சோசலிசக் குடியரசு

சோசலிசக் குடியரசு அல்லது சமதர்மக் குடியரசு ('socialist state அல்லது socialist republic), என்பது சமத்துவ சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்பும் பொருட்டு அரசமைப்புச் சட்டப்படி நடத்தப்படும் ஓர் அரசு ஆகும். ஒரு தனிப்பட்ட நாட்டில் கம்யூனிசப் புரட்சிக்குப் பிறகு அமையும் அரசு, சோசலிசக் குடியரசாக இருக்கும் என கார்ல் மார்க்ஸ் வரையறுக்கிறார். சோசலிசம் அல்லது சமதர்மம் என்ற சொல்லாட்சி, மார்க்சின் காலத்துக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருக்கிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம் அனைவருக்கும் வழங்கும் சமூகத்தை சோசலிச சமூகம் என அழைக்கின்றனர். இதனை லட்சியமாகக் கொண்டு, அதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் குடியரசுகளே சோசலிசக் குடியரசுகளாகும்.

வரலாறு

சோவியத் ஒன்றியம் உலகின் முதல் சோசலிச குடியரசாக இருப்பினும், 1871 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தின் மத்தியில், பிரெஞ்சு நாட்டில் அமைந்த பாரிஸ் கம்யூன் சோசலிச குடியரசுக்கான பண்பு நலன்களைக் கொண்டிருந்தது. இந்த அரசு மே 28, 1871 இல் கலைக்கப்பட்டது. [1]

இன்றைய சோசலிச குடியரசுகள்

  1. சீன மக்கள் குடியரசு
  2. கியூபா குடியரசு
  3. வட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு
  4. வியட்நாம் சமத்து‍வ குடியரசு

ஆகிய நாடுகள் சமகால சோசலிச குடியரசுகளாக அறியப்படுகின்றன.

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.