008-08-08.
  16. "2004 Emmy Award Comedy Nominations". Emmy Awards Online. பார்த்த நாள் 2008-08-08.
  17. Silverman, Stephen M. (2002-09-22). "Emmy Awards Make New Best 'Friends'". People. பார்த்த நாள் 2008-08-08.
  18. Guinness World Records 2005: Special 50th Anniversary Edition. Guinness. 2004-08-23. பக். 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1892051222.
  19. Elliott, Stuart (1995-07-31). "The Media Business: Advertising; Haven't heard of Windows 95? Where have you been hiding?". New York Times. பார்த்த நாள் 2008-08-08.
  20. Maslin, Janet (1998-04-17). "The Object of My Affection Review". New York Times. பார்த்த நாள் 2008-08-08.
  21. Schwarzbaum, Lisa (2002-08-07). "The Good Girl Review". Entertainment Weekly. பார்த்த நாள் 2008-08-08.
  22. Chang, Justin (2005-11-05). "Derailed Review". Variety. பார்த்த நாள் 2008-08-08.
  23. Ebert, Roger (2005-12-23). "Rumor Has It Review". Chicago Sun-Times. Roger Ebert.com. பார்த்த நாள் 2008-08-08.
  24. Koehler, Robert (2003-05-23). "Bruce Almighty Review". Variety. பார்த்த நாள் 2008-08-08.
  25. Papamichael, Stella. "BBC Films - Along Came Polly Review". BBC. பார்த்த நாள் 2008-08-08.
  26. Travers, Peter (2006-04-04). "Friends With Money Review". Rolling Stone. பார்த்த நாள் 2008-08-08.
  27. "Box Office Mojo". The Break-Up's opening weekend gross. பார்த்த நாள் June 16 2006.
  28. "TVSquad.com". Jennifer Aniston to guest star on Dirt. பார்த்த நாள் March 2 2007.
  29. "And She Directs Too, Jennifer Aniton Marks Directing Debut With Short Film For Glamour Reel Moments". CBS News (2006-10-17). பார்த்த நாள் 2008-08-08.
  30. Van Meter, Jonathan (March 2006). "Jennifer Aniston: A Profile in Courage". Style.com. பார்த்த நாள் 2008-08-08.
  31. "Forbes.com". In Pictures: The Richest 20 Women In Entertainment. பார்த்த நாள் March 2 2007.
  32. "Hollywood.com". Nicole Kidman Tops Hollywood Earners List at Hollywood.com. மூல முகவரியிலிருந்து 2012-05-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 2 2007.
  33. "Forbes Celebrity 100 Has a Big 'O'". Celebuzz.com. 2008-06-12. http://www.celebuzz.com/forbes-celebrity-100-big-o-s22781/.
  34. "The Celebrity 100". Forbes. 2008-06-12. http://www.forbes.com/home/2008/06/11/most-powerful-celebrities-lists-celebrities08-cx_mn_0611c_land.html.
  35. Moore, Frazier (2008-08-29). "Jennifer Aniston will make a return visit to NBC". The Associated Press. Archived from the original on 2008-09-02. http://web.archive.org/web/20080902212522/news.yahoo.com/s/ap/20080829/ap_en_tv/tv_aniston30_rock. பார்த்த நாள்: 2008-09-07.
  36. "Actress Jennifer Aniston appears naked in GQ magazine". peoplestar.co.uk. பார்த்த நாள் 2008-12-14.
  37. Wethcer, Barry (2008-12-26). "‘Marley & Me’ sets Christmas Day record". MSNBC. பார்த்த நாள் 2008-05-21.
  38. "Marley and Me (2008)". Box Office Mojo. பார்த்த நாள் 2008-05-21.
  39. http://web.archive.org/20090211072842/www.hollywoodreporter.com/hr/content_display/news/e3ib2336cb7507211a2e4389b8078d6194b
  40. "He's Just Not That Into You". Metacritic.com. பார்த்த நாள் 2008-05-21.
  41. Cooper, Jackie K.. "Jennifer Aniston and Ben Affleck in "He's Just Not That In To You"". பார்த்த நாள் 2008-05-21.
  42. "Jennifer Aniston". Box Office Mojo. பார்த்த நாள் 2008-05-21.
  43. "Jennifer Aniston Biography". Movies Yahoo!. பார்த்த நாள் 2008-05-21.
  44. "Brad Pitt Biography". People. பார்த்த நாள் 2008-05-21.
  45. "Brad & Jen Reunite for Her Birthday". People (2005-02-17). பார்த்த நாள் 2008-05-21.
  46. Kappes, Serena (2005-09-30). "Brad & Jen Finalize Divorce". People. பார்த்த நாள் 2008-05-21.
  47. "The Unsinkable Jennifer Aniston". Vanity Fair (September 2005). பார்த்த நாள் 2008-08-08.
  48. Laurence, Charles (2006-12-15). "Not even friends...". Los Angeles National Post. http://www.fact.on.ca/news/news0001/np00010b.htm.
  49. "Daily Times". Aniston just wants to make Friends with Pitt. மூல முகவரியிலிருந்து 2012-07-23 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் June 18 2006.
  50. "Jen Gets a Nose Job". Us Magazine (2007-01-24). பார்த்த நாள் 2008-07-15.
  51. LYNN HIRSCHBERG (21). "The Screens Issue. Screens Goddess". NYTimes.com. பார்த்த நாள் 9 August 2009.
  52. Goldstein, Andew M. (2008-09-14). "‘30 Rock’ Snags Martin, Maybe Oprah". New York. http://nymag.com/news/intelligencer/50268/. பார்த்த நாள்: 2009-07-06.
  53. http://www.imdb.com/name/nm0000098/#producer

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.