சேக் அசீனா

சேக் அசீனா வாசிட் (Sheikh Hasina Wazed, வங்காள மொழி: শেখ হাসিনা ওয়াজেদ, பிறப்பு: செப்டம்பர் 28, 1947) என்பவர் வங்காளதேச அரசியல்வாதியும் 2009ஆம் ஆண்டு முதல் இவர் வங்காளதேசத்தின் பிரதமராக இருப்பவரும் ஆவார். இவர் 1996 முதல் 2001 வரையான கால பகுதியிலும் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். மேலும் இவர் வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். 1981 இலிருந்து வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவருகிறார். இவர் வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவர் ஆவார்.

மாண்புமிகு
சேக் அசீனா வாசிட்
শেখ হাসিনা ওয়াজেদ
வங்காளதேசத்தின் 10வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
6 சனவரி 2009
குடியரசுத் தலைவர் இஜூதின் அகமது
சில்லூர் இரகுமான்
அப்துல் அமீது
முன்னவர் பக்குருதின் அகமது (இடைக்காலம்)
பதவியில்
ஜூன் 23, 1996  ஜூலை 15, 2001
குடியரசுத் தலைவர் சகாபுதீன் அகமது
முன்னவர் ஹபிபுர் ரகுமான் (இடைக்காலம்)
பின்வந்தவர் லத்திபுர் ரகுமான் (இடைக்காலம்)
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 28, 1947 (1947-09-28)
கோப்பல்காஞ்ச், பாகிஸ்தான்
அரசியல் கட்சி அவாமி லீக்
சமயம் இஸ்லாம்

2018 தேர்தல்

இவர் 2019 ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார். முன்னதாக 30 திசம்பர் 2018 இல் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் தலைமையிலான பெருங்கூட்டணி வெற்றி பெற்றது.[1]

மேற்கோள்கள்

  1. "வங்கதேச பிரதமராக ஹசீனா மீண்டும் பதவியேற்பு". தினமலர் (7 சனவரி 2019). பார்த்த நாள் 7 சனவரி 2019.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.