ஜான் ஹென்றி நியூமன்
ஜான் ஹென்றி நியூமன் (21 பெப்ரவரி 1801 – 11 ஆகஸ்ட் 1890[2][3] கர்தினால் நியூமன்) என்பவர் 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய வரலாற்றில் குறிக்கத்தக்க நபர் ஆவார். இவர் 1830களில் இங்கிலாந்து முழுவதும் புகழ் பெறத்துவங்கினார்.[4] இவரின் படைப்புகள் தன்விளக்கம் அளிக்க முயலும் கத்தோலிக்க மறையின் வாத வல்லுர்களுக்கு பெரிதும் உதவுகின்றது.
மேன்மைமிகு, அருளாளர் ஜான் ஹென்றி நியூமன், C.O. D.D. | |
---|---|
வெல்லாபுரோ புனித ஜார்ஜ் கோவிலின் கர்தினால் | |
![]() Portrait of John Henry Newman by John Everett Millais, 1881 ![]() | |
நியமனம் | 12 மே 1879 |
ஆட்சி முடிவு | 11 ஆகஸ்ட் 1890 |
முன்னிருந்தவர் | தொமாசே மரிய மார்டினெல்லி |
பின்வந்தவர் | ரான்சிஸ் ஐடான் காஸ்குயேட் |
பிற பதவிகள் | Fellow of Oriel College, Oxford; Provost of the Birmingham Oratory |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 29 மே 1825 (இங்கிலாந்து திருச்சபையில்) 30 மே 1847 (கத்தோலிக்க திருச்சபையில்) |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 12 மே 1879 |
கர்தினால் குழாம் அணி | திருத்தொண்டர் அணி |
பிற தகவல்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 21, 1801 இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராசியம் |
இறப்பு | 11 ஆகத்து 1890 89) Edgbaston, பர்மிங்காம், இங்கிலாந்து, ஐக்கிய இராசியம் | (அகவை
கல்லறை | Oratory House, Rednal, West Midlands, இங்கிலாந்து, ஐக்கிய இராசியம் |
குடியுரிமை | British |
சமயம் | இங்கிலாந்து திருச்சபை (1801-1845), கத்தோலிக்க திருச்சபை (1845-1890) |
பெற்றோர் | John Newman & Jemina Fourdrinier |
படித்த இடம் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
குறிக்கோளுரை |
|
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | 9 அக்டோபர் (Roman Catholic),[1] 11 ஆகஸ்ட் (Church of இங்கிலாந்து) |
முத்திப்பேறு | 19 செப்டம்பர் 2010 காஃப்டன் பூங்கா, பர்மிங்காம், இங்கிலாந்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்-ஆல் |
திருத்தலங்கள் | Birmingham Oratory, Edgbaston, இங்கிலாந்து |
ஜான் ஹென்றி நியூமன் | |
---|---|
![]() | |
பிற பெயர்கள் | "முனைவர் நியூமன்", "கர்தினார் நியூமன்" |
காலம் | 19ஆம் நூற்றாண்டு |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
சிந்தனை மரபுகள் | Aristotelianism புலனறிவாதம் Personalism |
முக்கிய ஆர்வங்கள் | Faith and rationality Religious epistemology இறையியல் வரலாறு கிறித்தவ தன்விளக்கம் Philosophy of education Liberal education |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | The Development of doctrine The Illative sense |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
இவர் இலண்டனில் ஆங்கிலிக்கன் திருச்சபையினரான பெற்றோருக்கு 6 குழந்தைகளுள் மூத்தவராகப் பிறந்தார். ஆக்சுபோர்டில் இருந்த ட்ரினிட்டி கல்லூரியில் தன் 19வது வயதில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற இவர் 1825ல் ஆங்கிலிக்கன் சபையின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆங்கிலிக்கன் சபைக்குருவாகவும் மெர்டன் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் கிறித்தவ வரலாற்றினாலும், குறிப்பாக ஹிப்போவின் அகஸ்டீனின் தன்வரலாற்று நூலினாலும் தூண்டப்பட்ட இவர் ஆங்லிக்கன் திருச்சபை திருத்தூதர் வழிமரபு கோருவதன் செல்லத்தகு தன்மையினைக்குறித்து சந்தேகம் எழுப்பினார். ஆங்லிக்க திருச்சபையும் லூத்தரன் திருச்சபையும் செய்த உடன்படிக்கை இவரின் சந்தேகங்களுக்கு வலுசேர்த்தது. காலப்போக்கில் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளாலும் நடவடிக்கைகளாலும் கவரப்பட்டு 1845 அக்டோபர் 9ம் நாள் கத்தோலிக்க மறையில் சேர்ந்தார். 1847ல் கத்தோலிக்கத் திருச்சபையின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1851ல் அயர்லாந்து கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் (Catholic University of Ireland) முதல் அதிபராக திருச்சபையால் நியமிக்கப்பட்டார். 1879ம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவினால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 11 ஆண்டுகள் கர்தினாலாக பணியாற்றிய நியூமன், 1890ஆம் ஆண்டு தன் 89ஆம் வயதில் காலமானார்.
1991இல் நியூமன் வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்பட்டார்.[2] இவருக்கு 19 செப்டம்பர் 2010இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அருளாளர் பட்டம் அளித்தார்.
மேற்கோள்கள்
- "Pope beatifies Cardinal Newman as his UK tour ends (with video clip)". BBC News (19 செப்டம்பர் 2010).
- Miranda, Salvador. "John Henry Newman". The Cardinals of the Holy Roman Church. பார்த்த நாள் 2 பெப்ரவரி 2010.
-
"John Henry Newman". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். - Gilley, p. 201.