செல்வராசா கஜேந்திரன்
செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendren, பிறப்பு: அக்டோபர் 29, 1974) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
செல்வராசா கஜேந்திரன் நாஉ | |
---|---|
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 29, 1974 |
அரசியல் கட்சி | தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி |
சமயம் | இந்து |
2004 ஆம் ஆண்டில் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளராக தமிழீழ விடுதலைப் புலிகளினால் தெரிவு செய்யப்பட்டார்.[1] 2004 டிசம்பர் முதல் 2010 பெப்ரவரி வரை கஜேந்திரன் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகப் பதவியில் இருந்தார்.
ஈழப்போரில் 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, 2010 தேர்தலில், கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரைத் தமது வேட்பாளர்களாக ததேகூ தெரிவு செய்யாததை அடுத்து[2] இவர்கள் மூவரும் இணைந்து தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 2010 தேர்தலில் போட்டியிட்டனர். ஆனாலும் இக்கூட்டணியைச் சேர்ந்த எவரும் வெற்றி பெறவில்லை.
மேற்கோள்கள்
- டி. பி. எஸ். ஜெயராஜ் (3 ஏப்ரல் 2010). "TAMIL NATIONAL ALLIANCE ENTERS CRITICAL THIRD PHASE -2". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/print/index.php/opinion1/7441.html.
- டி. பி. எஸ். ஜெயராஜ் (17 ஏப்ரல் 2010). "T.N.A. PERFORMS CREDITABLY IN PARLIAMENTARY ELECTIONS". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8325.html.