சைபீரியப் புலி

சைபீரியப் புலி (Siberian tiger; Panthera tigris altaica) என்பது தூர கிழக்கு உரசியப் பகுதியில் சிறிதளவிலும் சிக்கோட் மலைப்பகுதியில் பிரதானமாகவும் காணப்படும் ஒரு புலித் துணையினமாகும். 2005 இல் 331–393 வளர்ந்த புலிகள் அப்பகுதியில் காணப்பட்டன. பாதுகாப்பு செயற்பாடுகளினால் இவற்றின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்திற்கு மேலாக அப்படியே காணப்பட்டன. ஆயினும் 2005 இன் பின் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு உரசியப் புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் காட்டியது.[1] 2015 இல் 100 குட்டிகள் உட்பட, சைபீரியப் புலி எண்ணிக்கை 480–540 என தூர கிழக்கு உரசியப் பகுதியில் வளர்ந்துள்ளது.[2][3]

சைபீரியப் புலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: பூனைக் குடும்பம்
பேரினம்: பூனைப் பேரினம்
இனம்: புலி
துணையினம்: P. tigris altaica
மூவுறுப்புப் பெயர்
Panthera tigris altaica
Temminck, 1884
சைபீரியப் புலிகளின் பரம்பல் (சிவப்பில்)

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.