சே. வெ. சண்முகம்

சே. வெ. சண்முகம் (பிறப்பு 1933) தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1951 ஆண்டில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்தார். ஆரம்பத்தில் துறைமுகத்தில் பணியாளராகவும் பின்னர் 1961ல் கிடங்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றி 1991ல் ஓய்வுபெற்றார். இவர் மனோகரன் எனும் இதழின் துணையாசிரியராகவும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இலக்கியப் பணி

1949ம் ஆண்டு எழுதத் தொடங்கிய இவரின் ‘வேறு வழி இல்லையா’? எனும் முதல் சிறுகதை மதுரையிலிருந்து வெளியான ‘நேதாஜி’ எனும் வார இதழில் வெளிவந்தது. சிங்கப்பூரில் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்த இவர் சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக் கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மேடைநாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், புதினம், நாடகத் தொடர்கள் என பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தார். இவரது படைப்புகள் பல்வேறுபட்ட இதழ்களிலும் வெளிவந்துள்ள அதேநேரம், வானொலி, தொலைக்காட்சிகளிலும் ஒலி/ஒளிபரப்பாகியுள்ளன.

எழுதியுள்ள நாடங்கள்

  • மாப்பிள்ளை வந்தார்
  • கல்யாணமாம் கல்யாணம்
  • அதுதான் ரகசியம்
  • மீன் குழம்பு
  • நாலு நம்பர்
  • சின்னஞ் சிறுசுகள்
  • குடும்பத்தில் குழப்பங்கள்
  • சிங்கப்பூர் மாப்பிள்ளை
  • கள்ளோ? காவியமோ?
  • காடி புதுசு ரோடு பழசு
  • ஏமாந்தது யார்
  • ராஜ கோபுரம்
  • சிங்கப்பூர் மருமகள்

இந்த நாடகங்களை சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் அரங்கேற்றின.

எழுதியுள்ள நூல்கள்

  • மீன் வாங்கலையோ
  • சிங்கப்பூர் மாப்பிள்ளை
  • இரணியூர் நாகரத்தினத் தேவர்
  • புழத்தோட்டம்
  • சிங்கப்பூர் குழந்தைகள்

பெற்ற விருதுகளும், பரிசில்களும்

  • திரையழகி எனும் சிறுகதைக்கான தமிழ் முரசின் 2ம் பரிசு
  • கள்ளநோட்டு 1955ல் புதுயுகம் நடத்திய போட்டியில் 1ம் பரிசு
  • சிங்கப்பூர் பெர்னாட்சா பட்டம்
  • சிறந்த நாடகராசிரியர் பட்டம்
  • எழுத்துச் சுடர் பட்டம்
  • கலைச்செம்மல் பட்டம்
  • தமிழவேள் விருது

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.