செப்பலோசை
வெண்பா விற்கான ஓசை செப்பலோசை. செப்பல் என்றால் வினாவிற்கு விடை கூறுதல். வினாவிற்கு விடை கூறுதல் போன்ற ஒசையமைப்பு இதுவே செப்பலோசை எனப்படும். செப்பலோசை மூன்று வகைப்படும்:
௧. ஏந்திசைச் செப்பலோசை ஏந்திசைச் செப்பலோசை எனப்படுவது வெண்சீர் வெண்டளைகள் (காய் முன் நேர்) மட்டுமே கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டு
- யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
- சாந்துணையும் கல்லாத வாறு.[1]
௨. தூங்கிசைச் செப்பலோசை
- தூங்கிசைச் செப்பலோசை எனப்படுவது இயற்சீர் வெண்டளைகள் (மா முன் நிரை மற்றும் விளம் முன் நேர்) மட்டுமே கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டு
- நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
- மறைமொழி காட்டி விடும். [2]
௩. ஒழுகிசைச் செப்பலோசை
- ஒழுகிசைச் செப்பலோசை எனப்படுவது இருவகை வெண்டளைகளும் சேர்ந்து வரும் (இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை).
எடுத்துக்காட்டு
- கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
- நற்றாள் தொழாஅர் எனின் [3]
அடிக்குறிப்பு
- திருக்குறள் 397
- திருக்குறள் 28
- திருக்குறள் 2
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.