ஜான் ஆபிரகாம்

இது ஜான் ஆபிரகாம் என்ற திரைப்பட இயக்குநரைப் பற்றியது. இதே பெயருடைய நடிகரைப் பற்றிய கட்டுரை இங்கு உள்ளது.

ஜான் ஆபிரஹாம்
பிறப்புஆகஸ்ட் 11, 1937
குட்டநாடு, கேரளா, இந்தியா
இறப்புமே 31, 1987
கோழிக்கோடு
பணிதிரைப்பட இயக்குநர்

ஜான் ஆபிரகாம் (John Abraham) (ஆகஸ்ட் 11, 1937 - மே 31, 1987) கேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ரித்விக் கடக்கிடம் திரைக்கலையினை பயின்றவர்.

ஒடேஸா இயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர். திரைப்பட ஆர்வலர்கள் மூலம் திரைப்படங்களை தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற கொள்கையோடு துவக்கப்பட்டது ஒடேஸா இயக்கம்.

ஜான் கேரளாவில் மிகவும் புகழ் பெற்றவர். அவருடைய தாந்தோன்றித் தனத்தாலும், சக மனிதர்களிடம் கொண்ட அன்பினாலும் மக்களிடம் பெரிதும் அறியப்பட்டவர்.

திரைப்படங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.