ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் (John F.Kennedy International Airport) (IATA: JFK, ICAO: KJFK, FAA LID: JFK) நியூயார்க்கின் குயீன்ஸ் பரோவில் தென் மன்ஹாட்டனிலிருந்து 12 மைல்கள் (19 km)தொலைவில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். 2010ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிகுந்த பன்னாட்டுப் பயணிகள் போய்வரும் நுழைமுகமாக விளங்கியது. வட அமெரிக்காவின் பிற எந்த வானூர்தி நிலையத்தைவிட கூடுதலான பன்னாட்டுப் போக்குவரத்தை கையாண்டது.[4] இதுவே அந்நாட்டின் சரக்குப் போக்குவரத்திலும் கூடுதலான மதிப்புள்ள சரக்குகளை கையாண்ட நிலையமாக விளங்குகிறது.[5] 2010இல் இந்த வானூர்தி நிலையம் வழியே 46,514,154 பயணிகள்[2] பயணித்து உலகின் 14வது நெருக்கமிகுந்த நிலையமாகவும் அமெரிக்காவின் ஆறாவது நெருக்கமிகுந்த வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. நியூயார்க் பெருநகர பகுதியில் அமைந்துள்ள ஜேஎஃப்கே, லாகார்டியா மற்றும் நியூவர்க் வானூர்தி நிலையங்கள் மூன்றும் இணைந்து ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரும் வானூர்தி நிலைய அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை இரண்டாவது நெருக்கம் மிகுந்த வானூர்தி நிலையமாகவும் மொத்த வான்பயண இயக்கங்களைக் கொண்டு முதலாவதாகவும் .உள்ளது.

ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்
2001ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஜேஎஃப்கே நிலையத்தின் முனையம் 4
ஐஏடிஏ: JFKஐசிஏஓ: KJFKஎஃப்ஏஏ அ.அ: JFK
WMO: 74486
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் நியூயார்க் நகரம்[1]
இயக்குனர் நியூயார்க் நியூஜெர்சி நுழைமுக ஆணையம்[1]
சேவை புரிவது நியூயார்க் நகரம்
அமைவிடம் ஜமைக்கா, நியூயார்க்
மையம்

பயணிகள்

சரக்கு

  • எவர்கிரீன் பன்னாட்டு ஏர்லைன்ஸ்
  • போலார் ஏர் கார்கோ
உயரம் AMSL 13 ft / 4 m
ஆள்கூறுகள் 40°38′23″N 073°46′44″W
இணையத்தளம் www.panynj.gov
நிலப்படம்
அக்டோபர் 20,2011 அன்றிருந்தவாறு வானூர்தி நிலைய வரைபடம்.
அக்டோபர் 20,2011 அன்றிருந்தவாறு வானூர்தி நிலைய வரைபடம்.
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
4L/22R 11 3,460 கருங்காரை
4R/22L 8 2 கருங்காரை
13L/31R 10 3 கருங்காரை
13R/31L 14 4 திண்காரை
உலங்கு களங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
ft m
H1 60 18 கருங்காரை
H2 60 18 கருங்காரை
H3 60 18 கருங்காரை
H4 60 18 கருங்காரை
புள்ளிவிவரங்கள் (2010)
வானூர்தி இயக்கம் (ACI)[2] 399
பயணிகள்(ACI)[2] 46
மூலம்: கூட்டமைப்பு வான்பயண நிருவாகம்[3]
நியூயார்க் நகர வரைபடத்தில் ஜேஎஃப்கே (1), லாகார்டியா (2) மற்றும் நியூவர்க் (3) வானூர்திநிலையங்கள்

மேற்கோள்கள்

  1. Port Authority of New York and New Jersey(2004-11-30). "Governor Pataki and Mayor Bloomberg Announce Closing of Multi-Billion Dollar Agreement to Extend Airport Leases". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-08-08. “The Port Authority has operated JFK and LaGuardia for more than 55 years. The original 50-year lease [with the City of New York] was signed in 1947 and extended to 2015 under an agreement struck in 1965.”
  2. 2010 North American Final Rankings. Airports Council International. May 28, 2011.
  3. FAA Airport Master Record for JFK (Form 5010 PDF). Federal Aviation Administration. August 27, 2009.
  4. Bureau of Transportation Statistics, U.S. Department of Transportation (2006). "U.S. International Travel and Transportation Trends, BTS02-03" (PDF). பார்த்த நாள் 2008-06-15.
  5. Bureau of Transportation Statistics, U.S. Department of Transportation (2004). "America's Freight Transportation Gateways" (PDF). மூல முகவரியிலிருந்து 2006-09-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-02-18.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.