ஜான் பீட்டர் அக்ரா

ஜான் பீட்டர் அக்ரா (John Peter Huchra) (பலுக்கல் HUCK-ruh; திசம்பர் 23, 1948 - அக்தோபர் 8, 2010[1]) ஓர் அமெரிக்க வானியலாளரும் பேராசிரியரும் ஆவார் .இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் கொள்கைக்கான துணைக் கல்விப் புரவலர் ஆகவும் ஆர்வார்டு-சுமித்சோனிய வானியற்பியல் மையப் பேராசிரியராகவும் இருந்தார்.[2] இவர் பன்னாட்டு வானியல் கழகத்தின் அமெரிக்க தேசியக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.[2] மேலும் இவர் அமெரிக்க வானியல் கழகத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.[3][4]

அக்ரா நியூசெர்சியின் செர்சி நகரில் 1948 திசம்பர் 23 இல் பிறந்தார், இவரது தந்தையார் தொடர்வண்டி நடத்துநர் ஆவார், தாயார் மனையறங் காத்தவர். இவர் நியூசெர்சியில் உள்ள இரிட்ஜ்பீல்டு பார்க்கில் வளர்ந்தார். இவர் அண்டவியல், அறிவியல் புனைவு நூல்களில் ஆர்வம் செலுத்தினார். இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவன மற்போர்க் குழுவில் உறுப்பினராக இருந்தார். இந்நிறுவனத்தில் இவர் 1970 இல் இயற்பியல் முதன்மையாக எடுத்து பட்டம் பெற்றார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1976 இல் ஆர்வார்டு-சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் தன்முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டார். மேலும் அங்கு தன் வாழ்நாள் பணி முழுவதும் இருந்துள்ளார்.[5]

தன்னுடன் பணிபுரிந்த வானியலாளர்களாகிய மார்க் ஆரோன்சன், ஜெரெமி மவுல்டு ஆகியோருடன் இணைந்து சில சுருள் பால்வெளிகளின் பொலிவையும் சுழற்சி வேகத்தையும் பகுப்பாய்வு செய்து புடவி ஒன்பது பில்லியன் ஆண்டு அகவை உடையது என அறிவித்தார். இது முன்பு கருதியதைப் போல அரைபங்கினதாகும்.[5]

வாலேரீ தெ இலெப்பாரண்டும் மார்கரெட் கெல்லரும் அக்ராவும் 1986 இல் பல பத்து மெகாபார்செக்குகளுக்கு அப்பால் உள்ள அளவுகளில் அமைந்த பால்வெளிகள் சீரற்றபடி பரவியுள்ளதை வெளியிட்டனர். இந்நிலை முந்தைய செம்பெயர்ச்சி அளக்கையியல் முடிவுகளில் இருந்து பெரிதும் வேற்பாட்ட்தாகும்.[6] De Lapparent, Geller and Huchra described the galaxy distribution as apparently lying on the "surfaces of bubble-like structures".[6] கெல்லரும் அக்ராவும் 1989இல் தம் செம்பெயர்ச்சி அளக்கை வழியாக வானியற் பெருஞ்சுவரைக் கண்டுபிடித்தனர். இது நீளவாட்டில் 600 மில்லியன் ஒளியாண்டுகளும் அகலத்தில் 250 மில்லியன் ஒளியாண்டுகளும் அமைந்த சுவராகும்.[7][8][9][10][11] புடவியில் இது தான் இரண்டாவது பெரிய மீக்கட்டமைப்பாகும். அக்ரா வில்லை இவரது பெயரைத் தாங்கியுள்ளது. அக்ரா வில்லை என்பது ஐன்சுட்டீன் குருசு குவேசார் முன் அமைந்த ஈர்ப்பு வில்லை பால்வெளியாகும்.[12]

மேற்கோள்கள்

  1. Obituary, Boston.com
  2. Welcome to John Huchra's Website, Harvard–Smithsonian Center for Astrophysics
  3. Robert Kirshner (2010). "John Huchra (1948–2010)". Nature 468 (7321): 174. doi:10.1038/468174a. பப்மெட்:21068817.
  4. Moran, J. M. (2011). "John Peter Huchra". Physics Today 64 (10): 66–61. doi:10.1063/PT.3.1305.
  5. Overbye, Dennis. "John Huchra Dies at 61; Maps Altered Ideas on Universe", The New York Times, October 13, 2010. Accessed October 14, 2010.
  6. De Lapparent, V.; Geller, M. J.; John Huchra (1986). "A slice of the universe". The Astrophysical Journal 302: L1. doi:10.1086/184625. Bibcode: 1986ApJ...302L...1D.
  7. Frontline, Jan 1, 2010, "In 1989, Margaret Geller and John Huchra, on the basis of redshift survey data, discovered the presence of the Great (Galactic) Wall..."
  8. Booth, William (November 18, 1989). "Vast Sheet of Galaxies Found In the Far Reaches of Space;'Great Wall' Largest Structure Detected in Universe". http://pqasb.pqarchiver.com/washingtonpost/access/73911540.html?dids=73911540:73911540&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Nov+18%2C+1989&author=William+Booth&pub=The+Washington+Post+(pre-1997+Fulltext)&desc=Vast+Sheet+of+Galaxies+Found+In+the+Far+Reaches+of+Space%3B%60Great+Wall%27+Largest+Structure+Detected+in+Universe&pqatl=google.
  9. "QUEST – Questions answered". The San Diego Union. September 11, 2002. http://pqasb.pqarchiver.com/sandiego/access/175458221.html?dids=175458221:175458221&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Sep+11%2C+2002&author=&pub=The+San+Diego+Union+-+Tribune&desc=QUEST+%7C+Questions+answered&pqatl=google.
  10. Charles Choi. That Wall in China Is Nothing, Science (journal), 24 October 2003
  11. The Inflationary Universe: The Quest for a New Theory of Cosmic Origins - Alan H. Guth - Google Boeken. Books.google.com. https://books.google.com/books?id=7toILlSQtI0C&pg=PA214&dq=%22John+Huchra%22+%22great+wall%22&cd=3#v=onepage&q=%22John%20Huchra%22%20%22great%20wall%22&f=false. பார்த்த நாள்: 2012-05-22.
  12. Harrington, Philip S. (2010-11-30). Cosmic Challenge: The Ultimate Observing List for Amateurs. Cambridge University Press. பக். 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-89936-9. https://books.google.com/books?id=8mQmvT4wpWQC&pg=PA421&dq=%22huchra's+lens%22&hl=en&ei=NhsfTqOFGqnh0QHvptGyAw&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDkQ6AEwAg#v=onepage&q=%22huchra's%20lens%22&f=false. பார்த்த நாள்: 2011-07-15.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.